இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உயிர்களுக்கு இடையிலான இணைப்பை உறவு எனலாம். மனித வாழ்க்கையில் உறவுகள் பல வகைகளாக காணப்படுகின்றன.
மிகவும் நெருக்கமான உறவு முறைக்கு பெற்றோர்-பிள்ளைகள், கணவன்-மனைவி, உடன் பிறந்தவர்கள் போன்ற உறவு முறைகளை குறிப்பிடலாம்.
அயலார், தூரத்து பந்தங்கள் போன்றவர்களை சற்று நெருக்கம் இல்லாத உறவுகளாக குறிப்பிடலாம்.
மனிதன் ஒரு சமூக பிராணியாவான் மற்றவர்களின் துணையின்றி ஆரோக்கியமான வாழ்வை வாழ முடியாது. எனவே உறவுகள் என்பது ஒவ்வொருவருக்கும் அவசியமான ஒன்றாகும்.
“குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை” என்றொரு முதுமொழி உண்டு. இயன்றவரை பிறருடன் சிறந்த உறவு முறையை பேணி மகிழ்வாக வாழ்வோம்.
உறவு வேறு சொல்
- பந்தம்
- கேள்
- சுற்றம்
- சொந்தம்
- ஒக்கல்
You May Also Like: