விரதம் என்பது மனமானது பொறிவழி போகாது நின்ற பொருட்டு உணவை சுருக்கியேனும் விடுத்தேனும் மனம், வாக்கு, காயம் எனும் மூன்று நாளும் இறைவனை மெய்யன்போடு வழிபடுதல் ஆகும்.
இந்துக்கள் அனைவரும் தனது இஷ்ட தெய்வங்களுக்கு பல விரதங்களை அனுஷ்டிக்கின்றனர். அந்த வகையில் முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் ஒன்றாக கந்த சஷ்டி விரதம் காணப்படுகிறது.
சஷ்டி விரதம் என்றால் என்ன
சிவமைந்தனான முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் ஒன்றாக கந்த சஷ்டி விரதம் அமைகிறது. முருகப்பெருமான் சூரனை வதம் செய்த நாளினை நினைவுபடுத்தும் முகமாக இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
சஷ்டி விரதம் இருக்கும் போது என்ன சாப்பிடலாம்
கந்த சஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருப்பது அவசியமான விடயமாக காணப்படுகிறது.
அவ்வாறு விரதம் இருக்கும் வேளையில் அவர்கள் உணவாக உட்கொள்பவற்றை பற்றி நோக்குவோம்.
- கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் மதியம் ஒரு பொழுது மட்டும் பச்சரிசி உணவு தயிர் போட்டு உணவாக உட்கொள்ளலாம்.
- காலை மற்றும் இரவில் பால், பழங்கள் சாப்பிடலாம்.
- வயோதிபர்கள் அல்லது நோயாளிகள் விரதம் அனுஷ்டிப்பவர்களாக இருந்தால் அவர்கள் அவர்களுடைய உடல் நிலைக்குத் தகுந்தபடி நடந்து கொள்ள வேண்டும்.
- இரவில் மாத்திரம் பால் பழங்கள் உட்கொள்ளலாம்.
- மதிய வேளையில் சோறு உட்கொண்டு விட்டு இரவில் மாப்பொருள் உணவுகள் அல்லது பழங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
- சஷ்டி விரதத்தின் ஆறாவது நாளான முருகப்பெருமான் சூரனை வதம் செய்த கோலத்தை தரிசனம் செய்துவிட்டு திருச்செந்தூரில் உள்ள கடலில் நீராடி விட்டு அல்லது மற்ற ஊர்களில் உள்ளவர்கள் அவரவர் வீட்டிலோ அல்லது இதர நீர்நிலைகளிலோ நீராடி விட்டு, அன்று இரவு அருகில் உள்ள முருகன் ஆலயம் சென்று தரிசனம் செய்து மாவிளக்கு போட்டுவிட்டு பச்சரிசி சாதம் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.
சஷ்டி விரதத்தின் பலன்கள்
- வேலவன் அருளால் மணப்பேறு உண்டாகும்.
- திருமணமான தம்பதியினர் இவ்விரதத்தை சரியாக அனுசரிப்பதன் மூலம் அவர்களுக்கு மகப்பேறு உண்டாகும்.
- நல்வாழ்வு உண்டாகும்.
- நிறைந்த ஆயுள் கிடைக்கும்.
- தேக ஆரோக்கியமும் புகழும் கிடைக்கும்.
- நினைத்த காரியங்களாகும் நினைத்தபடி நிறைவேறும்.
- வாழ்க்கையில் நிம்மதியும் சந்தோசமும் எப்போதும் கை கூடி வரும்.
- விரதம் அனுஷ்டிப்பவர்களின் புகழ் மென்மேலும் மேன்மையடையும்.
கந்த சஷ்டி விரத நியமங்கள்
தீபாவளி அமாவாசைக்கு மறுநாள் பிரதமை முதல் கந்தசஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும். இந்த ஆறு நாட்களில் பகல் பொழுது மட்டும் உண்டு, காலையும் இரவும் பட்டினியாக இருத்தல் வேண்டும்.
இந்த நாட்களில் துவைத்து உலர்த்திய தூய்மையான ஆடைகளையே அணிய வேண்டும். மெளன விரதம் அனுஷ்டிப்பது சிறப்பு.
மாலையில் தம்பம், பிம்பம், கும்பம் ஆகியவற்றில் முருகப் பெருமானை ஆவாஹனம் செய்து வழிபடவேண்டும். வெல்லத்தாலான மோதகத்தை நிவேதனம் செய்வது விசேஷமானதாகும்.
இந்த ஆறு நாட்களிலும் கந்தபுராணம், கந்தர் கலிவெண்பா, கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் ஆகிய நூல்களைப் படித்தல், கேட்டல் மிகவும் நல்லது. இதனால் வீட்டில் உள்ள தீயசக்திகள் அகன்று சுபிட்சம் குடிகொள்ளும்.
ஆறாம் நாள் கந்தசஷ்டியன்று முழு உபவாசமிருந்து, பூஜைகள் செய்து, ஏழாம் நாள் காலை அன்னதானம் செய்து, விரதத்தை முடிக்க வேண்டும். ஆறு ஆண்டுகள் முறைப்படி இந்த விரதத்தைக் கடைப்பிடித்தல் வேண்டும்.
You May Also Like: