உலகின் மிகத் தொன்மையான மொழிகளில் ஒன்றாக காணப்படும் தமிழ்மொழியானது அறிவடையாமல் பல அறிஞர்கள் அதனை காத்துள்ளனர்.
உ.வே.சாமிநாதய்யர் பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- ஆரம்ப வாழ்க்கை
- தமிழ்ப்பணி
- பதிப்பித்த நூல்கள்
- சிறப்பு
- முடிவுரை
முன்னுரை
தமிழ்மொழி வளர்த்த அறிஞர்களால் ஒருவராக காணப்படுகின்ற உ.வே.சாமிநாதய்யர் “தமிழ் தாத்தா”, “தமிழ் முனிவர்” எனவும் அழைக்கப்படுகின்றார்.
இவர் ஏட்டு பதிவுகளில் அழியும் நிலைகளில் காணப்பட்ட பிரதானகால தமிழ் இலக்கியங்கள் பலவற்றை தேடி சேகரித்து அவற்றை அடுத்து வரும் சந்ததியினர்கள் படித்து விளங்கத்தக்க வகையில் புத்தகங்களாக வெளியிட்ட மகானாக காணப்படுகின்றார்.
ஆரம்ப வாழ்க்கை
உ.வே.சா அவர்கள் 1855ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி, தமிழ்நாட்டின் கும்பகோணத்துக்கு அருகே உள்ள உத்தமதானபுரம் எனும் ஊரில் வசித்த வேங்கடசுப்பையர் மற்றும் சரஸ்வதி அம்மாள் என்ற தம்பதியினருக்கு மகனாய் பிறந்தார்.
இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் வேங்கடரத்தினம். இவர் சிறுவயதில் விளையாட்டிலும், இசையை கற்பதிலும் ஆர்வம் உடையவராக காணப்பட்டார்.
இவர் தனது தொடக்க தமிழ்க் கல்வியையும், இசைக்கல்வியையும் சொந்த ஊரில் காணப்பட்ட ஆசிரியர்களிடத்தே கற்றார்.
அதன் பின்னர் அவர் தன்னுடைய 17ஆம் வயதில் தஞ்சாவூரில் காணப்பட்ட திருவாவடுதுறை சைவ ஆதீனத்தில் தமிழ் கற்பித்த புகழ்பெற்ற மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களிடம் ஐந்து ஆண்டுகள் கல்வி கற்று தமிழறிஞர் ஆனார்.
இவரது தமிழ்ப்புலமையை கண்டு இவரது ஆசிரியர் இவருக்கு இட்ட பெயர் சாமிநாதன் ஆகும். கும்பகோணம் கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரியிலும் ஆசிரியராக பணியாற்றினார்.
தமிழ்ப் பணி
சங்க இலக்கிய நூல்களை தேடி கண்டறிந்து புதுப்பிக்க முடிவு செய்தார். “வேணுவனலிங்க விலாசச்சிறப்பு”என்கின்ற நூலில் எழுதப்பட்ட 86 பாடல்களில் 8 பாடல்களை இவர் எழுதியுள்ளார். இது இவருடைய முதல் நூலாகவும் காணப்படுகிறது.
சீவகசிந்தாமணியை புதுப்பிக்க எண்ணி அதற்கான குறிப்புகளை தேடி சேகரித்து அதனை சரிப்பார்த்துக் கொண்டிருந்தபோது, அதை வெளிவரவிடாமல் செய்ய பெரும் சிக்கல்களை பலர் உருவாக்கினார்கள்.
இருப்பினும் அவற்றையெல்லாம் வெற்றிகரமாக எதிர் கொண்டு சீவகசிந்தாமணியை சிறப்பாக புதுப்பித்து வெளியிட்டார்.
அதன் பின்னர் சங்ககால இலக்கிய நூல்கள் உட்பட்ட நூற்றுக்கும் அதிகமான நூல்களை கண்டறிந்து அதை புதுப்பித்து வருங்கால தலைமுறைக்கு அறிமுகப்படுத்தினார். மேலும் மணிமேகலை என்ற ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றுக்கு உரை எழுதி உள்ளார்.
தமிழறிஞர்கள் பலர் இன்றும் சங்க இலக்கிய நூல்களை சிறந்த உரைநூலாக உ.வே.சா எழுதிய மணிமேகலை நூலையே குறிப்பிடுகின்றனர். “என் சரித்திரம்” என்ற பெயரில் தனது வரலாற்றை இரண்டு ஆண்டுகள் ஆனந்த விகடன் என்ற இதழில் தொடராக எழுதி 1940 ஆம் ஆண்டு தொடக்கம் 1942 ஆம் ஆண்டு வரை வெளியிட்டார்.
ஓலைச்சுவடிகளை நூல்களாக பதிப்பித்த இவர் சங்ககால தமிழன் பிற்கால தமிழன் என்ற தலைப்பில் சென்னை பல்கலைக்கழகத்தில் பேசிய பேச்சு பின்னர் நூலாக வெளிவந்தது. அந்த அளவுக்கு பேச்சுக்கலையில் சிறந்தவராகவும் பேசுவதை நகைச்சுவை இழையோட பேசும் திறன் கொண்டவராகவும் காணப்பட்டார்.
பதிப்பித்த நூல்கள்
இவர் பதிப்பித்த நூல்களாக பல காணப்படுகின்றன. அவை 80க்கும் மேற்பட்டவை ஆகும். அவற்றுள் சிலவற்றை நோக்குவோம்.
- சீவக சிந்தாமணி
- பத்துப்பாட்டு மூலமும் உரையும்
- தண்டபாணி விருத்தம்
- திருக்குடந்தைப் புராணம்
- திருக்காளத்தி நாதருலா
- திருவாவடுதீதுறை கோவை
- மணிமேகலை கதைச்சுருக்கம்
- புறப்பொருள் வெண்பா மாலை
சிறப்பு
அதீத புலமைப் பெற்றவர்களுக்கு வழங்கப்படுகின்ற டாக்டர் பட்டம் முதன்முதலில் தமிழில் பெற்றவர் உ.வே.சா ஆவார். சென்னை பல்கலைக்கழகம் இவருக்கு D.Litt என்ற பட்டம் வழங்கியது.
1942இல் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம் என்ற பெயரில் சென்னை பெசன்ட் நகரில் நூல் நிலையம் ஒன்று தொடங்கப்பட்டது. ஆங்கிலேய அரசினால் இவருக்கு “மகாமகோபாத்தியாய” பட்டம் வழங்கப்பட்டது.
இவர் பணியாற்றிய மாநிலக் கல்லூரியில் இவருக்கு சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. மேலும் மதுரை தல்லாகுளம் அருள்மிகுப் பெருமாள் கோயில் முன்புறமும் இவருக்கான சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
இவரது தமிழ் பணிகளை வெளிநாட்டு அறிஞர்களான ஜி.யு. போப், சூழல் வின்சோன் ஆகியோர் பெரிதும் பாராட்டியுள்ளனர். 2006 ஆம் ஆண்டு நடுவன் அரசு இவரது புகைப்படத்துடனான அஞ்சல் தலை ஒன்றை வெளியிட்டது.
முடிவுரை
இவ்வாறு பல்வேறு சிறப்புகளைக் கொண்ட காணப்படுகின்ற உ.வே.சா அவர்களது தமிழ்ப்பணி அளப்பரியதாகும். இவரது பொக்கிஷங்களான நூல்களை சரிவர பேணி பாதுகாத்து அடுத்து வரும் சந்ததியினருக்கு சரியான முறையில் வழங்குதல் எமது கடமையாகும்.
You May Also Like: