வாழ்வின் லட்சியம் கட்டுரை

வாழ்வின் லட்சியம் கட்டுரை

இந்த உலகில் வாழ்கின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதோ ஒரு வகையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும், ஏதோ ஒரு லட்சியம் அல்லது குறிக்கோளை நோக்கி பயணிக்கும் மனப்பான்மையுமே காணப்படுகின்றது.

வாழ்வின் லட்சியம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • இலட்சியம் என்றால் என்ன
  • இலட்சியத்தை கண்டுபிடித்தல்
  • இலட்சியத்தில் உறுதியாக நிற்றல்
  • வாழ்வின் லட்சியத்தை அடைந்து கொள்ளுதல்
  • முடிவுரை

முன்னுரை

மனித சமூகத்தில் பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதோ ஒரு இலட்சியம் இருந்தே தீரும் அந்த வகையில் அவரவர் வாழ்வின் இலட்சியம் என்ன என்பதனை கண்டுபிடிக்க வேண்டியது அவரவர் கடமையாகும்.

இலட்சியம் என்றால் என்ன

சமூகத்தில் ஒரு உயர்ந்த இடத்தினை வகிக்க வேண்டும் என ஒரு குறிக்கோளை நோக்கி பயணிக்கும் போது, அந்த குறிக்கோளே இலட்சியம் எனப்படுகின்றது.

அதாவது சிறுவயதில் இருந்தே எனக்கு வைத்தியராக வரவேண்டும் அல்லது ஒரு பொருளியலாளராக வரவேண்டும் அல்லது ஒரு பெரிய வணிகராக வரவேண்டும் என்ற ஆசை, உணர்வு அதற்கான தேடல், அதற்கான முயற்சி காணப்படுமாயின் அதுவே எமது வாழ்வின் இலட்சியமாக காணப்படும்.

இலட்சியத்தை கண்டுபிடித்தல்

எமது வாழ்வில் சிறுவயது தொடக்கம் தற்போது வரை பல்வேறு மாற்றங்களும், பல்வேறு திருப்புமுனைகளும் இடம்பெற்றிருக்கும். ஆகையினால் எமது லட்சியங்களிலும் சில மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படும்.

கால சூழ்நிலையே இலட்சியத்தை தீர்மானிப்பதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். எனவே எமது சரியான இலட்சியத்தினை நாம் கண்டு அறிந்து, அதற்கான தேடலிலும், முயற்சியிலும் ஈடுபடுவது அவசியமானதாகும்.

இலட்சியத்தில் உறுதியாக நிற்றல்

மனிதர்களுடைய வாழ்வானது ஆயிரம் குழப்பங்களும், பிரச்சினைகளும், ஏமாற்றங்களும் நிறைந்த ஒன்றாகவே காணப்படும். ஆகையினால் நான் ஓர் இலட்சியத்தை நோக்கி பயணிக்கும் போது அதற்கான தடைகள் வந்தே தீரும்.

தடைகள் என்பது பொருளாதார ரீதியானதாகவோ, உள்ளம் சார்ந்ததாகவோ, உடல் சார்ந்ததாகவோ இருக்கலாம். ஆனால் நான் எதற்காகவும் எனது இலட்சியத்தை விட்டுக் கொடுக்காமல் இலட்சியத்தில் உறுதியாக நின்று அதற்காக போராட வேண்டும்.

வாழ்வின் இலட்சியத்தை அடைந்து கொள்ளுதல்

“விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி” இன்று வாசகங்களுக்கு அமைய எனது வாழ்வில் இலட்சியத்தை அடைந்து கொள்ள வேண்டுமாயின் இத்தனை முறை விழுந்தாலும் அதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மீண்டும் மீண்டும் முயற்சி செய்து எனது இலட்சியத்தை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக நான் வைத்தியராக வரவேண்டும் என ஆசைப்பட்டால் அதற்காக அயராது பயின்று, தடைகளை தகர்த்து, பல்கலைக்கழகம் சென்று, பட்டம் பெற்று வைத்தியராகும் வரை முயற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

எனவே மீண்டும் மீண்டும் முயற்சி செய்யுங்கள் நிச்சயமாக வாழ்வின் லட்சியத்தை என்றேனும் ஒரு நாள் அடைந்து கொள்ள முடியும்.

முடிவுரை

சிறு வயதிலேயே ஒவ்வொருவருக்கும் ஒரு இலட்சியம் உருவாகிவிடும். அந்த இலட்சியத்தை நோக்கி பயணிக்கும் பாதையானது கரடு முரடானதாகவும், கற்கள், முட்கள் நிறைந்ததாகவும் காணப்படினும் அவற்றினை சகித்துக் கொண்டு இலட்சியத்தை நோக்கி பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

அவ்வாறாக பயணித்தால் மாத்திரமே என் வாழ்வின் இலட்சியத்தை அடைந்து கொள்ளாம்.

You May Also Like:

வாசிப்பு பற்றிய கட்டுரை

நுகர்வோர் மன்றம் கட்டுரை