இவ்வுலகத்தை காணப்படும் அனைவருமே இறைவனின் பிள்ளைகளே அவர் ஒவ்வொருவருக்கும் தனித்துவமான திறமைகள் காணப்படுகின்றன. ஒருவருடைய குறைகளை காணாது நிறைகளை காண்பது மாமனித இயல்பாகும்.
மாற்றுத்திறனாளிகள் பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- மாற்றுத்திறனாளி என்போர்
- மாற்றுத்திறனாளியின் வகைகள்
- மாற்றுத்திறனை ஏற்படுத்தும் காரணிகள்
- இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளின் நிலை
- எதிர்கொள்ளும் சவால்கள்
- முடிவுரை
முன்னுரை
இயற்கை அன்னையின் படைப்பில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான அழகைக் கொண்டு காணப்படுவன அதைப்போலவே மனித இனமும் ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கென தனிப்பட்ட தோற்றம், குணம், திறமை, மனப்பாங்கு என்பவற்றைக் கொண்டு வேறுபட்டு காணப்படுகின்றனர்.
அனைத்து மனிதர்களும் ஏதோ ஒரு வகையில் குறை உள்ளவர்களாகவே காணப்படுவர். அதில் சிலர் மனதளவில் குறை உள்ளவர்களாகவும், சிலர் உடல் அளவில் குறைவு உள்ளவர்களாகவும் காணப்படுவர்.
அதன் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகள் உடலில் உள்ள குறைகளை துச்சம் என எண்ணி அவர்களுடைய வாழ்வில் பல சாதனைகளை புரிபவர்களாக காணப்படுகின்றனர். இக்கட்டுரைகள் மாற்றுத்திறனாளிகள் பற்றி நோக்குவோம்.
மாற்றுத்திறனாளி என்போர்
மாற்றுத்திறனாளிகள் என்போர் பிறப்பிலிருந்து அல்லது அதன் பின்பு ஒருவருக்கு உடல் உள ஆற்றல்களில் ஏதாவது குறைபாடு உள்ளமையால் முழுமையாகவோ அல்லது பகுதி அளவிலோ வாழ்க்கையின் அத்தியாவசிய செயல்களை செய்வதை உறுதிப்படுத்த முடியாத நிலையே கொண்டோர் ஆவர்.
மாற்றுத்திறனாளியின் வகைகள்
மாற்றுத்திறனின் பண்புகளைப் பொறுத்து மாற்றுத்திறனாளிகள் வகைப்படுத்தப்படுகின்றனர்.
- பார்வையற்றவர்கள்
- பேசுவதற்கு இயலாதவர்கள்
- அவயவம் துண்டிக்கப்பட்டவர்கள்
- உடல் ஊனமுற்றோர்
- காது கேளாதோர்
- மனநிலை பாதிக்கப்பட்டோர்
என மாற்று திறனாளிகள் வகைப்படுத்தப்படுகின்றனர்.
மாற்றுத்திறனை ஏற்படுத்தும் காரணிகள்
மாற்றுத்திறனை ஏற்படுத்தும் காரணிகளாக இயற்கை காரணிகள் மற்றும் மனிதனால் உருவாக்கப்படும் காரணிகள் என்பன செல்வாக்கு செலுத்துகின்றன.
அந்த வகையில், இயற்கை காரணிகளாக பிறப்பிலேயே ஏற்படும் குறைபாடுகளையும், பரம்பரை குறைபாடுகளையும் குறிப்பிடலாம்.
மனிதனால் உருவாக்கப்படும் காரணிகளாக விபத்துக்கள், போதைப்பொருள் பாவனை, சமுதாய முரண்பாடுகள், தவறான வாழ்க்கை நடத்தைக் கோலம், நாடுகளில் இடம்பெறும் யுத்த நடவடிக்கைகள், அணு ஆயுத பரிசோதனைகள், தவறான மருந்து பாவனைகள் என்பதை குறிப்பிடலாம்.
இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளின் நிலை
இந்தியாவில் மட்டும் ஏழு கோடிக்கும் அதிகமானோர் மாற்றுத்திறனாளிகளாக காணப்படுகின்றனர்.
அபிவிருத்தி அடைந்த நாடுகளை விட ஏழை மற்றும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் மாற்றுத் திறனாளிகள் என்போர் கூடுதலான எண்ணிக்கையில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனமும் உலக வங்கியும் இணைந்து தயாரித்த 2011 ஆம் ஆண்டின் மாற்றுத்திறனாளிகளை பற்றிய முதல் உலக ஆய்வு அறிக்கை குறிப்பிடுகின்றது.
ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம் சென்னை கோவளம் முட்டுக்காடு அருகே கிழக்கு கடற்கரை சாலையில் 15 ஏக்கர் பரப்பளவில் மறுவாழ்வு மருத்துவம், மறுவாழ்வு உளவியல், ஊனமுற்றோருக்கான தொழில் பயிற்சி, பேச்சு கேட்டல் மற்றும் தொடர்பு பயிற்சி, சிறப்பு கல்வி போன்றன அமைக்கப்பட்டு சேவை ஆற்றி வருகின்றது.
எதிர்கொள்ளும் சவால்கள்
மாற்றுத்திறனாளிகள் பல்வேறு வகையான சவால்களை எதிர்கொண்டே தமது வாழ்வை வாழ்கின்றனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு என சமூக சேவைகள் மற்றும் அரச நிறுவனங்கள் பல நிதி உதவிகளை வழங்குகின்ற போதும் அவை அவர்களின் நல்வாழ்வுக்கும் அபிவிருத்திக்கும் போதுமானதாக காணப்படுவதில்லை,
இவர்களால் தமது அன்றாட வாழ்வை சரியான முறையில் கொண்டு செல்ல முடியாமை, சக மனிதர்களைப் போல தமக்கு விரும்பிய தொழில்களை செய்ய இயலாமை, சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களாக காணப்படுதல்,
தனது அன்றாட தேவைகளை நிறைவேற்றுவதற்கும் பிறரை நாடுகின்றமை போன்ற பல்வேறு சவால்களை இவர்கள் எதிர்கொள்பவர்களாக காணப்படுகின்றனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி பயிற்றுவிப்பதற்கான சிறப்பியல்பு வாய்ந்த ஆசிரியர் இல்லாத நிலை காணப்படுகின்றது.
முடிவுரை
ஒவ்வொரு மனிதருக்கும் தனி திறமைகள் பல காணப்படுகின்றன. திறமை என்பது இல்லாத மனிதனை இவ்வுலகத்தில் இல்லை. திறமை என்பது ஊனம் என்பதை நிவர்த்தி செய்வதாக காணப்படுகிறது.
எந்த ஒரு விடயத்திற்கும் திறமையும் கடின உழைப்பு மாத்திரம் காணப்பட்டால் போதும் நாம் சிறந்த சாதனைகளை புரிய முடியும். இவ்வுலகத்தில் பல சாதனைகளை புரிய தன்னம்பிக்கை மட்டுமே போதுமானது ஆகும்.
You May Also Like: