மேலாண்மையானது வாழ்வில் எல்லாத் துறைகளிலும் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. மற்றும் எல்லா இடங்களிலும் ஒரு தனித்துவமான மற்றும் மேலாதிக்க செயல்பாடுகளாக காணப்படுகின்றது.
இன்றைய வணிகச் சூழல் உலகளாவிய போட்டி, துல்லியமான வளங்கள், விரைவான தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும், குறைந்தபட்ச கட்டமைப்புகள் ஆகியவை சமூகப் பொறுப்பிற்கான அதிகரித்து வரும் தேவையாகும். இதனால் மேலாண்மை என்பது அனைத்துத் துறைகளிலும் மிகவும் அவசியமான ஒன்றாக விளங்குகின்றது.
மேலாண்மையானது வியாபாரத்தை மேலாண்மை செய்கின்றது, மேலாளரை மேலாண்மை செய்கின்றது. மேலும் பணியாளர்களையும், பணியினையும் மேலாண்மை செய்கின்றது.
அனைத்து மேலாண்மை நடவடிக்கைகளின் மிக முக்கியமான குறிக்கோள் நிறுவனத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதாகும். இந்த குறிக்கோள்கள் பொருளாதார, சமூகம் மற்றும், மனிதனாக இருக்கலாம்.
மேலாண்மை என்றால் என்ன
மேலாண்மை “முகாமைத்துவம்” என்றும் அழைக்கப்படுகின்றது. மேலாண்மை என்பதற்குப் பொதுவானதோர் வரைவிலக்கணம் என்பது கிடையாது. தமது அறிவுக்கு ஏற்ப பலரும் பலவாறு கூறியுள்ளனர்.
அந்தவகையில், மேரி பார்க்கர் ஃபாலட் என்பவர் “ஊழியர்களைக் கொண்டு கருமங்கள் ஆற்றுவிப்பது தொடர்பான செயற்பாடு” மேலாண்மை என வரையறுத்துள்ளார்.
பொதுவாக நோக்கின் மேலாண்மை என்பது பன்ணோக்கு செயல் ஆகும். மேலும் வேலையை முடிப்பது மேலாண்மை என சுருக்கமாக வரையறுக்கலாம்.
மேலாண்மையின் முக்கிய செயல்பாடுகள்
திட்டமிடல், ஒழுங்கமைத்தல், பணியமர்த்தல், இயக்குவித்தல், செயல் ஊக்கமளித்தல், கட்டுப்படுத்தல், ஒருங்கிணைத்தல் ஆகியவை மேலாண்மையின் முக்கிய செயல்பாடுகள் ஆகும்.
திட்டமிடல் – திட்டமிடலானது மேலாண்மையின் முதன்மைச் செயற்பாடாகும். திட்டமிடுதல் இல்லாமல் எந்த ஒரு காரியமும் செய்ய முடியாது. திட்டமிடல் என்பது முன்கூட்டியே முடிவெடுப்பதை குறிக்கின்றது. மேலும் திட்டமிடல் என்பது வருங்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு ஆக்கபூர்வமான மதிப்பீடு ஆகும்.
ஒழுங்கமைத்தல் – ஒரு அமைப்பின் உறுப்பினர்களுக்கு இடையில் இணக்கமான உறவை ஏற்படுத்தும் ஒரு வகை பின்னல் போன்ற அமைப்பை அவர்களது உறவுகளுக்கு இடையே ஏற்படுத்தும் செயல்முறையே ஒழுங்கமைத்தலாகும்.
பணியமர்த்தல் – பொருத்தமான நபர்களைத் தேர்ந்தெடுப்பது, தேவையான நபர்களுக்கு பயிற்சி அளிப்பது, சிறந்த நபர்களுக்கு பதவி உயர்வு அளிப்பது, பழைய நபர்களுக்கு ஓய்வு அளிப்பது, அனைத்து நபர்களின் செயல் திறன்களையும் மதிப்பீடு செய்வது மற்றும், பணியாளர்களுக்கு போதுமான ஊதியம் வழங்குவது ஆகியன பணியமர்த்தல் பணிகளின் முக்கியமானவையாகும்.
இயக்குவித்தல் – தற்போதைய இலக்குகளைச் சாதிக்கும் பொருட்டு தொடர்ச்சியான அடிப்படையில் செயலூக்கமளித்தல், முன்னணியில் இருத்தல், வழிகாட்டுதல் மற்றும், மேல் நிலைப் பணியாளர்களை இயக்குவதனை குறிக்கின்றது.
கட்டுப்பாடு காத்தல் – ஊக்க ஊதிய உயர்வு மற்றும், பதவி உயர்வு அளிக்கும் முடிவுகளை எடுப்பதற்கும், பணியாளர்களின் செயல் திறனை மதிப்பிடுவதற்கும் கட்டுப்படுத்தல் செயற்பாடு பயன்படுகின்றது.
ஒருங்கிணைத்தல் – அனைத்து நபர்களுடைய செயல்களின் ஒத்திசைவு, பல்வேறு திறன்கள் உள்ள தனி நபர்கள், நிறுவனத்தில் பணிபுரிதல் ஆகியன பொது நோக்கங்களில் மிகவும் வெற்றிகரமான சாதனைகளைப் படைக்க வழிவகுத்துச் செல்லும்.
செயல் ஊக்கம் அளித்தல் – செயலூக்கமளித்தல் மூலமே நிறுவனத்தின் நோக்கங்களை அடைய முடியும். ஒரு பணியை விரைவாக செய்து முடிப்பதையும், பணியாளர்களின் பணியின் மீதான விருப்பத்தை வளர்ப்பதையும் செயல் ஊக்கம் அளித்தல் என்பர்.
You May Also Like: