நாம் வாழும் இந்த உலகத்தின் இயக்கத்துக்கு மிகவும் பிரதான காரணியாக இந்த ஐம்பூதங்களே காணப்படுகின்றன. உலகில் வாழும் ஒவ்வொரு உயிர்களிடமும் பின்னிப்பிணைந்த அமைப்பிலேயே இந்த பஞ்சபூதங்கள் காணப்படுகின்றன. அவற்றினை எவராலும் கட்டுப்படுத்துவது முடியாத செயலாகும்.
ஐம்பூதங்கள் பற்றி கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- ஐம்பூதங்கள்
- ஐம்பூதங்களின் முக்கியத்துவம்
- மனிதனுக்கும் ஐம்பூதங்களுக்கும் இடையிலான தொடர்பு
- நவீன யுகத்தில் ஐம்பூதங்கள்
- முடிவுரை
முன்னுரை
நாம் வாழும் இந்த உலகானது ஐம்பூதங்களினாலேயே உருவாக்கப்பட்டுள்ளது. என்பதனை, தொல்காப்பியத்தில் வரும் “நிலம், தீ, நீர், வளி, விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்” என குறிப்பிடப்படுவதன் ஊடாக அறிந்து கொள்ள முடிகின்றது.
அதாவது மனித உடலானது ஐம்பூதங்களின் சேர்க்கையினால் ஆனது, இவற்றின் இயக்கத்தால் தான் உடல் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இத்தகைய ஐம்பூதங்கள் எப்போதுமே சிறப்பு வாய்ந்தவையாகும்.
ஐம்பூதங்கள்
பொதுவாகவே ஐம்பூதங்கள் என்பவை ஆகாயம், காற்று, நீர், நிலம், நெருப்பு ஆகிய ஐந்துமாகும். இந்த வகையில் இவை ஒவ்வொன்றையும் பின்வருமாறு நோக்கலாம்.
ஆகாயம்: ஆகாயமானது மற்ற நான்கு பூதங்களான நீர், நிலம், தீ, காற்று ஆகியவற்றின் தோற்றத்திற்கு காரணமாக அமைகிறது. ஆகாயத்தினை முடிவில்லாத வெட்டவெளி மற்றும் பேரண்டம் என்றும் அழைப்பர்.
காற்று: மனிதன் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான ஒன்றாகவே காற்று காணப்படுகின்றது. காற்றினை வளி என்றும் அழைப்பர். காற்று இன்றி இந்த பூமி இயங்குவது கடினமானதாகும்.
நீர்: தண்ணீர் எனவும் அழைக்கப்படுகின்றது. இதனின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகும். எனவே உலக வாழ்க்கைக்கு இன்றியமையாதது எனலாம்.
நிலம்: நிலத்தை பூமி மண் என்றெல்லாம் அழைப்பர். இந்த நிலமானது.தண்ணீர், பலவகையான உலகங்கள், கனிமப் பொருட்கள், நாம் உண்ணும் உணவுகளை விளையச் செய்தல் போன்ற செயற்பாடுகளின் மூலம் மனிதனுக்கு உதவியாகவே உள்ளது.
தீ: நெருப்பு அக்கினி என்றும் அழைக்கப்படும். எல்லா பொருட்களையும் எரித்து சாம்பலாக்கும் வல்லமை கொண்டதாக இந்த தீ காணப்படுகின்றது. இந்துமத வழக்கப்படி தங்களுடைய பிரார்த்தனைகளையும், கோரிக்கைகளையும் இறைவனுக்கு எடுத்துக் கூறும் சிறப்பு தன்மை வாய்ந்ததாக நெருப்பு காணப்படுகின்றது.
ஐம்பூதங்களின் முக்கியத்துவம்
மனிதனுடைய அன்றாட வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் அவனுடன் பின்னிப்பிணைந்ததாகவே இந்த ஐம்பூதங்கள் காணப்படுகின்றன. வளி இல்லாத வாழ்க்கையை நினைத்தும் பார்க்க முடியாது.
எனவே நாம் சுவாசிக்க காற்று அவசியமாகும். பூமிக்கு மழையை பொழிவிக்கவும், பூமியின் வெப்பநிலையை சீர்படுத்தவும் ஆகாயம் முக்கியமானதாகும். நீரின்றி அமையாது உலகு என்பதன் மூலம் நீரின்றி இவ்வுலகம் இயங்காது என்பதனை புரிந்து கொள்ள முடியும்.
நிலம் என்பது பூமாதேவி ஆகும். எனவே எங்களை தாங்கி அரவணைக்கும் ஒன்றாகவே நிலம் காணப்படுகின்றது. மனிதன் சமைத்து உண்பதற்கு அடிப்படையாக அமைந்த ஒரு விடயமே இந்த தீ தான். இதன் கண்டுபிடிப்பின் பின்னரே மனித வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டன.
மனிதனுக்கும் ஐம்பூதங்களுக்கும் இடையிலான தொடர்பு
எம்முடைய முன்னோர்கள் தங்களுடைய வாழ்க்கைக்கு உறுதுணையாக அமைந்த ஐம்பூதங்களையும், இயற்கையையும் அரவணைத்தவர்களாகவே வாழ்ந்தனர். ஆகவே பொதுவாகவே பஞ்சபூதங்களின் கோலம் சீராக இருந்தால் தான் மனித வாழ்க்கை சீராக இருக்கும் என்பதனை புரிந்து செயல்பட்டனர்.
ஆனால் இன்று மனிதன் விஞ்ஞான வளர்ச்சியில் இயற்கையினை மாற்றி அமைக்க பஞ்சபூதங்களோடு முட்டி மோதி கொண்டிருப்பதனை காணமுடியும். ஆனாலும் பஞ்சபூதங்களின் உதவி இன்றி மனிதனின் அறிவியல் என்பது சாத்தியமற்றதாகவே காணப்படுகின்றது.
நவீன யுகத்தில் ஐம்பூதங்கள்
மனிதர்கள் இன்று வாழ்ந்து கொண்டிருப்பது ஒரு தொழில்நுட்ப யுகமாகும். இதில் விஞ்ஞானங்களின் வளர்ச்சிக்கும், தொழில்நுட்பத்துக்குமே முக்கியம் அளிக்கப்படுகின்றது. இதன் காரணமாக அறிவியல் பல மடங்கு வளர்ந்தாலும் கூட இயற்கையை கட்டுப்படும் ஆற்றல் மனிதர்களுக்கு கிடைப்பதில்லை.
ஆனால் இதனை உணராது மனித செயற்பாடுகளினால் மனிதன் பஞ்சபூதங்களை மாசுபடுத்திக் கொண்டே இருக்கின்றான்.
முடிவுரை
நாம் வாழும் இந்த உலகானது இயற்கையோடு பின்னிப்பிணைந்து இருப்பதாலே அதன் உண்மையான அழகு வெளிப்படுகின்றது. இன்று மனிதன் இந்த ஐம்பூதங்களின் முக்கியத்துவத்தை உணராது அதனோடு போராடி தங்களுடைய விஞ்ஞான சாதனைகளை படைக்க முயல்கின்றான்.
இதனால் பல விளைவுகளையும் எதிர் நோக்க வேண்டிய உள்ளது. எனவே இயற்கைக் கோலம் சீராக இருந்தால் தான் மனித குலமும் சிறப்பாகவும், அமைதியாகவும் வாழ முடியும். என்பதனை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
You May Also Like: