கழிப்பறை சுத்தம் கட்டுரை

kalivarai sutham

கழிப்பறை சுத்தம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • கழிப்பறையின் முக்கியத்துவம்
  • கழிப்பறையின் வரலாறு
  • கழிப்பறைப் பராமரிப்பு
  • கழிப்பறைத் திட்டங்கள்
  • முடிவுரை

முன்னுரை

ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிலும் அங்கு வாழும் மக்களின் ஆரோக்கியமானது மிக முக்கியமான இடத்தை வகிக்கின்றது. சுத்தத்தை சரிவர பேணுதலும் சுகாதாரமான வாழ்க்கை முறையை வாழுதலுமே ஆரோக்கியத்தின் முதற்படிகள்.

சுகாதாரமான வாழ்க்கை முறையை பேணுவதற்கு கழிப்பறைகள் இன்றியமையாதவையாக விளங்குகின்றன.

மனித இனமானது நாகரீகமடைந்து வருவதற்கதான சிறந்த எடுத்துக்காட்டு கழிப்பறைகளே. அவற்றின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளுதலும் கழிப்பறை பயன்படுத்துதல் மற்றும் பாரமரித்தலிற்கான பூரண அறிவை பெற்றுக் கொள்ளுதல் மிகவும் அவசியமாகும்.

கழிவறைகளின் முக்கியத்துவம்

மனித உடலானது அதன் நீடித்த வாழ்தகமையின் பொருட்டு மனிதக் கழிவுகளான மலம் மற்றும் சிறுநீர் ஆகியவற்றை முறையாக அகற்றுதல் மனிதனின் அன்றாடக் கடமைகளில் ஒன்றாகக் காணப்படுகின்றது.

இக்கழிவுகளை காடுகள், நீர்நிலைகள் போன்ற பொதுஇடங்களில் அகற்றும் போது அதனூடாக நோய்கிருமிகள் உருவாகி வாந்திபேதி, வயிற்றுப்போக்கு போன்ற நோய்களை ஏற்படுத்துகின்றன.

உலகையே ஆட்டுவித்த கொடிய நோயான காலரா இதற்கான மிகச்சிறந்த உதாரணம் ஆகும்.

அதுமட்டுமின்றி இயற்கைச்சுழலில் கழிவகற்றலை மேற்கொள்ளும் போது சுற்றுசூழல் மாசடைகின்றது. இதனால் பொது இடங்களில் கழிவகற்றுவதனை தடுப்பதற்காக கழிவறைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

கழிப்பறை வரலாறு

மனிதன் வளர்ச்சி அடைவதற்கு முற்பட்ட காலகட்டத்தில் மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கு வெட்டவெளிகளையோ, காடுகள் மற்றும் புதர்கள் போன்ற மறைவான இடங்களையுமே பயன்படுத்தினான்.

முன் வரலாற்றுக் காலத்திலே கழிவறைகளை பயன்படுத்தியமைக்கான சான்றுகள் காணப்படுகின்ற போதும், 19ம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளிலேயே தனிப்பட்ட கழிவறைகள் முதல்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டன.

நாளடைவில் அவை வளர்ச்சியடைந்து பல்வேறு நாட்டு மக்களும் கழிப்பறைகளை பயன்படுத்த தொடங்கினர்.

கழிப்பறை பராமரிப்பு

மலசலகூடங்கள் அமைப்பது மட்டுமன்றி அவற்றை சரியாக பயன்படுத்துவதும் அவசியமாகும். தனிப்பட்ட கழிப்பறைகளை கிருமி தொற்றுநீக்கிகள் கொண்டு சரிவர சுத்தம் செய்வது நோய்கிருமிகள் உருவாகுவதனை தடுக்கும்.

பொதுக் கழிப்பறைகளை சுத்தம் செய்வதற்கு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள போதும் பெரும்பாலான சந்தர்பங்களில் அவை அசுத்தமாகக் காணப்படக் காரணம் அவற்றை பயன்படுத்துவோரின் அலட்சியப் போக்கே ஆகும்.

அதிக கவனத்தோடு கழிப்பறைகளை பயன்படுத்துவது ஏனையோருக்கும் பயனுள்ளதாக அமையும். கழிப்பறைகளை சரியாக பயன்படுத்துவதற்கு சிறுவயது முதலே குழந்தைகளிற்கு கற்றுத் தருவது அவசியமாகும்.

கழிப்பறைத் திட்டங்கள்

கழிப்பறை பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபையினால் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் பத்தொன்பதாம் திகதி உலக் கழிப்பறை தினம் அறிமுகப்படுத்துப்பட்டுள்ளது.

எமது நாட்டில் மக்களின் சுகாதாரத்தினை மேம்படுத்தும் பொருட்டு கிராமங்கள் மற்றும் அபிவிருத்தி அடையாத புறநகர் பகுதிகளில் இலவசமாக கழிப்பறை அமைத்து வழங்கும் திட்டம் மற்றும் மானியத்துடன் கழிப்பறை கட்டித் தரும் திட்டம் ஆகியன தூய்மை இந்தியா நலத்திட்டத்தினூடாக அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

முடிவுரை

ஒவ்வொரு நாட்டினதும் சுகாதார மேம்பாடு கழிப்பறைகளிகளிலே தங்கியுள்ளது. தனிநபர்களின் வீடுகள் மற்றும் பாடசாலை, வைத்தியசாலை போன்ற பொது இடங்களில் கழிவறைகளை அமைத்து அவற்றை சுத்தமாக பாராமரிப்பது ஒரு நாட்டின் சிறந்த நிர்வாகத்தையும் அங்கு வாழும் மக்களின் வாழக்கைத் தரத்தையுமே எடுத்துக் காட்டுகின்றது.

எனவே ஒவ்வொரு வீட்டிற்கும் கழிப்பறைகளை அமைத்து அதனை சுகாதாரமாக பராமரித்து நலமுடன் வாழ்வோமாக.

You May Also Like:

தூய்மை இந்தியா கட்டுரை

விவசாயம் பற்றிய கட்டுரை