கரி, வேழம் என்று சங்க காலத்திலும் ஆணை என்று எம் முன்னோர்களாலும் அழைக்கப்பட்ட யானையை இன்று உலகில் வாழும் மிகப்பெரிய விலங்காகும்.
பொதுவாக தேனீக்களை யானைகளுக்கு பிடிக்காது என்று ஆய்வுகள் கூறுகின்றன. யானைகளுக்கு சிறந்த ஞாபக சக்தி உண்டு.
யானை பற்றி சில வரிகள்
யானை நான்கு கால்கள் உடைய மிகப்பெரிய ஒரு காட்டு விலங்கு ஆகும்.
இது பாலூட்டி வகையை சேர்ந்த தாவர உண்ணி விலங்காகும்.
யானை ஒரு வலிமையான மற்றும் புத்திசாலியான விலங்காகும்.
யானைகளுக்கு கண் இமைகள் உண்டு.
ஆபிரிக்க யானைகள் தான் தற்போது உலகில் மிகப்பெரிய விலங்காகும்.
யானையின் காதுகள் மடல் போன்று பெரியதாக இருக்கும்.
யானைகளின் கர்ப்ப காலம் 22 மாதங்கள் ஆகும். நான்கு வருடங்களுக்கு ஒருமுறை குட்டி போடும்.
யானையின் தந்தம் ஒருமுறை உடைந்தால் மீண்டும் வளராது.
யானை தனது தும்பிக்கை மூலமே உணவை உட்கொள்கின்றது மற்றும் நீர் பருகின்றது.
யானைகளில் ஆசிய யானைகள், ஆபிரிக்க காட்டு யானைகள், ஆபிரிக்க புதர்வெளி யானைகள் எனும் மூன்று சிற்றினங்கள் இன்று உள்ளன.
யானையின் சராசரியான ஆயுட்காலம் எழுபது ஆண்டுகள் ஆகும்.
செப்டம்பர் 2ம் திகதி யானைகள் தினம் கொண்டாடப்படுகின்றது.
யானை எழுப்பும் ஒலியை பிளிறுதல் என்பர்.
ஆண் யானையை களிறு என்றும் பெண் யானையை பிடி என்றும் யானையின் குட்டியை கன்று, குட்டியானை என்றும் கூறுவார்கள்.
யானை பிறக்கும் போது சராசரியாக 200 பவுண்டுகள் எடை இருக்கும்.
பெண் ஆசிய யானைகளுக்கு தந்தம் இருக்காது.
இன்று அருகி வரும் விலங்குகளின் பட்டியலில் யானையின் பெயரும் உண்டு.
You May Also Like: