புதுக்கவிதை தோற்றமும் வளர்ச்சியும் கட்டுரை

puthu kavithai thotramum valarchiyum katturai in tamil

மரபு வழியாக செய்திகளையும், கருத்துக்களையும் பதிவு செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட வந்த ஒரு உத்தியாகவே கவிதை காணப்படுகின்றது.

அதாவது கவிதைப் பாணியில் செய்திகளை சொல்லும்போது மக்களினை அது ஈர்க்கும் வகையில் காணப்படும் என்பதும் ஒரு காரணம் எனலாம். இவ்வாறாக கவிதைகள் என்பதற்கு தமிழ் மொழியில் தனியான ஒரு இடமே உண்டு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

புதுக்கவிதை தோற்றமும் வளர்ச்சியும் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • புதுக்கவிதையின் தோற்றம்
  • புதுக்கவிதையின் வளர்ச்சி
  • புதுக்கவிதைக்கான சில எடுத்துக்காட்டுகள்
  • புதுக்கவிதையின் தனித்துவங்கள்
  • முடிவுரை

முன்னுரை

காலத்தின் போர்வையில் இந்த கவிதை என்ற விடயம் காலம் காலமாக தொடர்வதாகவே காணப்படுகின்றது. அன்று மரபுக் கவிதைகள் என ஆரம்பித்து இன்று புதுக்கவிதைகள் என தொடர்ந்து செல்வதனை காணலாம்.

அதாவது மரபுக் கவிதைகள் கடினமான மொழிநடை கொண்டு அலங்கரிக்கப்பட்டிருத்தமையினால், மக்கள் அனைவருக்கும் இலகுவாக புரிந்து கொள்ளும் வகையிலேயே மிகவும் எளிமையான மொழி நடை கொண்டு இந்த புதுக்கவிதைகள் தோற்றம் கண்டன.

புதுக்கவிதையின் தோற்றம்

காதல், கோபம், வேதனை, எதிர்பார்ப்பு, காத்திருப்பு என அனைத்து விதமான உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் தன்மைகளை கொண்ட அமைந்ததாகவே புதுக்கவிதைகள் காணப்படுகின்றன.

கி.பி 20 ஆம் நூற்றாண்டில் இந்த புதுக்கவிதைகள் தோற்றம் கண்டது. இந்த வகையில் 1910 ஆம் ஆண்டில் ஆங்கில கவிஞரான “வால்ட் விட்மன்” என்பவரின் “புல்லின இதழ்கள்” தான் புதுக்கவிதையின் முதல் ஆக்கமாகும்.

தமிழ் மொழியில் “பாரதியார்” எழுதிய வசன கவிதைகள் தான் புதுக்கவிதையின் முன்னோடிகளாக காணப்படுகின்றன.

புதுக்கவிதையின் வளர்ச்சி

இந்த புதுக்கவிதைகளானது மூன்று காலகட்டங்களை அடிப்படையாகக் கொண்டு வளர்ச்சி அடைந்து வந்துள்ளது.

முதலாவது காலம் மணிக்கொடி காலம்- அதாவது இக்காலத்து புதுக்கவிதை முன்னோடிகளாக ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராசகோபாலன், க.நா.சுப்ரமணியன் போன்றோர் விளங்கினர். இக்காலத்தில் பல கவிதைகள் வெளியிடப்பட்ட போதும், இதில் மணிக்கொடி இதழ் முதல் தோன்றியமையினால் இக்காலம் மணிக்கொடி காலம் எனப்படுகின்றது.

இரண்டாவது காலம் எழுத்து காலமாகும்- இதில் எழுத்து, நடை, தாமரை, சரஸ்வதி போன்ற இதழ்கள் தோற்றம் கண்டது. இக்காலத்துக்கு சிறப்பு சேர்த்த கவிஞர்களாக மயன், சிட்டி, வல்லினக் கண்ணன், க.நா.சுப்பிரமணியம் போன்றோர் விளங்குகின்றனர்.

மூன்றாவது காலம் வானம்பாடி காலமாகும்- இங்கு வானம்பாடி, சதங்கை, தீபம் போன்ற கவிதைகள் வெளிவந்ததோடு, இங்கு சிறப்பு பெற்றிருந்த கவிஞர்களாக ஆதவன், ஞானி, புவியரசு, முல்லை, தமிழன்பன் போன்றோர் விளங்குகினர்.

புதுக்கவிதைக்கான சில எடுத்துக்காட்டுகள்

புதுக்கவிதைக்கான எடுத்துக்காட்டுகளாக பின்வரும் கவிதைகளையும் அதனை இயற்றிய கவிஞர்களையும் குறிப்பிட முடியும்.

பாஞ்சாலி சபதம், பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு என்ற பாரதியாரின் படைப்புகள், குயில் பாடல்கள் என்ற பாரதிதாசனின் கவிதைகள், மலைக்கள்ளன் என்ற வெ.இராமலிங்கம் பிள்ளையின் கவிதை, வைரமுத்து அவர்களின் பொன்மாலைப் பொழுது என்னும் பா, மேலும் ஊர்வலம், வானம்பாடி போன்று மு.மேத்தாவின் கவிதைகளும் புதுக்கவிதைகளுக்கான எடுத்துக்காட்டுகளாகவே காணப்படுகின்றன.

புதுக்கவிதை தனித்துவங்கள்

மரபுக் கவிதைகள் கடினமான மொழிநடைகளைக் கொண்டிருக்க, புதுக்கவிதைகள் எளிய மொழிநடையில் காணப்படுவது இதன் தனித்துவத்தில் முக்கியமான ஒன்றாகும்.

இன்னும் சாதாரண மக்களாலும் வாசித்து புரிந்து கொள்ளும் தன்மை, பேச்சு வழக்கு பயன்படுத்தப்படுகின்றமை, வடமொழி, ஆங்கிலம் என்பவற்றின் பயன்பாடு, ஒலி நயம் கொண்டு வடிவமைக்கப்படுகின்றமை மற்றும் கருப்பொருள்களை கண்முன்னே கட்சியாக காட்டும் தன்மை போன்றன இந்த புதுக்கவிதையின் தனித்துவங்களில் சிலவாகும்.

முடிவுரை

நாளுக்கு நாள் மாற்றமடைந்து வரும் உலகில் இந்த கவிதையின் அமைப்பும் காலத்தின் தேவைகளுக்கு ஏற்றாற் போல் மாறிக்கொண்டே வருகின்றது என்று கூற முடியும். அதற்கான எடுத்துக்காட்டாகவே இந்த புதுக்கவிதைகளின் தோற்றம் மற்றும் வளர்ச்சி என்பன காணப்படுகின்றது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

You May Also Like:

நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு கட்டுரை

போதைப்பொருளும் மாணவர்களும் கட்டுரை