கணினியும் அதன் பயன்பாடும் கட்டுரை

kanini katturai in tamil

இன்றைய உலகில் கணினி முக்கியமான ஒரு தொழில்நுட்ப கருவியாகவே காணப்படுகின்றது. அதாவது தற்கால தொழில்நுட்ப உலகினை இயக்குவதற்கான உந்து சக்தியாகவும் இந்த கணினியை காணப்படுகின்றது. இதன் மூலம் மக்கள் பெறும் பயன்கள் எண்ணற்றவையாகவே காணப்படுகின்றன.

கணினியும் அதன் பயன்பாடும் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • கணினியின் தோற்றம்
  • கணினியின் படிமுறை வளர்ச்சி
  • கணினியின் கூறுகள்
  • கணினியின் பயன்பாடுகள்
  • முடிவுரை

முன்னுரை

மனிதனின் உழைப்பு, காலம் (நேரம்) இன்பவற்றினை சேமிக்கும் ஒரு கருவியாகவே கணினி காணப்படுகின்றது. இது இருபதாம் நூற்றாண்டில் மிகவும் சிறப்பான ஒரு கண்டுபிடிப்பு என்றே குறிப்பிட வேண்டும்.

தற்கால உலகில் மருத்துவம், தொழில்நுட்பம், வானவியல், கணிதவியல் போன்ற அனைத்து துறைகளிலும் கணணியின் பயன்பாட்டினை காணலாம். அதாவது நவீன யுகத்தில் கணினி பயன்படாத துறைகளே இல்லை எனும் நிலை உருவாகியுள்ளமையை காண முடிகின்றது.

கணினியின் தோற்றம்

கணினி பொறியின் தந்தையாக சார்ல்ஸ் பாபேஜ் என்பவரை காணப்படுகின்றார். இவர் 1837  ஆம் ஆண்டு கணித ஏரணச் செயலகத்தினையும் (ALU), அடிப்படை கட்டுப்பாட்டு அமைப்புகளையும், உள்ளிணைந்த நினைவகத்தினையும் கொண்டு அனலிட்டிக்கல் இன்ஜின்(Analytical Engine) என்ற கருவியினை வடிவமைத்தார். இதுவே கணினி வடிவமைக்க அடிப்படையாக அமைந்தது.

இதற்கமைமாகவே ஜே. பிரெஸ்பர் எகெட் மற்றும் ஜான் மௌச்சிலி ஆகிய இருவரும் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் 1943 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ENIAC ஐ வடிவமைக்கத் தொடங்கினர். இது 1800 சதுர அடி இடுப்பரப்பில் சுமார் 18,000 வெற்றுக் குழல்களுடன் 50 டன் எடையில் வடிவமைக்கப்பட்டது.

ENIAC ஒரு கணினி பொறிக்கான அனைத்து அம்சங்களையும் கொண்டு செயல்படும் விதத்தில் இருந்தமையினால் இதுவே முதல் கணினியாக கருதப்படுகின்றன.

கணினியின் படிமுறை வளர்ச்சி

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியானது கணினி பொறியின் வளர்ச்சியினை தீர்மானிப்பதாகவே காணப்படுகின்றது. பல்வேறு வடிவமைப்பு கட்டங்களின் அடிப்படையில் கணினி பொறி படிமுறை வளர்ச்சி கண்டுள்ளமையினை பார்க்க முடிகின்றது.

முதலாவது கட்டம் 1940 தொடக்கம் 1950 வரையான காலமாகும். இதில் வெற்றிடக் குழல்கள் தான் முதன்மை சாதனமாக பயன்படுத்தப்பட்டதோடு கணினி அளவில் பெரியதாகவும், அதிக வெப்பம் காரணமாக செயல் இழக்க கூடியதாகவும், இயந்திர மொழி பயன்படுத்தக் கூடியதாகவும் காணப்பட்டது.

இரண்டாவது கட்டம் 1956 தொடக்கம் 1964 வரையான காலமாகும். இங்கு திரி தடைகள் முதன்மை சாதனமாக விளங்கின. முதல் படிமுறையினை விட ஒப்பிடும்போது அளவில் சிறியதாகவும், குறைந்த அளவு வெப்பத்தினை வெளியிடுவதாகவும் இயந்திர மொழி மற்றும் அசெம்பிளி மொழி பயன்படுத்தப்பட்டதாகவும் கணினிகள் காணப்பட்டன.

மூன்றாவது கட்டம் 1964 தொடக்கம் 1971 வகையான காலமாகும். இங்கு ஒருங்கிணைந்த கூறுகள் முதன்மை சாதனமாக பயன்படுத்தப்பட்டன. கணினி பொறிகள் அளவில் சிறியதாகவும், விரைவாக செயல்படும் மற்றும் அதிக நம்பகத்தன்மையானதாகவும், உயர்நிலை மொழி பயன்படுத்தப்படுவதாகவும் காணப்பட்டன.

நான்காவது கட்டம் 1971 தொடக்கம் 1980 வரையான காலமாகும் முன் செயலி இங்கு முதன்மை சாதனம் ஆகும். கணினி பொறி சிறியதாகவும், வேகமானதாகவும், கையடக்க கணினி பொறிகள் உருவாக்கப்பட்ட கால பாதியாகவும் இது காணப்பட்டன.

ஐந்தாம் கட்டம் 1980 தொடக்கம் இன்றுவரை ஆன காலப்பகுதியாகும். இங்கு முதன்மை சாதனமாக மிகப்பெரிய அளவிலான ஒருங்கிணைந்த சுற்றுகள் பயன்படுத்தப்படுகின்றன.

கணினி பொறிகள் அளவில் மிகவும் கணிசமாக குறைக்கப்பட்டதோடு செயற்கை நுண்ணறிவு மற்றும் நிபுணர் அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது, அதி சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதாகவும் காணப்படுகின்றது.

கணினியின் கூறுகள்

கணினி என்பது வன்பொருள், மென்பொருள் ஆகியவற்றின் கலவையாகவே காணப்படுகின்றது. அதாவது கணினியில் காணப்படும் பருப்பொருட்களான விசைப்பலகை (Keyboard) திரையகம் (monitor) மத போர்ட் நினைவகம்(memory) போன்றவை வன்பொருட்களாகவும்,

மென்பொருட்கள் என்பது கணினிக்கு வழங்கப்படும் கட்டளை அல்லது கட்டளைகளின் தொகுப்பு எனலாம் ஒரு கணினியின் இயக்கத்துக்கு வன்பொருள் மற்றும் மென்பொருள் ஆகிய இரண்டும் துணை புரிகின்றன.

கணினியின் பயன்பாடுகள்

இன்று கணினியினை இயக்குவதற்கான திறன் அடிப்படையிலேயே ஆண்களும், பெண்களும் வேலை வாய்ப்புகளை பெறும் நிலை காணப்படுகின்றன. எனவே கணினி இன்றி இயங்க முடியாத அளவுக்கு அதன் பயன்பாடுகள் காணப்படுகின்றன.

ப்ரோகிராமிங், டிசைனிங், இணையதள வடிவமைப்பு, புத்தக வடிவமைப்பு, மென்பொருள் உருவாக்கம் போன்றவற்றிற்காக கணினி பயன்படுத்தப்படுகின்றது.

மேலும் தொழில்நுட்பம் சம்பந்தமான தரவுகளை மக்கள் சேகரிக்கவும், அவற்றினை விருத்தி செய்யவும், தகவல்களை உடனுக்குடன் அறியவும், அதனை பரிமாறிக் கொள்வதற்கும், கணக்கீடுகளை செய்வதற்கும், இயந்திர பழுதுகளை சரி செய்யவும், கணினி  பயன்படுத்தப்படுதோடு

ஓய்வு நேரத்தை பயன்படுத்தும் வகையிலும் அறிவு சார் விளையாட்டுக்கள் மற்றும் இசை திரைப்படம் போன்ற அனைத்து விதமான தேவைகளையும் நிறைவேற்றக்கூடிய ஒன்றாகவுமே இந்த கணினி காணப்படுகின்றது.

முடிவுரை

தற்கால நவீன உலகில் கணினி பற்றிய கல்வி அறிவு இன்றியமையாத ஒன்றாகவே காணப்படுகின்றது.

அதாவது போட்டி நிறைந்த இந்த உலகில் தமது வேலை வாய்ப்பு களுக்காகவும், தம்முடைய தனிமனித முன்னேற்றத்தினை விருத்தி செய்து கொள்வதற்காகவும், எமது வேலைகளை இலகு படுத்திக் கொள்வதற்காகவும்,

தம்முடைய கல்விசார் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காகவும், வணிகங்களை மேற்கொள்வதற்காகவும், இணையதளதில் வியாபாரங்களை மேற்கொள்ளவும் மற்றும் எமது நாட்டின் அபிவிருத்தியினை முன்னேற்றுவதற்கும் இந்த கணினி கல்வி அறிவு அவசியமான ஒன்றே என கூற முடியும்.

You May Also Like:

நான் விரும்பும் நூல் திருக்குறள்

அறிஞர் அண்ணா பற்றிய கட்டுரை