சனிபகவான் நீதிமான் மட்டுமல்ல ஆயுள்காரனும் அவரே ஆவார். சனியின் நிறம் கருப்பு ஆகும். இவர் ஒருவரின் கர்ம வினையை முழுமையாக அனுபவிக்க உதவுவராவார்.
சனி பகவானானவர் மந்தன், கிழவன், நீலன், அந்தான், சபரி, காரி எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகின்றார். சனியின் பிரதிநிதிகளாக ராகுவும், கேதுவும் செயற்படுகின்றனர்.
சனிபகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் சஞ்சரிப்பார். மிக மெதுவாக நகர்ந்து செல்வார். 12 ராசிகளையும், சுற்றி முடிக்க 30 ஆண்டு காலமாகும்.
இந்த 30 ஆண்டுகளில் ஏழரை ஆண்டுகள் ஏழரைச் சனியாகவும், இரண்டரை ஆண்டுகள் அஷ்டமத்து சனியாகவும், இரண்டரை ஆண்டுகள் கண்ட சனியாகவும் சஞ்சரிப்பார்.
இந்த இரண்டரை வருடம் முழுவதும் சனி தேவர் தான்நின்ற ராசியில் இருந்து சுப மற்றும், அசுப பலன்களை அளிக்கக் கூடியவர் ஆவார். அதாவது வாழ்க்கையில் கடுமையான துன்பத்தையும் அளவற்ற நன்மைகளையும் தருபவர் ஆவார்.
சனிப்பெயர்ச்சியானது 2023 ஜனவரி 14-ஆம் தேதி திருக் கணிதப் பஞ்சாங்கத்தின் படியும், 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வாக்கியப் பஞ்சாங்கத்தின் படியும் நிகழப் போகின்றது. 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்யப் போகின்றார்.
‘சனி கொடுத்தால் அதை யார் தடுப்பார்” என்ற ஜோதிட சொற்றொடர்களுக்கு ஏற்ப உண்மையாக உழைப்பவருக்கு சனி கொடுப்பதை எந்த கிரகமும் தடுக்க முடியாது என்பது ஐதீகம்.
கால புருஷ தத்துவப்படி சனி பகவான் ஜீவனகாரகனாகவும், கர்ம அதிபதியாகவும் இருப்பதால் ஒருவரின் கர்மாவை நிர்ணயிப்பதில் சனிபகவானுக்குப் பெரும் பங்குண்டு.
கர்ம சனி என்றால் என்ன
ராசிக்கு 10-ஆம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்வது கர்ம சனி எனப்படுகின்றது. பொதுவாக பத்தாம் இடம் கர்மஸ்தானம் என்று அழைக்கப்படுகின்றது. ஜோதிடத்தில் இந்த இடத்தில் சனி வருவதால் கர்ம சனி அழைக்கப்படுகின்றது.
கர்ம சனி நன்மை தீமைகள்
கர்மச் சனி காலங்களில் நன்மைகள் அவ்வப்போது நிகழ்ந்தாலும், தீமைகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே உள்ளன. கர்ம சனியால் எந்த ஒரு விடயத்திலும் எதிர்நீச்சல் போட்டு முன்னேறக் கூடிய சூழல் இருக்கும்.
மேலும் அடிமைத் தொழில் செய்யும் நிலை ஏற்படலாம், திடீர் பணி, வேலை இழப்பு ஏற்படலாம். அதேபோல் கோச்சாரத்தில் பத்தாம் இடத்தில் சனி இருந்தால், ஜீவனத்தில் பிரச்சனை உண்டாகும் வாய்ப்புண்டு.
குடும்பத்தில் பொருளாதார வீழ்ச்சி அடையும். இக்காலங்களில் பணப் பிரச்சனை கடன் பிரச்சினை போன்றவை ஏற்படலாம். வீட்டில் அமைதி மற்றும், உறவு நிலைகளில் பிணக்குகள் ஏற்படலாம்.
கர்ம சனி பரிகாரம்
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வட மாலை சாத்தி வழிபாடு நடத்தினால் நல்லது. சங்கடகர சதுர்த்தி அன்று விநாயகருக்கு வன்னி மர சமைத்துக்களால் ஹோமம் செய்து வழிபட்டால் சனியின் அசுவ பலன்களை தவிர்க்க முடியும்.
தினமும் காகத்திற்கு சாதம் வைக்கலாம். அந்த சாதத்தில் நல்லெண்ணெய் கருப்பு எண்ணை கலந்து சிறு உருண்டைகளாக மூன்று உருண்டைகளைப் பிடித்து வைக்கலாம்.
தினமும் சனிக்கிழமை இரவு வேளையில் (இரவு எட்டு தொடக்கம் 9:00 மணி வரை) அரச மரத்தடியில் இரும்பு விளக்கில் நல்லெண்ணெய் விளக்கேற்றி வரலாம்.
You May Also Like: