பாரதிதாசன்
1891 புதுவையில், ஏப்ரல் 29 அன்று கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் என்பவர்களுக்கு பாரதிதாசன் மகனாகப் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும்.
தமிழ் மீது அளவு கடந்த பற்று மிகுந்த இவர் கல்வி கேள்விகளிற் சிறந்து விளங்கினார். தமிழ்ப் புலமையில் தேர்ச்சி பெற்றதன் காரணமாக தனது பதினெட்டாவது வயதிலேயே தமிழ் ஆசிரியர் ஆனார். தனது இளமைக்காலத்தில் பழனி அம்மையார் என்பவரைத் திருமணம் செய்தார்.
பாரதிதாசனின் ஆற்றல்களும் திறமைகளும்
படிக்கும் காலத்தில் இருந்து அவருள் ஊற்றெடுத்த தமிழ் உணர்வு, இசை உணர்வு, நல்ல சிந்தனைகள் பிற்காலத்தில் கவிதைகள் வித்திட காரணமாக இருந்தன.
பல இதழ்களுக்கு பாரதிதாசன், கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன் என்னும் பல புனை பெயர்களில் எழுதி வந்தார். இவர் பாரதியாரின் மீது அதிக ஈர்ப்பு கொண்டவர் ஆவார்.
ஆரம்ப காலங்களில் திராவிட இயக்கத்தில் ஈர்ப்பு கொண்ட இவர் கடவுள் இல்லை என்ற கோட்பாட்டில் நாத்தினாகவும், சாதி ஒழிப்பு, மத ஒழிப்பு போன்றவற்றை கருப்பொருட்களைக் கொண்டு பல பாடல்களை கவிதை வடிவில் எழுதினார்.
கவிதை எழுதுவதோடு மட்டும் நிறுத்தி விடாது நூல்களுக்கு முன்னுரை எழுதும் பிரபல எழுத்தாளராகவும் திரைப்படக் கதாசிரியர் எனப் பல துறைகளில் சாதனை புரிந்தார்.
மக்களின் ஒற்றுமைக்காக பாரதிதாசன் குறிப்பிடுபவை
அதுமட்டுமல்லாமல் பாரத தேசத்தில் வாழும் அனைத்தும் மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டுமென விரும்பிய பாரதிதாசன் மக்களை எழுச்சியூட்டும் பல ஒற்றுமைப்பாட்டு முதலிய மரபுக்கவிதை எழுதினார்.
இந்தக் கவிதையின் மூலம் எல்லா மதங்களும் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றும் மத போதகர்கள் அனைவருமே ஒருவருக்கொருவர் நிகரானவர்கள் இங்கு யாரும் யாரையும் விட உயர்ந்தவர்களோ தாழ்நதவர்களோ கிடையாது என்பதனை ஆழமாக மக்களின் மனதில் விதைக்க வேண்டும் எனவும்
அன்பு என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி அனைவருடத்திலும் பாசமுடன் பழக வேண்டும் என்பவற்றையும் எளிய மொழிநடையில் அழகான மரபுக் கவிதைகளாகப் படைத்தார்.
பாரதிதாசன் வேறு பெயர்கள்
தமிழ் மீதும் சுப்பிரமணிய பாரதியார் மீதும் கொண்ட பற்றுக் காரணமாக பாரதிதாசன் என கனகரத்தினம் என இருந்த தன் இயற்பெயரை மாற்றிக் கொண்டார்.
இவை தவிர எழுச்சி மிக்க கவிதைகளை இயற்றியமையால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் அழைக்கப்படுகின்றார்.
பாரதிதாசன் சிறப்புப் பெயர்கள்
- புரட்சிக்கவி
- புரட்சிக்கவிஞர்
- பாவேந்தர்
- புதுவைக்குயில்
- பகுத்தறிவு கவிஞர்
- தமிழ்நாட்டு இரசுல் கம்சதேவ்
- இயற்க்கை கவிஞர்
பாரதிதாசன் புனைப் பெயர்கள்
பாரதிதாசன் பல்வேறு புனைப் பெயர்களில் தனது கவிதைகளை எழுதி வெளியிட்டுள்ளார். அவையாவன,
- கண்டழுதுவோன்
- கிறுக்கன்
- கிண்டல்காரன்
- பாரதிதாசன்
பாரதிதாசனின் படைப்புக்கள்
நகைச்சுவை உணர்வுமிக்க பாரதிதாசன் எழுதிய “பிசிராந்தையார்” என்ற நாடக நூலுக்கு 1969 இல் சாகித்ய அகாடமியின் விருது வழங்கப்பட்டது.
பாரதிதாசன் தன்னுடைய சிந்தனையில் மலர்ந்த யாவற்றையும் கட்டுரை, கவிதை, நாடகம், பாடல், சிறுகதை போன்ற பல வடிவங்களில் வெளியிட்டார்.
பாரதிதாசன் இயற்றிய நூல்கள்
- இசை அமுது
- பாண்டியன் பரிசு
- எதிர்பாராத முத்தம்
- சேரதாண்டவம்
- அழகின் சிரிப்பு
- புரட்சிக்கவி
- குடும்ப விளக்கு
- இருண்ட வீடு
- குறிஞ்சித்திட்டு
- கண்ணகி புரட்சிக்காப்பியம்
- மணிமேகலை வெண்பா
- காதல் நினைவுகள்
- கழைக்கூத்தியின் காதல்
- தமிழச்சியின் கத்தி
- இளைஞர் இலக்கியம்
- சுப்பிரமணியர் துதியமுது
- சுதந்திரம்
- தமிழியக்கம் (ஒரே இரவில் எழுதியது)
உரைநடை நூல்கள்
- திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார்
- சஞ்சீவி பர்வதத்தின் சாரல்
பாரதிதாசன் நாடகங்கள்
- சௌமியன்
- நல்ல தீர்ப்பு
- பிசிராந்தையார் (சாகித்ய அகாடமி விருது பெற்றது)
- சக்திமுற்றப் புலவர்
- அமைதி ஊமை (தங்கக் கிளி பரிசு)
- இரணியன் அல்லது இணையற்ற வீரன்
- சௌமியன்
- படித்த பெண்கள்
- இன்பக்கடல்
- நல்லதீர்ப்பு
- அம்மைச்சி
- ரஸ்புடின்
- அமைதி
பாரதிதாசன் நடத்திய இதழ்கள்
- குயில்
- முல்லை (முதலில் தொடங்கிய இதழ்)
You May Also Like: