சுத்தம் சுகம் தரும் கட்டுரை

sutham sugam tharum katturai in tamil

“சமூகத்தை சரி செய்ய முன் நாம் திருந்த வேண்டும்” என்பதற்கிணங்க வீட்டில் சுத்தத்தை கடைப்பிடிக்க பழக வேண்டும் அப்போதே பொது இடங்களில் சுத்தத்தை கடைபிடிக்க முடியும்.

சுத்தம் சுகம் தரும் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • சுற்றுப்புற தூய்மை
  • உடல் தூய்மை
  • வீட்டின் தூய்மை
  • சுத்தமின்மையால் ஏற்படும் விளைவுகள்
  • சுத்தமின்மையால் ஏற்படும் அண்மைக்கால விளைவுகள்
  • முடிவுரை

முன்னுரை

“சுத்தமே என்றும் சுகமளிக்கும் தீய
சோம்பலை ஓடி துரத்தும் அம்மா…..
கந்தையானாலும் கசக்கியுடு – என்று
இனம் கற்பனை போற்றி நடப்பாய்
அம்மா…”. ( கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை)

என்ற கவிதைக்கு இணங்க நோயற்ற சிறப்பான வாழ்வை வாழ தூயகாற்று, தூய உணவு, தூயசூழல், தூய நீர் என்பன சுத்தமாக அமைய வேண்டியது அவசியம். அவ்வகையில் சுத்தத்தை பேணினால் மட்டுமே சுகமான வாழ்வை வாழ முடியும்.

சுற்றுப்புற தூய்மை

வீடும் நாடும் எமது இரு கண்கள் தூய்மை என்பது எமது உடை, உணவு, உறையுள் என்பவற்று மட்டும் அடங்கவில்லை. எம்மை சுற்றியுள்ள சுற்றுப்புற சூழலும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பது அவசியம்

எம்மை சுற்றியுள்ள சூழல் தூய்மையாக இருந்தால் மட்டுமே நாம் தூய்மையான காற்றை சுவாசிக்கவும் தூய்மையான குடிநீரைப் பருகவும் முடியும்.

சுற்றுச்சூழல் தூய்மையாக இல்லாவிடின் அது பல நோய்களையும் பிரச்சினைகளையும் உண்டு பண்ணும்.

தற்கால இந்தியாவில் சுற்றுச்சூழல் தூய்மையின்மையின் காரணமாக பல மக்கள் நோய்வாய்ப்படையும் வீதம் அதிகமாக காணப்படுகின்றது. இதற்கு ஆதாராமாக சில பிரதேசங்களில் சில இந்தியர்கள் தூய்மையான குடிநீரைப் பெறவே கடினமான நிலையை மக்கள் சந்திக்கின்றனர்.

எனவே சுற்றுப்புறச் சூழலை தூய்மையாக பேணினால் இந்நிலையில் இருந்து மீள முடியும். பொது இடங்களில் குப்பை போடுதல், பொலித்தீன் பாவனை, எச்சில் துப்புதல், குப்பைகளை எரித்தல் போன்ற செயற்பாடுகளை நிறுத்தி சுற்றுச் சூழலை சுத்தமாக பேண வேண்டும்.

வீட்டின் தூய்மை

நாம் வாழுகின்ற இடமான வீட்டின் தூய்மையே நாட்டின் தூய்மையாகும். “தூய்மையான இடத்திலேயே இறைவன் வாசம் செய்வார்” என்பதற்கிணங்க வீட்டை தூய்மையாக வைக்கும் முகமாகவே பண்டிகை விழாக்கள் என்பன வீட்டின் தூய்மையை மையப்படுத்துவதாக காணப்படுகின்றன.

நாம் விழாக்கள் கொண்டாடும் போது வீட்டை சுத்தம் செய்து சாணம் தெளித்து மாவிலை தோரணம் என்பவற்றை கட்டுகின்றோம். இவை அனைத்தும் வீட்டினுள் கிருமிகளை அண்டவிடாமல் தடுப்பதை நோக்காகக் கொண்டே மேற்கொள்ளப்படுகின்றன.

எனவே சுத்தம் என்பதை வீட்டில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். வீட்டின் சுத்தமே நாட்டின் சுத்தமாக மாற்றம் அடையும். வீட்டில் சுத்தத்தை கடைபிடிக்க பழக்கினால் மட்டுமே பொது இடங்களில் சுத்தத்தை கடைபிடிக்கும் பழக்கம் தோன்றும்.

உடல் தூய்மை

வீட்டையும் நாட்டையும் மட்டுமல்ல நம் உடலையும் நாம் தூய்மையாக பேண வேண்டும். “கந்தையானாலும் கசக்கிக் கட்டு” “கூழானாலும் குறித்து குடி” என்ற முதுமொழிகள் சுத்தத்தை பேணுவதையே கூறுகின்றன.

தினமும் குளித்து தோய்த்து உலர்ந்த ஆடை அணிதல், கை கழுவிய பின் உணவு உண்ணல், நகங்களை காலத்துக்கு காலம் வெட்டுதல் போன்ற சிறந்த பழக்க வழக்கங்களை கையாள்வதன் மூலம் நம் உடலை நோய் வராமல் பாதுகாக்கலாம்.

சுத்தமின்மையால் ஏற்படும் பாதிப்புக்கள்

“விதைத்தவன் வினை அறுப்பான்” என்பதற்கிணங்க சுற்றாடலையும் எம்மையும் சுத்தமின்றி வைத்திருப்பதில் அதன் விளைவை நாங்கள்தான் அனுபவிக்க வேண்டும்.

கழிவுகள் நீருடன் சேர்வதால் குடிநீர் நஞ்சூட்டப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டுகின்றன, வாகனப் புகை போன்றவை வெறியுடன் கலப்பதால் சுவாச நோய்கள் ஏற்படுகின்றன, குப்பை கூழங்களை சூழலில் கொட்டுவதால் சூழல் மாசடைகின்றது.

இவ்வாறு சுத்தமின்மையால் ஏற்படும் பாதிப்புக்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இவ்வாறான பாதிப்புக்களில் இருந்து எம்மை நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

சுத்தம் பேணுவதற்கான வழிகள்

கோடி கொடுத்தாலும் நோயற்ற வாழ்வு தரும் மகிழ்ச்சியை யாராலும் பெற்று விட முடியாது. ஏனெனின் நோய்வாய்ப்படும் போது அவற்றினால் ஏற்படும் வலியும் மிகவும் மோசமானதாக இருக்கும்.

எனவே, அவ்வாறு நோய் வராமல் எம்மை பாதுகாத்து கொள்ள வேண்டியது எமது கடமையாகும். அவ்வகையில் குப்பையை சரியான முறையில் அகற்றல் கழிவு நீரை சரியான முறையில் வெளியேற்றல் வாகனபுகை நிலையங்களை நிறுவுதல் போன்ற பல வகையான முறைகளை கையாள்வதன் மூலம் சுத்தம் பேணி சுகமாக வாழலாம்.

முடிவுரை

சுத்தம் உள்ள இடத்தில்தான் இறைவன் வாசம் செய்வார். சுத்தம் தான் மனிதனை நலமாக வாழ வைக்கும் இதனையே திருவள்ளுவர், “நோய் நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்” என்கிறார்.

அதாவது நமக்கு ஏற்படுகின்ற இடர்பாடுகளை அவற்றின் வேரிலிருந்து களைவதனால் தான் நலன் பெற முடியும்.

எனவே, சுத்தத்தை நாம் வீட்டில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். வீட்டின் சுத்தம் நாட்டின் சுத்தமாகும். அதன் மூலம் உலகில் உள்ள எல்லோரும் நலமாக வாழலாம். நலமாக வாழ சுத்தத்தைப் பேணுவோம்.

You May Also Like:

கழிப்பறை சுத்தம் கட்டுரை

நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு கட்டுரை