அறிஞர் அண்ணா பற்றிய கட்டுரை

arignar anna katturai in tamil

மொழி உரிமை, சமூக நீதி, மாநில உரிமை தொடர்பான பல சிந்தனைகளை தமிழ்நாட்டில் வெற்றிகரமாக அரசியல்படுத்திய சிறந்த சிந்தனையாளர் என்ற பெருமை அறிஞர் அண்ணா அவர்களையே சாரும்.

அறிஞர் அண்ணா பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • ஆரம்ப வாழ்க்கை
  • அரசியல் பணி
  • திரைப்படங்கள்
  • முடிவுரை

முன்னுரை

தமிழ் மொழியிலும், ஆங்கில மொழியிலும் சிறந்த பேச்சாற்றலைக் கொண்டு காணப்படுகின்ற அறிஞர் அண்ணா அவர்கள் தமிழ்நாடு தென்னிந்திய மாநில முதலமைச்சராக இருந்தார்.

“அண்ணா” என்று அனைவரும் அழைக்கும் அளவிற்கு வாழ்ந்து அரசியலில் மறுமலர்ச்சியை உருவாக்கிய மகான் ஆவார் இவரைப் பற்றி இக்கட்டுரையில் நோக்குவோம்.

ஆரம்ப வாழ்க்கை

இவர் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி 1909 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் அண்ணாதுரை ஆகும்.

மிக எளிய குடும்பத்தில் பிறந்த அண்ணா அவர்கள் தமது சித்தியரான ராஜாமணி என்பவரால் வளர்க்கப்பட்டார். இவர் காஞ்சிபுரம் பச்சையப்பன் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.

தொடர்ந்து படிக்க இயலாத சூழ்நிலையின் காரணமாக காஞ்சிபுரம் நகராட்சியில் எழுத்தாளராக ஆறு மாதம் பணிபுரிந்தார்.

பின்னர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் உயர்கல்வி  கற்கும் தருணத்தில் தமிழ், ஆங்கிலப் பேச்சுப் போட்டிகளில் பங்கேற்று சிறந்த முறையில்  வெற்றியீட்டினார்.

மாணவர்கள் மத்தியில் பிரபலமான மாணவனாக காணப்பட்டார் இதன் விளைவாக, 1931 ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரி மாணவர் பேரவையின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இரண்டு ஆண்டுகளின் பின்னர் கல்லூரிப் பொருளாதார துறை மாணவர் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார்.

1934 இல் B.A பட்டமும் M.Aமுதுகலை பட்டமும் பெற்றார். அதன்பின்னர் சென்னை கோவிந்தப்ப நாயக்கன் நடுநிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக சிறிது காலம் பணியாற்றினார்.

அரசியல் பணி

1934 ஆம் ஆண்டு திருப்பூரில் இளைஞர் மாநாடு ஒன்று இடம்பெற்ற தருணத்தில் பெரியாருடன் முதல் சந்திப்பு அண்ணாதுரைக்கு கிட்டியது. அவருடைய கொள்கைகள் அண்ணாதுரை மிகவும் ஈர்த்தது. அதனால் பெரியாரின் நீதி கட்சியில் சேர்ந்து அரசியல் பணியாற்றினார்.

1938 ஆம் ஆண்டு இந்தி மொழியை பள்ளிகளில் கட்டாயமாக்குவதற்கு எதிராக போராட்டம் செய்து கைதாகி நான்கு மாதம் சிறைவாசம் சென்றார். 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கினார்.

இதன் மூலம் பல பணிகளை மக்களுக்கு ஆற்றினார். ராஜாஜி தலைமையிலான சுதந்திரக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டு 1967ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆறாம் தேதி தமிழகத்தின் முதல்வராகினார்.

திரைப்படங்கள்

1948 ஆம் ஆண்டு “நல்ல தம்பி” என்கின்ற  படத்துக்கு வசனகர்த்தாவாக அறிஞர் அண்ணா அவர்கள் திரைத்துறையில் முதலில் காலடி எடுத்து வைத்தார்.

இது திராவிட இயக்கத்திற்கும் திரைத்துறைக்குமே முக்கியமான திருப்பு முனையாக பண்பாட்டு மாற்றமாக இருந்தது.

இவர் நல்ல தம்பி படத்துக்கு வசனம் எழுதி இருந்தாலும், 1949 ஆம் ஆண்டு அண்ணாவின் கதை வசனத்துடன் வெளியான வேலைக்காரி படம் திரைத்துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது.

அதற்குப் முன்பு காவிய படங்கள் அரசர்களைப் பற்றிய படங்கள் தெய்வங்களைப் பற்றிய படங்கள் வந்து கொண்டிருந்த நிலையில் அண்ணாவின் வேலைக்காரி படம் தான் சாமானிய மனிதர்களை பற்றிய கதையை தமிழ் திரைகள் பேசிய முதல் படமாக அமைந்தது.

முடிவுரை

1968-இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிப் பெருமைப்படுத்தியது. அமெரிக்க நாட்டு ‘யேல்’ பல்கலைக் கழகமும் இவரை வரவழைத்துப் பாராட்டியது.

பேரறிஞர் அண்ணா 1969-இல் இவ்வுலக வாழ்வை நீத்தார். எதையும் தாங்கும் இதயம் கொண்டு மக்களுக்கு அளப்பரிய பல தொண்டுகளை செய்த இவர் மக்கள் இதயங்களில் என்றும் வாழ்வார்.

You May Also Like:

விடுதலைப் போரில் சுபாஷ் சந்திரபோஸ் கட்டுரை

காந்தியின் அகிம்சை கட்டுரை