ஒலி மாசுபாடு கட்டுரை

oli masupadu katturai in tamil

ஒலியானது நம் அன்றாட வாழ்விற்கு தேவையான ஒன்றாகும். ஆனால் சத்தம் விரும்பத்தகாதது. அதிகப்படியான, விரும்பத்தகாத, அத்துடன் காதுகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் சத்தமே ஒலி மாசுபாடாகும். இது மனிதனின் சாதாரண செயல்களான தூங்குதல், உரையாடல் போன்றவற்றிற்கு இடையூறுகளை உண்டாக்குகிறது.

ஒலி மாசுபாடு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • ஒலி மாசுபாட்டின் காரணங்கள்
  • ஒலி மாசுபாட்டின் விளைவுகள்
  • ஒலி மாசுபாட்டினைத் தடுக்கும் முறைகள்
  • சட்டத்தின் பங்கு
  • முடிவுரை

முன்னுரை

இன்றைய ஒலி மாசுபாட்டில் தொழிற்புரட்சி, நகரமயமாதல், மக்களின் வாழ்க்கைமுறை ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

சத்தமான இசை, தொலைக்காட்சிப்பெட்டியின் சத்தம், மக்கள் தொலைபேசியில் பேசுவது, போக்குவரத்து, இரவு நேரங்களில் நாய்கள் குரைப்பது போன்றவை ஒலி மாசுபாட்டின் வடிவங்கள் ஆகும்.

மற்ற மாசுபாடுகள் இயற்கை வளத்தின் அளவின் படியே நடக்கின்றன ஆனால் ஒலி மாசுபாடு பெரும்பாலும் நேரடி விளைவுகளையே மனிதர்களிடம் ஏற்படுத்துகிறது.

ஒலி மாசுபாட்டின் காரணங்கள்

ஒலி மாசுபாட்டின் வணிக மற்றும் தொழிற்துறை நடவடிக்கைகளாக தொழிற்சாலைகளில் இயங்கும் பெரிய இயந்திரங்களின் ஒலி, ஜெனரேட்டர்கள், அரைக்கும் ஆலைகள், கம்பிரஸ்சர்கள் போன்ற ஒலிகளை கூறலாம்.

மோசமான நகர்புற திட்டமிடல்களான நெருக்கடியான வீடுகள், பெரிய குடும்பங்கள் சிறிய இடத்தினை பகிர்ந்து கொள்ளுதல், அடிப்படை தேவைகளுக்காக நடைபெறும் சண்டைகள் போன்றவையும் அத்துடன் வாகனப்போக்குவரத்தும் சமூகத்தின் அமைதியான சூழலை கடுமையாக பாதிக்கின்றன.

சமூக நிகழ்வுகளான திருமணம், விருந்து உபசாரங்கள், வழிபாட்டிடங்கள் போன்ற நிகழ்வுகளையும் கூறலாம்.

ஒலி மாசுபாட்டின் விளைவுகள்

நம்மால் ஒரு குறிப்பிட்ட அளவு ஒலியினை மட்டுமே கேட்க முடியும். ஆனால் தொடர்ந்து அதிக அளவு ஒலியை கேட்க நேர்ந்தால் ஒலியானது நம்மிடம் நிரந்தர காதுகேளாமையை ஏற்படுத்திவிடும்.

அலுவலகங்கள், கட்டடங்கள் போன்றவற்றால் ஏற்படும் ஒலி மாசுபாடானது மனிதர்களின் உளவியல் சுகாதாரத்தை பாதிக்கின்றன. இது தூக்கமின்மை, தலைவலி, மன அழுத்தம், சோர்வு, இரத்த அழுத்தம், வித்தியாசமான நடவடிக்கை போன்றவற்றிற்கு காரணமாகின்றது.

இதனால் மனிதன் மட்டுமல்லாமல் இடம்பெயரும் விலங்குகள் மற்றும் பறவைகளின் ஒலியானது ஒலி மாசுபாட்டினால் பாதிப்படைந்து அவற்றின் பாதையை மாற்றி அவற்றின் அழிவிற்கு காரணமாகின்றன.

ஒலி மாசுபாட்டினைத் தடுக்கும் முறைகள்

அதிக ஒலி எழுப்பும் தொழிற்சாலைகள், உற்பத்தி இடங்கள் போன்ற இடங்களில் ஒலியை கட்டுப்படுத்தும் அறைகளை கட்ட வேண்டும். வீடுகளில் ஒலி எழுப்பும் கருவிகளை படுக்கை அறை, வசிப்பறையை விட்டு தள்ளி வெளிப்புறத்தில் அமைக்க வேண்டும்.

வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் மற்றும் சேதமடைந்த எச்சரிக்கை ஒலிப்பான்களையும் தடை செய்ய வேண்டும். சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் முழுவதும் மரங்களை வளர்க்க வேண்டும்.

சட்டத்தின் பங்கு

அமெரிக்க நாட்டில் தற்போது நெடுஞ்சாலை மற்றும் விமானப்போக்குவரத்திற்கான சத்தம் விளையும் அளவைக் குறைப்பதற்கான கட்டடப் பணிகளுக்கான சூத்திரங்கள், சட்ட குறியீடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

மேலும் ஒவ்வொரு தனி நாட்டின் அரசும் கட்டிடப்பணிகள் நகரத்திட்டமிடல் மற்றும் போக்குவரத்து திட்டங்களுக்கான சிறப்பு அரசு ஆணைகளை செயல்படுத்தி வருகின்றன.

முடிவுரை

வீடுகளில் தொலைக்காட்சிகள், வானொலிகள், இசை அமைப்புக்களின் ஒலிகளை குறைப்பது நம் ஒவ்வொருவரினதும் முக்கிய கடமையாகும் என்பதனை உயர்ந்து எல்லோரும் செயல்பட வேண்டும். ஒலி மாசில்லா சுற்றுச்சூழலை உருவாக்கி நலமோடு வாழ்வோம்.

You May Also Like:

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் கட்டுரை

உணவே மருந்து கட்டுரை