கருப்பு பணம் என்றால் என்ன

karuppu panam enral enna

ஒரு நாட்டில் கருப்பு பணம் உருவாகதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று சட்டவிரோத செயல்கள் மூலம் வரும் பணம். உதாரணம் லஞ்சம் அதாவது சட்ட விரோதமாகக் கிடைக்கும் பணத்திற்கு ஆவணங்கள் காட்ட முடியாது. அதுபோன்ற பணங்கள் கணக்குகளில் காட்டப்படாது கருப்பு பணமாக மாறும்.

அடுத்து வருமான குறைவாக கணக்கு காட்டுதல், ஏதேனும் ஒரு பொருட்கள் அல்லது சொத்துக்களை விற்பனை செய்யும் போது குறிப்பிட்ட சதவீதம் சரியாக செலுத்தப்பட வேண்டும்.

உதாரணமாக ஒரு கோடி பெறுமதியிலான சொத்துக்களை வாங்கினால் ஆவணங்களில் 50 லட்சம் அல்லது 60 லட்சம் மட்டுமே அதன் விலை காண்பிக்கப்பட்டு அதற்கான வரி மட்டுமே செலுத்தப்படுவதாகும். கணக்கில் காட்டப்படாத மீதமுள்ள பணம் கருப்பு பணமாக மாறுகின்றது.

கருப்பு பணம் என்றால் என்ன

கருப்புப் பணத்திற்கான பொதுவான வரையறை பொருளாதார கோட்பாடுகளில் இல்லை. எனினும் எளிமையான வரையறையாக கருப்புப் பணம் என்பது வரி வசூலிக்கும் அதிகாரிகளிடமிருந்து மறைக்கப்படும் பணம் கருப்புப் பணம் எனலாம்.

கருப்புப் பணத்தை வெள்ளையாக்குதல்

கருப்பு பணம் கையில் இருப்பதினால் எந்த பலனும் இல்லை. எனவே அப்பணத்தை செலவு செய்ய வேண்டும். செலவு செய்யும் நேரத்தில் அந்தப் பணம் சட்ட விரோதமாக உண்டானது என்றோ அல்லது வரியேப்புச் செய்த பணம் என்றோ கூற முடியாது.

இத்தகைய கருப்பு பணத்தை சட்டபூர்வமாக்குவதற்காக மாற்றும் அல்லது கணக்குக்கு உட்படுத்தும் விதமாக மாற்றும் நடைமுறையை கருப்பு பணத்தை வெள்ளையாக்குதல் என கூறுவர்.

சட்டவிரோதம் என்னும் கறை படிந்த பணத்திலுள்ள கரையை நீக்கி சட்டபூர்வமான பணமாக மாற்றுவதற்கு சர்வதேச அளவில் மூன்று படிமுறைகளாக நடத்தப்படுகின்றன. அவையாவன

  1. Placement
  2. Layering
  3. Integration

ஒரு நபர் கையில் ஒரு கோடி ரூபாய் கருப்பு பணம் உள்ளது எனில் அந்த ஒரு கோடி ரூபாயினை பல வங்கிக் கணக்குகளில் சிறிய சிறிய தொகைகளாக அதாவது ஐம்பதாயிரத்திற்கும் குறைவான தொகைகளாக வங்கியில் போடுவார்கள்.

குறைவான பணத்தை போடுவதனால் அந்தப் பணம் எப்படி வந்தது என கேட்கப்படுவதில்லை. அந்த வகையில் அப்பணம் வங்கி அமைப்புக்குள் கொண்டு செல்லப்படுகிறது.

வங்கி அமைப்புக்குள் பணத்தை உட்படுத்தும் முறையைத்தான் Placement என்கின்றனர். இது பெரும்பாலும் மாற்றிக் கொள்ளக்கூடிய படி நிலையாகும்.

layering என்பது பல்வேறு பரிவர்த்தனைகள் மூலம் பொருளாதாரத்தில் பல்வேறு பாகங்களைக் கொண்டு சேர்ப்பதற்கு கையாளப்படும் பல்வேறு முறையாகும்.

உதாரணத்திற்கு ஒருவரிடமுள்ள பணத்தை அவர் ஏதேனும் செயல் மூலமாக அயல்நாட்டு பணமாக மாற்றுவதனை கூறலாம். அல்லது மதிப்புமிக்க சொத்துக்களை வாங்குவது, நிறுவனங்களைத் தொடங்குவது, நிறுவனங்களில் முதலீடு செய்வது போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் பணத்தை உட்படுத்துவதே layering எனப்படும்.

இந்த layering செய்யும் அமைப்புகளின் ஊடாக கருப்பு பணத்தை சட்டபூர்வமான பணமாக அதாவது கணக்கு காட்டும் பணமாக மாற்றுவதே Integration ஆகும்.

உதாரணமாக layering ல் உணவு விடுதியை வாங்கி இருந்தால் அந்த உணவு விடுதியில் நடக்கக் கூடிய வியாபாரமாக 100 உணவுகள் மட்டுமே விற்பனையாகிறது என்றால் அடுத்த மாதத்தில் இருந்து வியாபாரம் 500 அல்லது 1000 உணவுகள் விற்பனையாகும் அளவிற்கு வியாபாரம் நடப்பதாக போலியான ஆவணங்களை உருவாக்கி அதன் மூலம் வந்த லாபம் என்ற விதத்தில் தனது கையில் உள்ள கருப்பு பணத்தை வங்கியில் உட்படுத்துவர்.

You May Also Like:

காலத்தின் அருமை கட்டுரை

தமிழ் நாட்டிற்காக உயிர் கொடுத்த தியாகிகள் கட்டுரை