மனித வாழ்வின் மான்பு எனப்படுவது நல்லவற்றை கற்றலும் அதன்படி நிற்றலுமே ஆகும். மாணவர்களுக்கு கல்வி அறிவு பள்ளிப் புத்தகங்களால் மட்டுமே வந்து விடாது. பலவகை நூல்களை படிக்க வேண்டும்.
எளிய மக்களும் இலவசமாக நூல்களை படித்து சமூகத்தில் சிறந்து விளங்க நூலகங்கள் இன்றியமையாதவை ஆகும்.
நூலகம் பற்றி சில வரிகள்
மக்களை மேன்மக்களாக மாற்றுவதில் இந்த நூலகங்களிற்கு பெரும் பங்கு உள்ளது.
நூலகங்கள் பொதுவாக அமைதியான சூழலை கொண்டு காணப்படும்.
பொதுநூலகம், கல்வி நூலகங்கள், பாடசாலை நூலகங்கள் என பலவகை நூலகம் உண்டு.
பொதுநூலகங்கள் எல்லா வகையான துறைசார்ந்த நூல்களை கொண்டது.
கல்வி நூலகம் மற்றும் பாடசாலை நூலகங்கள் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு தேவையான புத்தகங்களை கொண்டுள்ளது.
கல்வி என்ற பெரும் கடலை தனக்குள் தேக்கி வைத்துள்ள நூலகங்கள் தன்னை தேடி வரும் வாசகர்களின் அறிவு பசியை தீர்க்கின்றது.
பொறுமை, தேடல், ஆழமான வாசிப்பு, விவேகம், எழுத்தாற்றல், கேள்வி, ஞானம், படைப்பாற்றல் போன்ற உயர்ந்த திறன்களை இந்த நூலகங்கள் வழங்கும் பெருமை உடையன.
நாட்டினுடைய அறிவு மேலாண்மையில் நூலகங்கள் முக்கியமான பங்கினை வகிக்கின்றது.
நாடெங்கிலும் பயன்தரும் நூலகங்களை அமைப்பதனால் அவற்றின் மூலமாக நல்லறிவினை பெற்று நாட்டின் எதிர்காலத்தை ஒளிமயமானதாக மாற்ற முடியும்.
அனைத்து நூல்களையும் விலை கொடுத்து வாங்க இயலாது. அதற்கு நூல் நிலையங்கள் பயன்படுகின்றன.
சிறந்த பயனுள்ள பொழுதுபோக்காவும் அறிவை பெருக்கிக் கொள்வதற்காகவும் நூல் நிலையங்கள் பயன்படுகின்றன.
ஒரு நாட்டில் கல்வி கூடங்கள், வைத்தியசாலைகள் அமைப்பது எவ்வளவு முக்கியமோ அதுபோன்று நூலகம் அமைப்பது மிகவும் முக்கியமானது ஆகும்.
ஆற்று மணலை தோண்ட தோண்ட நீர் கிடைப்பது போல புத்தகங்களை படிக்க படிக்க அறிவினை ஊறச் செய்யும் நூலகங்களை ஒவ்வொருவரும் நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
You May Also Like: