இந்திய மாநிலங்களில் மிக சிறியது எது? | கோவா |
கோவாவின் தலைநகரம் | பனாஜி |
கோவா அமைவிடம்
இந்தியாவில் தென்மேற்கு கடற்கரையில் கொங்கண் மண்டலத்தில் புவியியல் ரீதியாக தக்கணப் பீடபூமியில் இருந்து மேற்குத் தொடர்ச்சி மலைகளால் பிரிக்கப்பட்ட மாநிலமே கோவா ஆகும்.
இந்த மாநிலம் மகாராட்டிரம் மற்றும் கர்நாடகம் ஆகியவற்றுக்கு இடையில் அமைந்துள்ளது. இந்தியாவில் பரப்பளவில் மிகச்சிறிய மாநிலம் கோவா ஆகும். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களை விடவும் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முதலாவது இடத்தை கோவா பெற்றுள்ளது.
இங்குள்ள மிகப்பெரிய மாவட்டம் வாஸ்கொடகாமா ஆகும். போர்த்துக்கேயரின் காலத்தில் கோவா அவர்களது வெளிநாட்டுப் பிரதேசமாகக் காணப்பட்டமையால் போர்த்துக்கேய இந்தியா என்றும் அழைக்கப்பட்டது. கோவாவின் தலைநகரம் பனாஜி ஆகும்.
இங்குள்ள பெரும்பான்மையான மக்கள் கொங்கணி என்ற மொழியினைப் பேசுகின்றனர். கோவாவில் பல சர்வதேச மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் தினந்தோறும் வருகை தருகிறார்கள்.
இதற்கு காரணம் கோவாவில் வெண் மணலால் சூழப்பட்டுள்ள கடற்கரைகள், வளம் மிகுந்த இயற்கை காட்சிகள், அழகிய வழிபாட்டுத் தலங்கள், பாரம்பரிய கட்டடக்கலை ஓவியங்கள் போன்றனவாகும். அதுமட்டுமல்லாமல் உலகில் 100 அரிய பல்லுயிர்கள் வாழும் வெப்பப்பகுதியாக கோவா காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும்.
கோவாவின் வரலாறு
பண்டைய கால இலக்கியங்களில் கோவா, கோபகபுரி, கோமாஞ்சலி, கோவபுரி, கோபகப்பட்டினம், கோபகப்பட்டம், கோவேம், கோமேந்தகம் போன்ற பெயர்களால் அழைக்கப்பட்டது.
மேலும் சிந்தாபூர், சந்தாபூர், மஹாஸ்சபடம் போன்ற வரலாற்றுப் பெயர்களாலும் கோவா அழைக்கப்பட்டது. கோவாவில் 10000 ஆண்டுகளுக்கு முந்தைய பாறை, கலைச்செதுக்கல்கள், மற்றும் பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான பல சான்றுகள் இங்கு காணப்படுகின்றன.
புவியியல் அமைப்பு
கோவாவின் பரப்பளவு 3,702 km2 ஆகும். கோவாவில் மிக உயரமான சிகரம் சோன்சோகர் சிகரம் ஆகும். இதன் உயரம் 1026m ஆகும்.
கோவாவில் பல ஆறுகள் காணப்படுகின்றன. அவற்றுள் மாண்டோவி, சுவாரி, தெரெகோல், சப்போரா, கல்கிபாக், கம்பர்ஜீவா கால்வாய், தல்போனா, சால் போன்றன முக்கியமான ஆறுகள் ஆகும்.
கோவாவில் இயற்கை எழில் கொஞ்சும் பல பிரதேசங்கள் காணப்படுகின்றன. இங்கு 40ற்கும் மேற்பட்ட முகத்துவாரங்கள், 8 கடல் தீவுகள், 90 ஆற்றுத் தீவுகள், கடம்ப வம்ச ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட 300ற்கும் மேற்பட்ட பழமையான குளங்கள், 100ற்கும் மேற்பட்ட மருத்துவ நீரூற்றுக்கள் போன்றன காணப்பட்டன.
தெற்காசியாவின் மிகச் சிறந்த துறைமுகமான மோர்முகாவோ துறைமுகம் சுவாரி ஆற்றின் முகப்பில் காணப்படுகின்றது. இங்குள்ள மண் வண்டல் மண்ணாகவும் கனிமங்கள் நிறைந்த மண்ணாகவும் காணப்படுகின்றது.
கோவா அரபிக் கடலுக்கு அண்மையில் காணப்படுவதால் பெரும்பகுதி வெப்பமான மற்றும் ஈரப்பதமான காலநிலையைக் கொண்டுள்ளது.
இங்கு பருவ மழைக்கு முந்தைய காலம், பருவ மழைக்கு பிந்தைய காலம், தென்மேற்கு பருவமழை காலம் போன்றன மூன்று பருவங்கள் ஆகும். ஓர் ஆண்டில் சராசரியாக மழை காலத்தில் 90% மழை பொழிகிறது.
கோவாவின் உட்கட்டமைப்புக்கள், பொருளாதார மற்றும் கலாசார அமைப்புக்கள்
கோவா எனப்படும் மாநிலம் வடக்கு கோவா மற்றும் தெற்கு கோவா என இரண்டு மாவட்டங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இங்கு மொத்தமாக 13 நகராட்சிகள் காணப்படுகின்றன. இங்கு 334 கிராமங்கள் அமைந்துள்ளன.
போர்த்துக்கேயரால் 450 ஆண்டுகள் வரை ஆட்சி செய்யப்பட்ட பகுதி ஆகும். கோவாவில் கிழக்குப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் காணப்படுகின்றன. இந்த மலைத்தொடரில் பல்லுயிர்கள் பெருக்கம் அதிகமாகக் காணப்பட்டன.
கோவாவின் பலதரப்பட்ட வனவிலங்கு சரணாலயங்கள் காணப்படுகின்றன. 1513ற்கும் மேற்பட்ட தாவர வகைகள், 275 ற்கும் மேற்பட்ட பறவை இனங்கள், 48ற்கும் மேற்பட்ட விலங்குகள் 60ற்கும் மேற்பட்ட ஊர்வன வகைகள் போன்றன காணப்படுகின்றன.
வேளாண்மை, சுரங்கத்தொழில், தென்னை சாகுபடி, மீன்பிடி போன்றன இங்கு வாழும் மக்களின் வாழ்வாதார தொழில்கள் ஆகும். இவை தவிர இங்கு பல சிறு கைத்தொழில்களும் காணப்படுகின்றன.
இங்குள்ள மக்கள் நெல், பருப்பு, ராகி, போன்றனவற்றை பிரதான உணவுப் பொருட்களாக உட்கொள்கின்றனர். கோவாவில் கலாசார பாரம்பரிய உடைகளாக ஐரோப்பிய அரச உடைகள் காணப்படுகின்றன.
You May Also Like: