இவ்வுலகில் பல வகையான பறவைகள் காணப்படுகின்றன. அதில் சுறுசுறுப்புக்கு பெயர் போன பறவையாக சிட்டுக்குருவி காணப்படுகிறது.
சிட்டுக்குருவியின் “கீச்” “கீச்” இசையை கேட்டு கண்விழிக்கும்போது அந்த நாளை இதமாகவும் புத்துணர்வுடனும் கழிக்கலாம். முன்னைய காலத்தில் கிராம மக்கள் சிட்டுக்குருவியின் சத்தத்தை அவர்களை எழுப்பும் இசையாக வைத்தார்கள்.
சிட்டுக்குருவி பற்றி சில வரிகள்
1. சிட்டுக்குருவி உலகின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படும் ஒரு சிறிய பறவை ஆகும்.
2. சிட்டுக்குருவியானது முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் பறவைகளில் ஒன்றாக காணப்படுகிறது.
3. சிட்டுக்குருவி வீட்டுக்குருவி, ஊர்க்குருவி, அடைக்கலாம் குருவி என்றும் அழைக்கப்படும்.
4. உலக சிட்டுக்குருவிகள் நாள் ஆண்டுதோறும் மார்ச் 20 ஆம் நாள் கொண்டாடப்படுகின்றது.
5. சிட்டுக்குருவிகள் மணிக்கு சுமார் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கின்றன.
6. சிட்டுக்குருவியில் 25 இனங்கள் இருக்கின்றன. இதன் பூர்வீகம் ஐரோப்பா மத்திய தரைக்கடல் பகுதிகள் மற்றும் பெரும் பகுதியாக ஆசியாவும் இருக்கின்றன.
7. சிட்டுக்குருவிகள் சாம்பல், பழுப்பு, மங்கலான வெள்ளை போன்ற நிறங்களில் காணப்படும்.
8. பெண் சிட்டுக்குருவிகள் ஆண் சிட்டுக்குருவிகளின் நிறத்தில் இருந்து சற்று வேறுபட்டு காணப்படும்.
9. சிட்டுக்குருவியின் முட்டைகள் பச்சை கலந்த வெள்ளை நிறத்தில் இருக்கும்.
10. டெல்லி அரசு சிட்டுக்குருவியை தங்கள் மாநில பறவையாக அறிவித்துள்ளது.
11. சிட்டுக்குருவியில் ஆண் பறவை தான் கூடு கட்டும்.
12. சிட்டுக்குருவிகளின் வாழ்நாள் சுமார் 13 ஆண்டுகள் ஆகும்.
13. சிட்டுக்குருவிகள் சிறு தானியங்கள், கோதுமை மற்றும் களைகளின் விதைகளையே பெரும்பாலும் சாப்பிடுகின்றன. பொதுவாக பூச்சிகள் போன்ற சிறிய உணவுகளையும் சாப்பிடுகின்றன.
14. முன்பொரு காலத்தில் நகரம் கிராமம் என்று எல்லா இடங்களிலும் காணப்பட்ட இவை தற்போது நகரங்களில் வசிப்பது குறைவாகிவிட்டது.
15. சிட்டுக்குருவிகள் காடுகள் புல்வெளிகள் போன்ற இடங்களில் வாழாது மனித குடியேற்றங்களுடன் இணைந்து காணப்படும்.
16. சிட்டுக்குருவிகள் பாலத்துக்கு கீழ், கூரைக்கு கீழ், மரப்பொந்து என்பவற்றிலேயே தன் கூட்டை அமைக்கிறது. இவற்றின் கூடுகள் கிண்ண வடிவில் அமைந்து காணப்படும்.
17. சிட்டுக்குருவிகளின் பெண் குருவிகள் ஒரு தடவையில் 3 – 5 வரை முட்டைகளை இடும். சிட்டுக்குருவிகள் அதன் முட்டையை 12 – 15 நாட்கள் வரை அடைகாக்கிறது.
18. சிட்டுக்குருவிகள் ஒரு நொடிக்கு சுமார் 15 தடவைகள் சிறகடிக்கும்.
19. இவை குளிர்காலத்தில் கூட்டமாக ஒரு புதரில் இரவு பொழுதை கழிக்கின்றன.
20. சிட்டுக்குருவிகள் கூட்டமாக இருக்கும்போது அடிக்கடி புழுதி குளியல், தண்ணீர் குளியல் போன்றவற்றின் மூலம் பொழுதை கழிக்கின்றன.
நம்மை மகிழ்விக்கும் சிட்டுக்குருவியை பாதுகாக்க நாமும் முயற்சிப்போம்.
You May Also Like: