தமிழ் மொழி பற்றிய கட்டுரை

tamil mozhi katturai in tamil

பல்லாயிரம் ஆண்டுகளின் பின்னரும் தன் தனித்தன்மையை பேணி வருகின்ற செம்மொழியான செழுமை தமிழ் மொழிக்கு உண்டு.

தமிழ் மொழி பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • செம்மொழியான தமிழ்
  • பழமை வாய்ந்த தமிழ்
  • தமிழ் மொழியின் சிறப்பு
  • தமிழின் நிலை
  • முடிவுரை

முன்னுரை

மொழி என்பது மனிதர்கள் தொடர்பு கொள்ளவும் கருத்தை வெளிப்படுத்தவும் உதவும் ஊடகம் என்று மொழியியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால் மொழி என்பது ஓர் இனத்தின் அடையாளம் அவ்வினத்தவரது இயல்புடன் இணைந்த ஓர் அங்கமாகும்.

உலகின் முதல்மொழி என்று வரலாற்றாளர்களால் போற்றப்படும் மொழி எம்முடைய தமிழ் மொழியாகும்.

“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்” என்று மார்தட்டிப் தமிழ் மொழியினை சிறப்பித்து பெருமை கொள்கிறார்கள்.

நம்மவரின் அரும்பெரும் சொத்து தமிழ் மொழி. அது தமிழினத்தின் அடையாளமும் கூட மொழி இன்றி மனிதன் வாழ முடியாது. தமிழின்றி தமிழினம் தழைக்க முடியாது. எம் பேச்சு, மூச்சு, எழுத்து, உடைமை, உயிர்ப்பு, வாழ்வு எல்லாமே தமிழ் மொழி தான்.

தமிழ் மொழியின் பழமையிலும் செழுமையிலும் இனிமையிலும் இறுமாந்து வாழ்பவர்கள் தமிழர்கள். இக்கட்டுரையில் தமிழ் மொழியின் சிறப்புக்கள் பற்றி காண்போம்.

செம்மொழியான தமிழ்

தமிழ் மொழியானது தொன்மையான மொழி “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி” தமிழர்கள் பேணிப் பாதுகாக்கப்பட்ட மொழி.

சமஸ்கிருதம், ஆங்கிலம் போன்ற மொழிகள் வெவ்வேறு காலப்பகுதிகளில் தமிழ் மொழி மீது மிகுந்த செல்வாக்கைச் செலுத்த முற்பட்டன. எனினும் நம் தாய்மொழி இச்செல்வாக்கிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டிருந்தது.

பல்லாயிரம் ஆண்டுகளின் பின்னரும் தன் தனித்தன்மையை பேணி வருகின்ற செம்மொழியான செழுமை தமிழ் மொழிக்கு உண்டு. தமிழ் மொழி செம்மொழி என்ற பெருமையை கொண்டது.

தொன்மை, தனித்தன்மை, பொதுமை பண்பு, நடுநிலை தன்மை, தனித்து இயங்கும் தன்மை, தாய்மை பண்பு, இலக்கண இலக்கிய வளம், கலைநயம், உயர்ந்த சிந்தனை, மொழிக்கோட்பாடு போன்ற பண்புகளை கொண்டதால் தான் தமிழ் செம்மொழி என்ற பெயரை பெற்றுள்ளது.

பழமை வாய்ந்த தமிழ்

ஒரு மொழி செம்மொழியாக வேண்டும் என்றால் குறைந்தது 1000 ஆண்டுகளாவது பழமை வாய்ந்ததாக இருக்கு வேண்டும். அந்த வகையில் பார்க்கும் போது நம்முடைய மொழி பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான மொழி என்பதற்கு செம்மையான மொழி என்று அர்த்தம்.

தமிழ் மொழியின் சிறப்புக்கள்

உலக மொழிகளுள் மூத்ததும் முன்னோடியுமான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்றால் அது மிகையானது. உலகில் இருக்கும் மொத்த மொழிகளின் எண்ணிக்கை ஏறத்தாழ மூவாயிரத்திலிருந்து எட்டாயிரம் வரை இருக்கும் என்று மொழியிலாளர்கள் கூறுகிறார்கள்.

தமிழ் மொழி இயற்கையாகவே பேசுவதற்கு எளிமையாக அமைந்திருப்பதால் நாம் தமிழ் எழுத்துக்களை உச்சரிக்கும் போது சுவாசப்பையிலிருந்து குறைந்த காற்றே வெளியேறுகிறது.

தமிழ் மொழியின் சிறப்பை எடுத்துரைப்பதற்கு எண்ணற்ற சங்க இலக்கிய நூல்கள் இருந்தாலும் அவற்றில் திருக்குறள் ஒன்று மட்டுமே போதும், இன்று உலகிலேயே அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களுள் திருக்குறளும் ஒன்றாகும்.

நம்முடைய மொழியில் எழுந்த இலக்கியங்கள், இலக்கணங்கள், புது கவிதைகள், கட்டுரைகள், நாவல்கள், சிறுகதைகள் தமிழ் வளர்ச்சியை அடைவதற்கு உதவியாக இருந்துள்ளது.

திருவள்ளுர், கம்பர், பாரதியார், ஒளவையார் போன்றோர்கள் தமிழை வளர்த்து வந்தவர்கள். இன்று உலகில் எழுந்த மொழிகள் பலவற்றிற்கு தமிழ் அடித்தளமாக உள்ளது.

தமிழின் நிலை

தமிழ் மொழிக்கு அக்காலத்திலும் சரி, இக்காலத்திலும் சரி பல எதிர்ப்புகள் இருந்து வருகிறது. இப்பொழுதும் ஆங்கில மொழியின் தாக்கம் வடமொழியின் ஆதிக்கம் எழுந்துள்ளது.

தமிழ் அழியாமல் பேணிக்காப்பதற்கு முடிந்த வரை தமிழ் கல்வியை படிப்பது நல்லது. பிற மொழிகளில் படிப்பது தவறு அல்ல ஆனால் அது தமிழின் வளர்ச்சியை தடுக்காத அளவிற்கு இருக்கு வேண்டும்.

முடிவுரை

தமிழ் மொழி தனித்து நிற்கும் வலிமையுடையது. காலத்தில் அழியாத கன்னித் தமிழானது. இளமையுடன் இருக்க கூடியது. பிறமொழி கலப்பில்லாமல் வளர்ந்தோங்கும் செழுமையுடைய மொழி தமிழ் மொழியாகும். தாய்மொழியான தமிழை முக்கியத்துவம் கொடுத்து கற்றுக் கொள்ள வேண்டும்.

You May Also Like:

தமிழ் மொழியின் சிறப்பு கட்டுரை

தமிழ் எங்கள் உயிருக்கு நேர் கட்டுரை