விவசாயம் நேற்று இன்று நாளை கட்டுரை

vivasayam katturai in tamil

மனிதனின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான உணவுத்தேவையை நிறைவேற்றும் ஒரு பகுதியாகவே இந்த விவசாயம் காணப்படுகின்றது.

தற்காலங்களில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ஆனது விவசாயத் துறைகளிலும் பல்வேறு வளர்ச்சிகளை ஏற்படுத்தி உள்ளமையை காண முடிகின்றது. அதில் நன்மை தீமை இரண்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

விவசாயம் நேற்று இன்று நாளை கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • விவசாயத்தின் முக்கியத்துவம்
  • பாரம்பரிய விவசாய முறை
  • இன்றைய விவசாயம்
  • இன்றைய விவசாயத்தில் காணப்படும் குறைபாடுகள்
  • முடிவுரை

முன்னுரை

நாம் வாழும் உலகில் பல்வேறு தொழில்கள் காணப்பட்ட போதிலும் மனிதனுக்கு அத்தியாவசியமான உணவினை வழங்கும் இந்த விவசாய தொழில் மேன்மையான ஒன்றாகவே காணப்படுகின்றது.

அதாவது “விவசாயி சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கால் வைக்க முடியும்” என்பது மறக்க முடியாத உண்மையாகவே உள்ளது.

இன்று விவசாயம் என்பது நாட்டின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் பிரதான காரணி ஒன்றாகவும் காணப்படுகின்றது.

விவசாயத்தின் முக்கியத்துவம்

இந்த உலகில் மனிதன் உயிர் வாழும் வரை விவசாயமும் உயிர் வாழ்ந்து கொண்டே இருக்கும் ஏனெனில் மனிதனுக்கு உணவு தேவை இருக்கும் வரை இந்த விவசாயமும் நடைபெற்றுக் கொண்டே இருக்கும்.

அவ்வாறு விவசாயம் அழிந்து போனால் மனிதன் பசி, பட்டிணி, பஞ்சம் போன்றவற்றினால் அழிந்து போய் விடுவான் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

ஆகவே தற்காலத்தில் அதிகரித்து வரும் சனத்தொகைக்கு ஏற்றாற் போல் இந்த விவசாயமும் பெருக வேண்டிய தேவை உள்ளது அதன் முக்கியத்துவத்தையே எடுத்துக்காட்டுகின்றது.

பாரம்பரிய விவசாய முறை

இது இயற்கை விவசாயம் எனவும் அழைக்கப்படுகின்றது. அதாவது பண்டைக்காலம் எமது மூதாதையர்கள் மேற்கொண்ட விவசாய முறையையே இது குறிப்பிடுகின்றது.

அதாவது செயற்கை உரம், பூச்சி நாசினிகள் போன்ற நச்சுப்பதார்த்தங்கள் எதுவும் அல்லாமல் கால்நடை கழிவுகள், தாவர இலைக் கழிவுகள் போன்றவற்றினை பயன்படுத்தி விவசாய பயிர்களுக்கு உரமூட்டும் ஓர் பயிற்ச்செய்கையாகவே இது காணப்பட்டது.

இதன் மூலம் மக்களுக்கு சுத்தமான, நச்சுத்தன்மை அற்ற உணவுகள் கிடைக்கப்பெற்றதோடு அவர்களுடைய ஆரோக்கியமும் பாதுகாக்கப்பட்டது.

இன்றைய விவசாய முறை

தற்காலத்தில் விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் வளர்ச்சி அடைந்தமையினால் பாரம்பரிய விவசாய முறைகளினைக் கைகொண்ட மக்கள் அதனை கைவிட்டு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விவசாயம் செய்யும் முறைகளை கைக்கொண்டுள்ளனர்.

அதாவது இரசாயன பதார்த்தங்களை உரமாக பயிர்களுக்கு இடுதல், நிலங்களை பண்படுத்த இயந்திரங்களை உபயோகித்தல், விதைகளில் கூட மரபணு விதைகளை பயன்படுத்தல் போன்ற செயற்பாடுகள் தற்கால விவசாயத்தில் இடம் பெறுவதனைக் காணலாம்.

இன்றைய விவசாயத்தில் காணப்படும் குறைபாடுகள்

இன்று விவசாயம் என்பது ஒரு லாபமிட்டும் தொழிலாக பார்க்கப்படுகின்றதே அன்றி அதில் மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கின்றது என்பதை பார்க்க மறுக்கப்படுகின்றது.

இன்று மனிதன் பல்வேறு நோய்களுக்கு ஆளாவதற்கு முக்கிய காரணமாக இந்த விவசாய முறைகளில் பயன்படுத்தப்படும் கிருமிநாசினிகளே காரணமாக அமைந்து விடுகின்றன.

முக்கியமாக நாம் இன்று உட்கொள்ளும் ஒவ்வொரு உணவும் ஏதோ ஒரு வகையில் நஞ்சுப்பதார்த்தங்களின் கலவையாகவே காணப்படுகின்றது.

முடிவுரை

இன்று நம் இளம்  சந்ததியினர்கள் சிறுவயதிலேயே பல நோய்களுக்கு ஆளாகுவதற்கு முக்கிய காரணமாக இன்றைய விவசாய முறையே காணப்படுகின்றது.

ஆகவே “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற விடயத்தை கவனத்தில் கொண்டு எமது மூதாதையர் எமக்கு அளித்த மிகப் பெரும் அருட்கொடையான அந்த விவசாயத்தினை முறையான வகையில் சூழலுக்கும், எமக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் செய்வதே அதற்குரிய கௌரவத்தை அளிப்பதாகும்.

You May Also Like:

விவசாயம் பற்றிய கட்டுரை

நீரின்றி அமையாது உலகு கட்டுரை