இந்தியாவில் மகத்தான பல தலைவர்கள் மக்களின் நலனுக்காக வாழ்ந்து வரும் பாடப்பட்டு மாண்டுள்ளனர். கப்பலோட்டிய தமிழனான வ.உ.சிதம்பரனார் நாட்டிற்காக பல தியாகங்களை செய்துள்ளார்.
கப்பலோட்டிய தமிழன் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- ஆரம்ப வாழ்க்கை
- இவரது சேவைகள்
- சிறைவாசம்
- சாதித்தவை
- முடிவுரை
முன்னுரை
இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் பல தலைசிறந்த தலைவர்கள் அரும்பணி ஆற்றி உள்ளனர். அவர்களுள் வ.உ சிதம்பரனார் ஒருவர் ஆவார். இவர் மக்களால் கப்பலோட்டிய தமிழன் என்று சிறப்பு பெயரால் அழைக்கப்படுகிறார்.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதந்திரத்தை பெற்றுக்கொடுக்க போராடி தமிழரின் திறமைகளையும் வீரத்தையும் உலகத்திற்கே பறைசாற்றுவதாக இவரது வரலாறு காணப்படுகிறது.
ஆரம்ப வாழ்க்கை
சிதம்பரனார் இந்தியாவில் ஆங்கிலேயரின் அடிமை ஆட்சி நடைபெற்ற காலப்பகுதியில் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் உள்ள “ஒட்டப்பிடாரம்” என்ற இடத்தில் 1872 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐந்தாம் திகதி செல்வ செழிப்பு மிக்க குடும்பத்தில் மகனாக பிறந்தார்.
இவருக்கு பெற்றோர் இட்ட இயற்பெயர் வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை என்பது ஆகும்.
ஆனால் இவரோ இந்திய தேசத்தின் மீது கொண்ட அளவில்லாப் பற்றினால் தனது பெயரை “வந்தே மாதரம் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை” என்று மாற்றி வைத்துக் கொண்டார்.
இவர் இளமைப் பருவம் முதலில் சிறந்த கல்வி அறிவும் நல்ல குணங்களும் உடைய சிறந்த மனிதராக விழங்கினார். சிறந்த முறையில் கல்வி கற்று வழக்கறிஞராக பணிபுரிந்தார். இவர் வழக்கறிஞராக பணிபுரிந்த காலப் பகுதியில் வறுமையால் வாடிய மக்களுக்கு ஆதரவாகவும், இலவசமாகவும் பணி புரிந்தார்.
இவரது சேவைகள்
ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய திலகர் போன்ற விடுதலைப் போராளிகளை கண்டு அவர்களால் ஈர்க்கப்பட்ட சிதம்பரனார், 1905ஆம் ஆண்டு இந்திய காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட்டங்களை மேற்கொள்ள தொடங்கினார்.
சிவஞானபோதம், திருக்குறள் போன்ற நூல்களுக்கு தமிழில் உரைநடை எழுதி தமிழ் பணியாற்றினார். தனது சுயசரிதையை எழுதி வெளியிட்டதன் மூலம் மக்களை உத்வேகப்படுத்தினார்.
சிறைவாசம்
தவறு இழைத்தவர்களை தண்டனையிலிருந்து தப்பாதும், அப்பாவிகளை தண்டனைகளில் இருந்து காப்பாற்றும் விதத்தில் சட்டரீதியாக வாதாடி மற்றும் பக்க சார்பாக நடந்து கொண்ட நீதிபதியை பதவியில் இருந்து விலக செய்தவராகக் காணப்பட்டவர் சிதம்பரனார் ஆவார்.
ஆனால் ஆங்கில அரசினுடைய அநீதிகளுக்கும், கொடுமையான ஆக்கிரமிப்புக்கும் எதிராக குரல் கொடுத்தமைக்காகவும் மக்களிடையே சுதந்திர தாகத்தை ஏற்படுத்தியமைக்காகவும் சிறையில் அடைத்து பல சித்திரவதைகள் செய்யப்பட்டு நோயாளியாக இறுதிக்காலத்தில் வறுமையில் தவித்தார்.
சாதித்தவை
உலகில் முதன் முதலில் கப்பல் நிறுவனத்தையே நடாத்திய முதல் தமிழனாக இவர் காணப்படுகின்றார். இதனாலே “கப்பலோட்டிய தமிழன்” என்று அழைக்கின்றார்.
இந்திய தேசியவாத கட்சியினுடைய தென்னிந்தியப் பகுதியின் செயலாளராக முதன் முதலில் தெரிவு செய்யப்பட்டு பதவி வகித்தவர் வ. உ சிதம்பரனார் ஆவார்.
அத்துடன் இந்தியாவில் தமது ஆட்சியை நீடிக்க ஆங்கிலேயர்கள் இந்துக்களையும் முஸ்லீம்களையும் பிரிக்க முற்பட்டு வங்கப் பிரிவினை தோன்றினார்கள் இதனை எதிர்த்து போராடி அவற்றை ஓரளவுக்கு சமப்படுத்தினார்.
முடிவுரை
பல தலைவர்கள் மக்களின் நலனுக்காக தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்து மகத்தான பல சேவைகளை செய்து உள்ளனர். இவர்களது சேவைகள் என்றும் மறக்கப்பட முடியாத தியாகங்ள் ஆகும். இவர்களது தியாகமே இந்திய நாட்டிற்கு விடுதலையாக கிடைத்தது.
இவ்வாறான தலைவர்களின் கொள்கைகள் மதிக்கப்பட வேண்டியவை ஆகும். தேசப்பற்றும் சுயநலமில்லாத அன்பும் செய்யும் தொழிலே நேர்மையும் அடக்கு முறைக்கு எதிராய் போராடும் இயல்பும் என பல காணப்படுகின்றன. இவற்றை நாம் கற்று சரிவர செயல்பட வேண்டும்.
You May Also Like: