நாம் வாழும் இந்தியா நாடானது அனைத்து விதமான வளங்களும் பொருந்திய பரப்பளவில் மிகவும் பெரிய ஒரு பிரதேசமாகும். இந்திய நாடானது வல்லரசுகளின் பட்டியலில் முதன்மையான இடத்தை பெற வேண்டும் என்பதே எனது எதிர்கால இந்தியா பற்றிய கனவாகும்.
எனவே தற்காலங்களில் நிகழும் இந்த அரசியல் ஊழல்களை இல்லாமல் செய்வதன் மூலமாகவே எம் நாட்டில் வறுமையற்ற செழிப்பான ஒரு சமுதாயத்தினை கட்டி எழுப்ப முடியும்.
எனது பார்வையில் எதிர்கால இந்தியா கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- இந்தியாவின் சிறப்பம்சங்கள்
- சுற்றுச்சூழல் கட்டமைப்பு
- சமூக கட்டமைப்பு
- வேலை வாய்ப்புகள்
- முடிவுரை
முன்னுரை
இந்தியா தற்போது சுதந்திரமாக செயல்படுவதற்கு காரணமாக அமைந்தது சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகமே ஆகும். எனவே அவர்களின் கனவு போல் இந்தியாவை ஒற்றுமையாகவும், பசுமையானதாகவும் மாற்றுவது எம்மனைவரதும் கடமையாகும்.
எனவே எனது பார்வையில் எதிர்கால இந்தியாவானது, உலகில் உள்ள ஏனைய நாடுகள் வியந்து பார்க்கும் அளவுக்கு முன்னேற்றமடைந்து, தலை சிறந்த நாடாக விளங்கும் என்பதாகும்.
இந்தியாவின் சிறப்பம்சங்கள்
அன்னிய தேசத்தவர்கள் பல வருடங்களுக்கு முன்பே நம் இந்தியா மீது படையெடுத்து வந்தமைக்கான காரணம் இந்தியாவில் உள்ள வளங்களை கைப்பற்றவே ஆகும்.
அதாவது இந்தியாவில் கலைகளுக்கும், கலைஞர்களுக்கும் மட்டுப்பாடுகளே இல்லை, கலாச்சாரமும் பண்பாடும் இன்றளவும் உலக அரங்கில் தன்னுடைய தனித்தன்மையை நிலைநாட்டிக் கொண்டிருக்க கூடியதாக இருத்தல், தொழில் வளர்ச்சியில் முன்னேற்றமடைந்திருத்தல், இளைஞர்கள் வளம் அதிகமாகக் கணாப்படல் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டமைந்ததாகவே இந்திய தேசம் காணப்படுகிறது.
சுற்றுச்சூழல் கட்டமைப்பு
மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு அவனைச் சூழ உள்ள சூழலும் சிறந்த, நல்லதொரு கட்டமைப்பில் காணப்பட வேண்டும். அதாவது எம்மைச் சூழவுள்ள இயற்கைச் சூழலினை பாதுகாக்க வேண்டியது எம் அனைவரதும் பொறுப்பாகும்.
நாம் இயற்கை சூழல்களை மாசுபடுத்துதல், காற்றினை மாசுபடுத்துதல், உலகத்தை வெப்பமயமாக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுதல், போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதனால் தான் உலகில் பல்வேறு கொடிய நோய்களும், நீர் பற்றாக்குறை, வளி பற்றாக்குறை போன்றனவும் ஏற்படுகின்றன.
எனவே நாம் அனைவரும் எதிர்கால இந்தியா சிறந்து விளங்குவதற்காக இவ்வாறான செயற்பாடுகளில் இருந்து விலகி, இயற்கையை பாதுகாப்போம். இதனால் எமது வாழ்வும் ஆரோக்கியமடையும், எதிர்கால இந்தியாவும் வளர்ச்சி அடைந்து சிறப்புற்று விளங்கும்.
சமூக கட்டமைப்பு
நாம் வாழும் சமூகமானது இன்று பல்வேறு இனம், சாதி, மதம் என பிளவுபட்டு, ஒருவரை ஒருவர் பிரிந்து நடக்கும் நிலைமையிலேயே காணப்படுகின்றது. நம்முடைய இந்தியாவில் இந்த சாதி வெறி தலை தூக்கி உள்ளது. சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் அதிகமாகவே நிகழ்கின்றன.
எனவே இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு எம்முடைய பாரதியாரின் வாசகங்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு, இந்த சாதிகளை ஒழித்து, மனிதர்கள் என்ற அடிப்படையில் நாம் அனைவரும் இந்தியாவில் ஒற்றுமையாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் என்பதே எனது எதிர்கால இந்தியா பற்றிய எதிர்பார்ப்பாகும்.
வேலை வாய்ப்புகள்
தற்போது நிகழ்கின்ற இந்த வேலையின்மை என்ற பிரச்சினை எதிர்கால இந்தியாவில் அழிக்கப்பட வேண்டும். அத்தோடு அவரவர் கற்ற கல்வி தகமைகளுக்கு ஏற்றாற் போல் வேலை வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும்.
வறுமை என்ற அவல நிலை ஒழிக்கப்பட்டு மக்கள் அனைவரும் அவரவர்களுக்கு ஏற்றாப்போல சுயதொழில்களை புரிவதற்கு அதற்கான ஊக்குவிப்புகளையும், உதவிகளையும், பயிற்சிகளையும், கடன் வசதிகளையும் அரசாங்கம் வழங்க வேண்டும்.
மக்களுடைய வேலைவாய்ப்பு தேவையை சரியான முறையில் பூர்த்தி செய்தால் நம்முடைய நாடு குற்றச்செயல்கள் அற்ற தூய்மையான நாடாகவே மாறிவிடும் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை.
முடிவுரை
எமது தாய் நாடான இந்தியாவானது, ஏனைய நாடுகள் பார்த்து வியந்து போகும் அளவுக்கு பல்வேறு வளங்களை கொண்டு அமைந்ததாகவே உள்ளது.
எனவே எம்முடைய நாட்டில் நிகழக்கூடிய லஞ்சம், ஊழல் போன்றவற்றினை இல்லாமல் செய்து மக்கள் மத்தியில் ஒற்றுமையும், சுபீட்சத்தையும் ஏற்படுத்தி சிறந்த ஒரு நாடாக எதிர்கால இந்தியாவை கட்டி எழுப்புவது எம்மனைவரதும் கடமையாகும்.
You May Also Like: