மனிதர்கள் மேன்மையான நிலையை அடைய உதவும் பல விடயங்களை உலகிற்கு இந்திய நாடு அளித்துள்ளது. அப்படி உலகிற்கு இந்தியா அளித்த 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பாரம்பரியம் கொண்ட ஒரு கலை தான் யோகா ஆகும்.
யோகா என்பதே, தன்னுள் எப்படி வாழ வேண்டுமெனும் வாழ்க்கையின் சாரத்தைப் பொதிந்து வைத்திருக்கும் அறிவியல் ஆகும். இலக்கின்றி அலையும் மானுட வாழ்வில் இலக்கை நிர்ணயித்து நாம் சேர வேண்டிய இலக்கில் கொண்டு போய்ச் சேர்க்க யோகா ஒரு சிறந்த ஆன்மீக மார்க்கமாகும்.
யோகா என்றால் என்ன
இந்த யோகா என்ற சொல் வடமொழி அல்லது சமஸ்கிருத வேர்ச்சொல்லான யுஜ் என்னும் சொல்லில் இருந்து வந்தது ஆகும்.
யோகா என்னும் சொல்லுக்கு, தனிப்பட்டவரின் நனவுநிலை அல்லது ஆன்மா, பிரபஞ்ச சக்தியுடன் இணைதல் என்று அர்த்தம் கொள்ளப்படுகின்றது.
மேலும் யோகா என்பதற்கு இணைப்பது, சேர்ப்பது, பிணைப்பது, அதாவது ஒருவரின் கவனத்தை ஒருமுகப்படுத்துவது என்றும் அர்த்தம் கொள்ளப்படுகின்றது.
இவைதவிர சங்கமம் என்ற பொருளும் ஒன்று கலத்தல் என்ற பொருளும் யோகாவிற்கு உண்டு.
பதஞ்சலி முனிவர் யோகாவை “சித்தா விருத்தி நிரோதா” அல்லது மன ஏற்ற இறக்கத்தை நிறுத்துதல்” என்று வரையறுக்கிறார்.
யோகாவால் ஏற்படும் நன்மைகள்
யோகா என்பது பல கோணங்களில் உடலை சுருக்கி செய்யும் பயிற்சி என்பதால் இதன் மூலம் மனதையும் உடலையும் இணைத்து ஆரோக்கியத்தை பெற முடியும்.
தினமும் காலையில் யோகாசனங்கள் செய்வதால் நம்முடைய சிந்திக்கும் ஆற்றல் மேம்படுகிறது.
இன்று மிகப் பெரிய நோய்களில் ஒன்று மன அழுத்தம். மிகக்குறைந்த நேரத்தில் அதிகமான பணிச்சுமையை ஏற்கும் போதும், கவலைகள், இழப்புக்கள் ஏற்படும் போதும் மன அழுத்தம் ஏற்படுகிறது.
எனவே, தினமும் யோகா செய்வதால் நம்முடைய மன அழுத்தம் மற்றும் மனம் சம்பந்தமான அத்தனை குறைபாடுகளையும் நீக்கி மன அமைதியை தருகின்றது. ஒரு மனிதர் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும் போது மட்டுமே அவரது புத்திசாலித்தனம் சிறந்த முறையில் செயல்படும்.
யோகாவின் மூலம் தசைகள் தளர்வடைவதால் முதுகு வலி, கால் வலி போன்ற வலிகளில் இருந்து விடுபடலாம்.
தினமும் யோகா செய்வது சிறந்த ஒரு மூச்சு பயிற்சியாகவும் இருக்கும். இதனால் இதயத்திற்கு தேவையான இரத்த ஓட்டம் சீராக அமையும். யோகா பயிற்சி மூலம் உடலில் ரத்த ஓட்டம் சீராக அமைவதனால் உடலில் வாயு கோளாறுகள் ஏற்படுவது தடுக்கப்பட்டு இரத்தத்தில் தேங்கியிருக்கும் நச்சுகள் சிறிது சிறிதாக நீங்குகின்றன.
தினமும் யோகா செய்பவர்களுக்கு நரம்பு மண்டலங்கள் பலம் பெறுகின்றன. இதனால் நமது மூளையின் செயல்திறன் அதிகரிக்கிறது.
உடல் எடையை குறைப்பதுடன் யோகா அழகான உடல் அமைப்பை பெறவும் உதவுகின்றது.
கர்ப்பமான பெண்கள் முறையான யோகா மேற்கொள்ளும் போது கர்ப்பக் காலத்தில் ஏற்படும் இரத்த சோகை, முதுகு வலி, கால் வலி, செரிமானம் கெடுதல் போன்றவை சீரடையும்.
நவுக்காசனா (Naukasana), உஷ்த்ராசனா (Ushtrasana), க்ரஞ்சஸ் (Crunches) போன்ற யோகாசனங்களை தினமும் செய்வதோடு, சீரான உணவு முறையையும் பின்பற்றுவதன் மூலம் ஆரோக்கியமான உடலை பெறலாம்.
இன்றைய உலகில் ஒருவரது ஆழமான ஆற்றல்களை கண்டுணர்ந்து காக்கும் ஒரு வழியாக யோகா உள்ளமை சிறப்புக்குரியதாகும்.
You May Also Like: