மலை என்பது புவிப்பரப்பின் மேல் காணப்படும் அதிக உயரமுள்ள ஒரு பெரும் நிலத்தோற்றமாகும். மலைகளின் சரிவு, உயரம் மற்றும் தோற்றங்களின் அடிப்படையில் வரையறுக்கப்படுகின்றன.
கண்களைக் கவரும் வகையில் அமைந்துள்ள இயற்கை அன்னையின் கொடையான மலைகள் பல நன்மைகளை இயற்கைக்கு பங்களிப்பு செய்கின்றன. முக்கியமாக மழைவீழ்ச்சியில் பெரும் பங்களிப்பு செய்கின்றன.
ஆனால் இன்று இலாப நோக்கத்திற்காக மலைகளும் இயற்கை வளங்களும் பெருமளவில் சூறையாடப்பட்டு வருகின்றன. இது எதிர்காலத்தில் பாரிய எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
மலை வேறு பெயர்கள்
- அசலம்
- சைலம்
- அசலை
- பருவதம்
- கிரி
- வரை
- அரி
- குவடு
- அகமம்
- அத்தி
- இரவி
- இலும்பு
- இறும்பூது
- ஓதி
- கந்தரம்
- கல்லகம்
- கவடு
- காண்டம்
- குதரம்
- குத்திரம்
- குறிஞ்சி
- கோ
- கோட்டை
- கோத்திரை
- சக்கரம்
- சிகி
- சிலை
- சேலம்
- தடம்
- தணி
- தரணி
- தாரணி
- தரம்
- தராதரம்
- தானி
- துங்கம்
- துடரி
- திகிரி
- நகம்
- நவிரம்
- நாகம்
- பதலை
- பளகம்
- பாதவம்
- பீலி
- புறவிடன்
- பொகுட்டு
- பொங்கர்
- போதி
- மன்
- மாதிரம்
- மேகலை
- மேதரம்
- வல்லரண்
- வாரி
- விடம்
- விடரகம்
- விடரி
You May Also Like: