நடைப்பயிற்சி நன்மைகள் கட்டுரை

nadai payirchi nanmaigal katturai in tamil

உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உடற்பயிற்சி மிக அவசியம் ஆகும். உடற்பயிற்சிகளில் மிகவும் இலகுவான நடைப்பயிற்சி உடலை வலிமையாக வைத்திருக்க உதவுகின்றது.

ஆரோக்கியமான உடலிற்கு உடற்பயிற்சி மட்டுமின்றி ஆரோக்கியமான உணவு பழக்கத்தையும் பேண வேண்டும்.

நடைப்பயிற்சி நன்மைகள் கட்டுரை

நடைப்பயிற்சி நன்மைகள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • உடலின் வலிமை
  • நோய் தடுப்பு
  • நாளிற்கான உத்வேகம்
  • ஆய்வுகளின் முடிவுகள்
  • முடிவுரை

முன்னுரை

மனிதன் தன்னுடைய வாழ்நாளில் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமாயின் அவனுக்கு பணம், செல்வம் என்பவற்றை தாண்டி உடல் ஆரோக்கியம் என்பது அவசியமாகும்.

உடற்பயிற்சி எனும் போது அனைவராலும் இலகுவாக செய்ய கூடியதாக நடைபயிற்சி ஆனது காணப்படுகின்றது. தினமும் நாம் நடப்பதனால் எமது உடலில் பல்வேறான நன்மைகள் விளைகின்றன.

இதனால் தான் வைத்தியர்கள் தினமும் நடக்கும் படி சிபாரிசு செய்கின்றனர் இக்கட்டுரையில் நடைப்பயிற்சியின் நன்மைகள் பற்றி நாம் காண்போம்.

உடலின் வலிமை

பொதுவாக நாம் அவதானிப்போமானால் நாம் தினமும் எடுத்து கொள்கின்ற உணவானது சமிபாடு அடைய வேண்டும் அத்துடன் உடலில் தங்கிவிடாது எரிக்கப்படவும் வேண்டும்.

உடற்பயிற்சி, விளையாட்டு, நடைப்பயிற்சி, வேலைகள் செய்வது போன்றன உடலில் தீமைதரும் கூறுகளை அழித்து உடலினை வலிமையாக வைத்திருக்கின்றது.

தினமும் நடப்பதினால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு எரிக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கின்றது. இதனால் தான் இதனை மேற்கொள்பவர்கள் வலிமை உடையவர்களாக இருக்கின்றனர்.

நோய் தடுப்பு

தினமும் காலையிலோ அல்லது மாலை நேரங்களிலோ நடைப்பயிற்சியானது மேற்கொள்வதனால் உடலில் பல்வேறான நோய் நிலைகள் தடுக்கப்படுவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் உடலின் சமிபாட்டு தொகுதி சரியாக இயங்குவதனால் நீரிழிவு, உயர்குருதியமுக்கம், இருதயநோய்கள் போன்ற தொற்றாத நோய்கள் குறைவடைவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறான நோய்கள் வராமல் நாம் தடுக்க தினமும் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்வது எமக்கு நன்மை பயப்பதாகும்.

நாளிற்கான உத்வேகம்

அதிகாலை பொழுதுகளிலோ இல்லை மாலை பொழுதுகளிலோ தனியாகவோ அல்லது நண்பர்களுடனோ மெது ஓட்டம் அல்லது நடைப்பயிற்சி மேற்கொள்வதனால் எமது உடலில் இனம் புரியாத உற்சாகமானது பிறக்கின்றது.

இது வாழ்வில் பெரிய விடயங்களை சாதிக்க எமக்கு உத்வேகத்தை தர வல்லது. மேலும் தனியாக நடைப்பயிற்சி செய்தல் மன அழுத்தத்தினை வெகுவாக குறைக்கின்றது. மற்றும் தூய்மையான காற்றை சுவாசிப்பதனால் எமது ஆரோக்கியம் மேலும் மேம்படும்.

ஆய்வுகளின் முடிவுகள்

நடைப்பயிற்சி செய்வதன் வாயிலாக ஏராளமான நன்மைகள் கிடைப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதனால் தான் மேற்கத்தைய மக்கள் அதிகம் மோட்டார் வாகனங்களில் பயணிப்பதனை குறைத்து நடை மற்றும் துவிச்சக்கர வண்டி போன்ற விடயங்களில் பயணிக்க கூடியவாறாக தமது நகரங்களை வடிவமைத்து வருகின்றனர்.

உலமெங்கும் இந்த நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கு தொற்றாத நோய்களான நீரிழிவு, குருதியமுக்கம், சுவாசபிரச்சனைகள் போன்றன வெகுவாக குறைவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

முடிவுரை

தொழில்நுட்பத்தை உருவாக்கிய மேற்கத்தைய நாட்டவர்கள் கூட இயந்திரமயமான வாழ்க்கையின் தீய விளைவுகள் பற்றி அறிந்து இயற்கையோடு சேர்ந்த வாழ்வினை மேற்கொள்கின்றனர்.

ஆனால் எமது நாட்டவர்கள் இந்த நடை பயிற்சியின் நன்மையினை அறியாதவர்களாகி அதிவேக வாகனங்களிலும் தொழில்நுட்பங்களிலும் மூழ்கி தங்களது ஆரோக்கியத்தினை தொலைத்து நோயாளிகளாக மாறி கொண்டிருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.

இந்த நிலையினை மாற்றி நாமும் எமது உடலை ஆரோக்கியமாக வைக்கும் விடயங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

You May Also Like:

நேரம் பொன்னானது கட்டுரை