வாழ்வில் உயரத்தை அடைந்தவர்கள் அனைவரும் நேரத்தின் அருமை உணர்ந்து அதை சரியாக பயன்படுத்தியவர்கள் ஆவார்கள். இழந்த காலத்தை நம்மால் மீண்டும் பெற முடியாது எனவே இதை உணர்ந்து காலத்தை பயனுள்ளதாக பயன்படுத்த வேண்டும்.
பயனற்ற விதத்தில் வீணாக நேரத்தை வீணடிப்பதை விடுத்து சரியாக பயன்படுத்தும் போது வாழ்வில் உச்சத்தை அடைய முடியும்.
நேரம் பொன்னானது கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- நேரத்தின் பெறுமதி
- நேர விரயம்
- நேரத்தை சரியாக பயன்படுத்தும் உத்திகள்
- வாழ்வில் வெற்றி பெற நேரம்
- முடிவுரை
முன்னுரை
ஒரு மனிதரோ அல்லது பெண்ணோ என்ன செய்துகொண்டிருந்தாலும் அல்லது யாராக இருந்தாலும் எதிர்காலம் என்ற ஒன்றை ஒவ்வொரு மனிதரும் மணிக்கு அறுபது நிமிடங்கள் என்ற வேகத்தில் நெருங்குகின்றார்கள் என்கிறார் சீ.எஸ் லூயிஸ் அவர்கள்.
காலம் மீண்டும் உருவாக்க முடியாதது அதனை நாம் சரியாக பயன்படுத்தி கொள்வதனால் எமது வாழ்வினை அர்த்தமுடையதாக மாற்றி கொள்ளலாம். இக்கட்டுரையில் நேரம் பற்றி நாம் நோக்கலாம்.
நேரத்தின் பெறுமதி
காலமானது ஒரு பொழுதும் யாருக்காகவும் நிற்கபோவதில்லை நேற்றைய நாள் இன்று இல்லை, இன்றைய நாள் நாளை இல்லை ஆதலால் நாம் அந்த நேரத்தை பயனுடையதாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
“காலத்தை நீங்கள் வீணடித்தால் காலம் உங்களை பயனற்றவராக மாற்றிவிடும்”. என்று வில்லியம் சேக்ஸ்பியர் குறிப்பிடுகின்றார்கள். ஒரு நிமிடத்தை நாம் பயனின்றி கழித்தாலும் அது நமக்கு பெரும் நஷ்டம் என்று குறிப்பிடுகின்றார்கள்.
நேரவிரயம்
“காற்றுள்ள போதே தூற்றி கொள்” என்ற பழமொழியானது நமக்கு நேரவிரயத்தின் தீமையை எடுத்து காட்டுகின்றது.
எந்த காரியமாக இருந்தாலும் நாம் அதனை தக்க சமயத்தில் அதனை செய்து முடித்து விடவேண்டும் இல்லாவிடின் அதற்கான விலையினை நாம் அனுபவிக்க வேண்டியிருக்கும்.
எமது அன்றாடவாழ்வில் நாம் அதிகளவான நேரத்தை நாம் தேவையற்ற விடயங்களில் செலவழிக்கின்றோம் இது நமக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதவாவது நேரத்தை விரயமாக்குதல் தற்கொலைக்கு சமனானதாக சொல்லப்படுகின்றது.
நேரத்தை சரியாக பயன்படுத்தல்
ஒவ்வொரு மனிதர்களிடமும் சிறுவயதில் இருந்தே நேரமுகாமைத்துவம் இருக்க வேண்டும் ஒரு நாளை துவங்கும் போது அந்த நாளில் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் பற்றி முன்பே திட்டமிட்டு கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வளர்ச்சிக்கு தேவையான விடயங்களையும் மனதுக்கு நிம்மதி தர கூடிய விடயங்களுக்கும் அதிக நேரம் ஒதுக்குவது மிகவும் பயனுடையதாக அமையும். காலமே வெற்றிக்கு அடிப்படையாக அமைவதனால் நாம் அதனை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
வாழ்வில் பெற்றி பெற நேரம்
யாரெல்லாம் நேரத்தை சரியாக பயன்படுத்த கற்று கொள்கிறார்களோ அவர்கள் வெற்றி பெறுவார்கள். எந்த காரியத்தையும் செய்ய எமக்கு போதுமான நேரம் கிடைப்பதில்லை என்று பலர் குறைகூறுவார்கள் மனிதர்களால் ஒரு போதும் காலத்தை குறைகூற முடியாது.
அதற்கு கீழ்படிந்து தனது கடின முயற்சியினை உரிய நேரத்தில் முதலிடுபவர்களே வாழ்வில் உயர்ந்த நிலைகளை எட்டி பிடிக்கின்றனர். இவ்வாறு வாழ்வில் வெற்றி பெற்ற பல மனிதர்கள் நமக்கு தமது அனுபவங்களை பகிர்கின்றனர்.
முடிவுரை
இன்றைய அழுத்தங்கள் நிறைந்த வாழ்வியலில் நாங்கள் நேரத்தை வீணடித்தால் எமது வாழ்வில் முன்னேறுவது மிகவும் இயலாத ஒன்றாக மாறிவிடும்.
வாழ்க்கை அவ்வளவு எளிதாக வெற்றிக்கு வழிவிடுவதில்லை ஆதலால் நேரத்தை சரியாக பயன்படுத்த நாம் வாழ்வில் வெற்றி பெற தினம் தினம் முயற்சி செய்து கொண்டே இருப்பதனால் வெற்றி நம்மை நிச்சயம் ஒரு நாள் அணைக்கும்.
You May Also Like: