விடுதலைப் போரில் சுபாஷ் சந்திரபோஸ் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- சுபாஷ் சந்திரபோஸ் இளமைக்காலம்
- இந்திய விடுதலைப் போரில் சுபாஷ் சந்திரபோஸ் பங்கு
- சுபாஷ் சந்திரபோஸ்ன் இறப்பு
- அரசினால் வழங்கப்பட்ட கௌரவம்
- முடிவுரை
முன்னுரை
இந்திய நாட்டை ஆக்கிரமித்திருந்து அந்நியரான வெள்ளையர்களை நாட்டை விட்டு விலக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட விடுதலைப்போரில் பங்குபற்றியவர்களுள் சுபாஷ் சந்திரபோஸ் முதன்மையான இடத்தை வகிக்கின்றார்.
“உண்மையும் நேர்மையும் உள்ளவனாக இருந்தால் அஞ்சா நெஞ்சம் கொண்டவனாக வாழலாம்” என முழங்கிய இவர் இன்றளவும் இந்திய மக்களால் விடுதலைப் போராட்ட தியாகிகளுள் ஒருவராகப் போற்றப்படுகின்றார். இவர் இந்திய திருநாட்டிற்கு ஆற்றிய அரிய சேவைகளைப் பற்றி அனைவரும் அறிந்திருப்பது அவசியமாகும்.
சுபாஷ் சந்திரபோஸின் இளமைக் காலம்
பல்வகைப்பட்ட மக்களின் மனங்களில் நீங்கா இடம்பெற்ற இவர், இந்தியாவிலுள்ள ஒரிசா மாநிலத்தில் கட்டாக் எனும் இடத்தில் 1897ம் ஆண்டு ஜனவரி மாதம் 23ம் திகதி ஜானகிநாத்போஸ் மற்றும் பிரபாவதி தேவி ஆகியோருக்கு மகனாக பிறந்தார்.
நேதாஜி என அழைக்கப்பட்ட இவர், சிறுவயது முதலே கல்வியில் சிறந்து விளங்கினார். தனது ஆரம்பக் கல்வியை பாப்டிஸ்ட் மிசன் பாடசாலையிலும், உயர்கல்வியை கொல்கத்தா ரேவன்சா கல்லூரியிலும் கற்றுத் தேர்ந்தார்.
இங்கிலாந்திற்கு சென்று இந்திய மக்கள் சேவைக்கான ஐ.சி.எஸ் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். இவர் தனது கல்லூரிப்பருவத்திலேயே ஆங்கிலேயர் இந்திய மாணவர்கள் மீது காட்டும் இனவெறியை கண்டு கோபமுற்று அதனை எதிர்க்கும் போர்க்குணம் மிக்கவராகவே விளங்கினார்.
ஆங்கிலேயரின் கீழ் அடிமையாக வேலை செய்யக் கூடாதென முடிவெடுத்த இவர் இங்கிலாந்தில் வசிக்கும் போது ஆங்கிலேயர் அளித்த பதவியை இராஜனாமா செய்து இந்தியா திரும்பினார்.
இந்திய விடுதலைப்போரில் சுபாஷ் சந்திரபோஸ்ன் பங்கு
இந்தியா திரும்பிய சுபாஷ் சந்திரபோஸ் வெள்ளையர்களிற்கு எதிரான போரில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தினார். விரிவுரையாளராக பணியாற்றிய போது அங்குள்ள மாணவர்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டும் வண்ணம் பல்வேறு சொற்பொழிவுகளை ஆற்றினார்.
வெறுமனே அகிம்சை போராட்டத்தினால் மட்டும் சுதந்திரத்தை பெற்று விட முடியாது என நம்பிய சுபாஷ் சந்திரபோஸ், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போரட்டத்திற்கு மக்களை ஒன்று திரட்டுவதில் ஈடுபட்டார்.
வெளிநாடுகளில் இருந்த ஆயிரக்கணக்கான போர்க் கைதிகளை சேர்த்து தேசிய இராணுவத்தை உருவாக்கினார். இதனால் ஆங்கிலேயர் இவரை சிறையில் அடைத்தனர். ஹிட்லர் உட்பட பல உலகத் தலைவர்களுடன் இந்திய விடுதலைக்கான பல்வேறு கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.
சுபாஷ் சந்திரபோஸின் இறப்பு
இவரின் மரணம் இன்றுவரை மர்மமாகவே உள்ளது. 1945ம் ஆண்டு ஜப்பானிய செய்தி நிறுவனம் வானூர்தி விபத்தில் இறந்து விட்டதாகக் குறிப்பிட்ட போதிலும் அதில் காணப்பட்ட நம்பகத் தன்மை காரணமாக பல இந்தியர்கள் அதை ஏற்க மறுத்தனர்.
சுகந்திர போராட்டத்தில் பெரும் பங்காற்றிய சுபாஷ் சந்திரபோஸ் 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் மறைவதற்கு முன் இந்திய இராணுவத்திற்கு ஆற்றிய இறுதி உரையில் “இந்தியாவை நிரந்தரமாக அடிமைத் தளையில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை” என குறிப்பிட்டார்.
அரசினால் வழங்கப்பட்ட கௌரவம்
இந்தியர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பெற்ற நேதாஜி சுபாஷ் சந்திபோஸ் அவர்கள் சுகந்திரப் போரட்டத்தில் பெரும் பங்கு வகித்தவராக இன்றளவும் போற்றப்படுகின்றார். 1992ல் இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவை வழங்கி வைத்தது இந்திய அரசு.
முடிவுரை
இந்தியாவிற்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்த மகான்களுள் ஒருவரான சுபாஷ் சந்திரபோஸைப் பற்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும்.
இவரது தியாகங்களை நினைவிற்கொண்டு இவரது வீரச்செயல்களை எதிர்கால சந்ததியினருக்கும் தெரியப்படுத்தி அவரது நினைவு தினத்தை போற்றுவோமாக.
You May Also Like: