தமிழ் நாட்டிற்காக உயிர் கொடுத்த தியாகிகள் கட்டுரை

தமிழ் நாட்டுக்காக உயிர் கொடுத்த தியாகிகள் கட்டுரை

தமிழ் நாட்டிற்காக உயிர் கொடுத்த தியாகிகள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • தியாகி சங்கரலிங்கனார்
  • கடமைவீரர் காமராஜர்
  • படைப்பாளிகள்
  • கனவுகளின் நாயகன்
  • முடிவுரை

முன்னுரை

இன்றைய தமிழ்நாடு இந்த பெயரை பெறுவதற்கும் அது இந்த நிலையினை அடைவதற்கும் பெரும் போராட்டங்களும், கண்ணீரும், உழைப்பும் காரணமாக இருக்கின்றது.

இந்திய சுதந்திர போராட்டம் எத்தகைய முக்கியம் பெறுகின்றதோ அது போல மொழி வழி அங்கீகாரம் தமிழ் நாட்டிற்கு கிடைப்பதற்க பல தியாகிகள் தங்கள் உயிரையும் வாழ்வையும் அற்பணம் செய்தமை வரலாற்றில் பதியப்பட்டிருக்கின்றது. இவர்களது தியாகம் எத்தகையது என்பது தொடர்பாக நாம் இந்த கட்டுரையில் நோக்கலாம்.

தியாகி சங்கரலிங்கனார்

இன்றைய தமிழ்நாடு எனும் பெயரை பெற மிகவும் முக்கிய பங்காற்றிய தியாகியாக “தியாகி சங்கரலிங்கனார்” எல்லோராலும் போற்றபடுகின்றார். வணிக குலத்தை சேர்ந்த இவர் காந்திய கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கபட்டவர்.

இதன் பயனாக அரசியலில் பிரவேசித்து மக்களுக்காக உண்மையாக சேவையாற்றினார். மதுவிலக்கு வர்க்கபிரிவினை போன்றவற்றை எதிர்த்து சமத்துவத்துக்காக போராடினார்.

அந்தவகையில் மொழிரீதியான அங்கீகாரம் வேண்டி உண்ணாவிரதம் இருந்து மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட மாநிலத்தை “தமிழ்நாடு” என்று பெயர் பெற காரணமாக அமைந்தார்.

கடமைவீரர் காமராஜர்

தமிழ்நாட்டின் மிகவும் நேர்மையான தலைவராக அறியப்படும் காமராஜர் அவர்கள் விளங்குகின்றார். தனக்காக வாழாது தனது மக்களுக்காக வாழ்ந்த இவர் தமிழ் நாட்டில் ஏழை குழந்தைகளின் கல்வி வளர்ச்சி பெற ஒரு முக்கிய காரணகர்த்தாவாக திகழ்ந்தார்.

பல வழிகளிலும் தமிழ்நாடு இன்று இந்தியாவின் ஒரு சிறந்த மாநிலமாக வருவதற்கான ஆரம்ப வேலைகளை இவர் தனது ஆட்சி காலத்தில் மேற்கொண்டார். இதனால் இன்றளவும் தமிழக மக்களால் இவர் கொண்டாடப்படுகின்றார்.

படைப்பாளிகள்

அரசியல் சார்ந்த பல தலைவர்கள் தமிழ்நாட்டை உருவாக்கியிருந்த போதிலும் அறிவுசார்ந்த ரீதியில் சிறந்த கொள்கை உணர்வுகளை மக்களுக்குள் கடத்திய தமிழ் இலக்கிய படைப்பாளிகள் தமிழகத்தில் தோன்றினர்.

அந்தவகையில் பாரதியார் முதன்மையானவர் இவர் தான் தமிழ் உணர்வை புரட்சிகரமாக மக்களுக்கு ஊட்டினார் இவரை தொடர்நது பாரதிதாசன் மற்றும் நிகழ்கால சினிமா எழுத்தாளர்கள் வரை இந்த தமிழ் மற்றும் தேசிய உணர்வு உலகமெங்கும் கொண்டு சேர்க்கப்படுகின்றது.

கனவுகளின் நாயகன்

நவீனத்துவம் அடைந்த இந்தியாவில் தமிழ்நாடு எனும் மாநிலத்தை இந்தியாவை தாண்டி உலகம் முழுவதும் அதன் பெருமையினை கொண்டு சென்ற ஒரு அக்கினி சிறகாக டாக்டர் ஏ.பி ஜே அப்துல்கலாம் அவர்கள் விளங்குகின்றார்.

இவர் பல கனவுகளை சுமந்து கொண்டிருக்கின்ற குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் முன்னுதாரணமானார். அறிவியலில் இந்தியாவை உலக வல்லரசுகளோடு போட்டியிட உத்வேகத்தை கொடுத்தார்.

இவர்களது அர்ப்பணிப்பான சேவை இன்னும் பலரை ஊக்கபடுத்தி வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

முடிவுரை

இன்றைய தமிழ்நாடு அரசியல் ரீதியாக பல குறைகளை கொண்டிருந்தாலும் கல்வியிலும் பொருளாதாரத்திலும் பெரியளவான முன்னேற்றங்களை கொண்ட ஒரு சிறந்த மாநிலமாக மாற இத்தகைய தியாகிகளின் பங்களிப்பு அளப்பரியதாகும்.

இவர்களை போலவே இன்றைய சமுதாயமும் சிந்தித்து செயலாற்றுவதனால் தமிழ்நாட்டையும் இந்தியாவையும் மென்மேலும் வளர்த்து கொள்ள முடியும் என்பது திண்ணம்.

You May Also Like:

தமிழ் மொழியின் சிறப்பு கட்டுரை

சங்க இலக்கியத்தின் சிறப்புகள் கட்டுரை