காமராஜர் பற்றி சில வரிகள்

kamarajar patri sila varthaigal

காமராஜர் பற்றி 10 வரிகள்

#1. பாரதத்தின் விடுதலைக்காகப் பாடுபட்டவர், தலைநிமிர்ந்த தமிழகத்தைக் காணவிரும்பி அயராது உழைத்த தன்னலமற்ற தலைவர் கர்மவீரர் காமராஜர் ஆவார்.

#2. காமராஜர் அவர்கள் 1903 ஆம் ஜூலை மாதம் 15ஆம் திகதி விருதுநகரில் பிறந்தார். இவருடைய தந்தையின் பெயர் குமாரசாமி தாயார் சிவகாமி அம்மையார்.

#3. விடுதலை வீரர் திரு.சத்தியமூர்த்தியின் வாரிசாக விளங்கியவர் காமராஜர். ஒத்துழையாமை இயக்கம், அந்நிய துணி எரிப்பு, சட்ட மறுப்பு இயக்கம் போன்ற பல போராட்டங்களில் கலந்துகொண்டார்.

#4. 1920இல் அவருக்கு 18 வயதாக இருந்தபோது அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டார் மேலும் காங்கிரஸ் கட்சியிலும் சேர்ந்தார்.

#5. 1954 ஆம் ஆண்டு அனைவரின் பேராதரவுடன் காமராஜர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றார்.

#6. கட்டாயக்கல்வி, இலவசக்கல்வி, இலவச மதிய உணவுத்திட்டம் எனப்பல திட்டங்களை உருவாக்கி ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தினார்.

#7. தொழித்துறை, நீர்ப்பாசனத் திட்டங்கள், மின் திட்டங்கள் போன்றவற்றிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தினார். தமிழகமெங்கும் பல்வேறு அணைகளைக் கட்டி நீர்வளத்தைப் பெருக்கினார்.

#8. விவசாயம், கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கு இவரது பங்கு மகத்தானது.

#9. லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி அவர்களை பிரதமராய் அரியணை ஏற்றி தான் ஒரு கிங் மேக்கர் என நிரூபித்தார்.

#10. கர்மவீரர், கருப்பு காந்தி, படிக்காத மேதை, பெருந்தலைவர், தென்னாட்டு காந்தி, கல்விக்கண் திறந்த காமராஜர், கிங் மேக்கர் என பல்வேறு சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகின்றார்.

#11. நாட்டு மக்களுக்கு தன்னலம் கருதாமல் நேர்மையாவும் உண்மையாகவும் பெரிதும் பாடுபட்டார். இதனால் தென்னாட்டு காந்தி என்று அன்போடு மக்களால் அழைக்கப்படுபவர் கர்மவீரர் காமராஜர்.

#12. பெருந்தலைவர் காமராஜர் அவர்கள், 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் திகதி தனது 72வது வயதில் காலமானார்.

#13. 1976 ஆம் ஆண்டு இந்திய அரசின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருது மத்திய அரசால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கல்விக்கண் திறந்த கர்ம வீரர் காமராஜரை காலம் முழுவதும் நினைத்துப் போற்றுவோம்.. அவரின் வழி நடப்போம்..!

You May Also Like:

கல்வி கண் திறந்தவர் கட்டுரை

தமிழ் நாட்டிற்காக உயிர் கொடுத்த தியாகிகள்