விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு கட்டுரை

viduthalai porattathil pengalin pangu katturai

நாம் இன்று மகிழ்ச்சியாக வாழ்கின்றோம் என்றால் அதற்கு எமது முன்னோர்களின் சுதந்திர போராட்டத்துக்கான கடின உழைப்பே காரணமாகும். அதாவது விடுதலைப் போராட்டத்தில் ஆண்கள் எந்த அளவு பங்களித்திருக்கின்றார்களோ அதே போன்று, இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் பெண்களும் பங்காற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • இராணி வேலுநாச்சியார்
  • அஞ்சலை அம்மாள்
  • உஷா மேத்தா
  • அம்புஜத்தம்மாள்
  • துர்க்காவதி தேவி
  • பீனா தாஸ்
  • முடிவுரை

முன்னுரை

இந்தியாவின் விடுதலைப் போராட்டங்களில் ஆண்களைப் போன்றே பல பெண்களும் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில் அகிம்சை வழியில் மட்டுமின்றி, ஆயுதமேந்தியும் போராடி பல பெண்கள் கொடுமைகளையும், தண்டனைகளையும் பெற்றுக் கொண்டதோடு உயிர்த்தியாகமும் செய்துள்ளனர்.

இராணி வேலுநாச்சியார்

கி.பி 1780 – 1783 வரையான காலப்பகுதியில், சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதத் தேவரின் மனைவியான வேலுநாச்சியார், ஆங்கிலேயப் படையானது காளையர் கோவிலை முற்றுகை இட்டபோது வீரத்தோடு எதிர்த்து நின்றார்.

இதனால் ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக போராடிய முதல் இந்தியப் பெண்ணாக வேலுநாச்சியார் காணப்படுகின்றார்.

அஞ்சலை அம்மாள்

இந்தியாவில் கடலூர் எனும் இடத்தில் 1990 ஆம் ஆண்டு பிறந்த இவர், 1921 ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்திற்காக தன்னுடைய வாழ்வை அர்ப்பணிக்க தொடங்கினார்.

நீலன் சிலையை அகற்றும் போராட்டம், உப்புக் காய்ச்சும் போராட்டம், மறியல் போராட்டம், தனியார் அறப்போராட்டம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் மற்றும் ஒத்துழையாமை இயக்கம் போன்றவற்றில் கலந்து கொண்டார்.

காந்தியடிகள் இவரை தென்னாட்டின் ஜான்சி ராணி என்று அழைக்கும் அளவுக்கு விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

உஷா மேத்தா

1928 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் பிறந்தவராவார். அகிம்சை வழியில் போராட இவர் முன்வந்த போது இவருடைய வயது எட்டு ஆகும். அதாவது அச்சிறு வயதிலேயே இவர் செய்மன் கமிஷனை எதிர்த்து நடந்த போராட்டத்தில் பங்கெடுத்துள்ளார்.

மேலும் “காங்கிரஸ் ரேடியோ” என்ற ரகசிய வானொலியை தன்னுடைய நண்பர்கள் சிலருடன் சேர்ந்து ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் போது ஒளிபரப்பத் தொடங்கினார். இதற்காக சிறைக்கும் சென்றுள்ளமையைக் காணலாம்.

அம்புஜத்தம்மாள்

1899 ஆம் ஆண்டு வசதியான ஒரு குடும்பத்தில் பெண்கள் உரிமைக்கு குரல் கொடுத்தவர்களுள் முக்கியமான ஒருவராக இவர் கருதப்படுகின்றார். மகாகவி பாரதியின் பாடல்களை பாடி விடுதலை உணர்வை மக்களுக்கு ஊட்டினார்.

காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள் என்று செல்லமாக அழைக்கப்பட்டவரே இந்த அம்புஜத்தம்மாள் ஆவார். இவர் “சீனிவாச காந்தி நிலையம்” என்ற தொண்டு நிறுவனத்தை நிறுவி அதன் மூலம் மக்களுக்கு தொண்டாற்றியுள்ளமையும் காணலாம்.

துர்காவதி தேவி

1907 ஆம் ஆண்டு வங்கத்தில் பிறந்தார். இவர் ஆயுதம் ஏந்தி விடுதலைப் போராட்டத்தில் போராடிய ஒருவராவார்.

1928 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அதிகாரியான ஜான் பி.சண்டர்ஸைக் கொன்றதன் பின்னர் பக்த் சிங் மற்றும் ராஜகுரு ஆகியோர் காவல் துறையிடம் இருந்து தப்பிக்க உதவியுள்ளார்.

மேலும் ஹெய்லி பிரபுவை கொல்ல முயற்சித்தமையினால் மூன்று ஆண்டு சிறைத் தண்டனையை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

பீனா தாஸ்

கொல்கத்தாவில் 1911 ஆம் ஆண்டு பிறந்த இவர் 1932 ஆம் ஆண்டு கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழா ஒன்றின் போது ஸ்டான்லி ஜாக்சன் என்ற ஆங்கிலேய ஆளுனரை சுட்டுக்கொல்ல முயன்றார்.

இதனால் சிறைக்குச் சென்ற இவர் 1939ஆம் ஆண்டு விடுதலையாகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்காற்றியுள்ளார் என்பதனைக் காணலாம்.

முடிவுரை

இந்தியாவின் சுதந்திரத்தைக் கோரி விடுதலைப் போராட்டங்களில் வீரமிக்க மங்கையர்களும் கலந்து கொண்டுள்ளார். அவர்களுள் முக்கியமான சிலைரை மேலே அவதானித்தோம்.

இன்னும் சுனிதி சௌந்திரி, கமலா தேவி, அருணா ஆசிப் அலி, கனகலதா பரூவா, தில்லையாடி வள்ளியம்மை, முத்துலட்சுமி, அன்னிபெசன்ட் அம்மையார் மற்றும் அக்கம்மா செரியன் போன்றோர்களையும் குறிப்பிடலாம்.

எனவே நாம் எம்முடைய சுதந்திரத்துக்காக போராடிய ஒவ்வொரு பெண்களையும் மதிக்க கடமைப்பட்டுள்ளோம்.

You May Also Like:

விடுதலைப் போரில் சுபாஷ் சந்திரபோஸ் கட்டுரை

தில்லையாடி வள்ளியம்மை கட்டுரை