ஹோலி பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது

holi pandigai in tamil

ஹோலி பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது

இந்து மதத்தின் பிரபலமான இளவேனிற் கால பண்டிகையாக ஹோலிப் பண்டிகை விளங்குகின்றது. குறிப்பாக பனிக்காலத்திற்கு விடையளித்து வெயில் காலத்திற்கு வரவேற்புரை வழங்கும் காலத்தில் கொண்டாடப்படுகின்றது.

ஹோலிப் பண்டிகையானது வட இந்தியாவில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. எனினும், தற்போது இந்தியா முழுவதிலும் பரவலாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

நேபாளம், வங்கதேசம், சுரிநாம், கயானா, தென்னாபிரிக்கா, மொரிசீ, இங்கிலாந்து, பிஜி, திரினிதாத் போன்ற இந்த மக்கள் பரவலாக வாழும் நாடுகளிலும் ஹோலிப் பண்டிகை வெகு விமர்சையாகக் கொண்டாடி மகிழப்படுகின்றது.

ஹோலிப் பண்டிகை அன்று மக்கள் வண்ணங்கள் கலந்த தண்ணீரை ஒருவர் மீது ஒருவர் ஊற்றி மகிழ்வார்கள். மேலும் மிகவும் சுவையான குஜிலா என்ற உணவை உண்டும், பாங் என்ற பானத்தையும் பருகியும் கொண்டாடி மகிழ்வர்.

இந்த பண்டிகை கொண்டாட்டத்திற்கான நோக்கம் தீமையைக் களைந்து எறிவது ஆகும். இது வசந்த காலத்தில் வரும் முழு நிலவில் கொண்டாடப்படும் இப்பண்டிகையானது, சகோதரத்துவத்தையும், மன வலிமையையும் இப்பண்டிகை வலியுறுத்துகின்றது.

ஹோலி பண்டிகை வரலாறு

ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுவதற்கு பல புராணக் கதைகள் ஆதாரங்களாக உள்ளன. ஹோலிகா பிரகலாதன் கதை, ராதா கிருஷ்ணர் காதல் கதை, சிவ பார்வதி காதல் கதை போன்ற புராணக் கதைகள் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதன் அவசியத்தைக் கூறுகின்றன.

புராணங்களின்படி ஒரு காலத்தில் இரண்யகசிபு என்ற பேய் அரசன் வாழ்ந்து வந்தான். அவன் மனிதர்களாலோ அல்லது, விலங்குகளாலோ கொல்லப்பட முடியாத அளவிற்கு சக்தி வாய்ந்தவனாக விளங்கினான். நாளுக்கு நாள் அவனது ஆணவமும், திமிரும் அதிகரித்துக் கொண்டே இருந்தன.

உலகில் வாழும் மக்கள் அனைவரும் மகாவிஷ்ணுவை விட்டுவிட்டு தன்னை மட்டுமே வணங்க வேண்டும் என்று ஆணையிட்டான். ஆனால் அவனுடைய சொந்த மகனான பிரகலாதன் தனது தந்தையின் கொடிய ஆணையை மறுத்துவிட்டு மகாவிஷ்ணுவின் மீது மட்டும் பக்தி வைத்திருந்தான்.

இதனால் கோபமடைந்த இரண்யகசிபு தனது சகோதரி ஹோலிஹா என்ற அரக்கியின் உதவியுடன் தனது மகனை கொல்ல முடிவு செய்தான்.

ஹோலிகாவிடம் ஒரு சால்வை இருந்தது. அந்தச் சால்வை அவளை நெருப்பில் இருந்து பாதுகாக்கும். அவள் பிரகலாதனை தந்திரத்தால் கவர்ந்து தன்னோடு பெரும் நெருப்பில் வந்து அமருமாறு பணித்தாள்.

இருவரும் பெரும் நெருப்புக்குள் இறங்கினார்கள். அவள் மட்டும் தனது சால்வையால் தன்னை மூடிக்கொண்டாள். நெருப்பானது அதிக வெப்பத்துடன் எரியத் தொடங்கியது. அப்போது மகாவிஷ்ணுவின் அருளால் ஹோலிஹாவைச் சுற்றி இருந்த சால்வை தானாகவே பிரிந்து அவளை விட்டு பறந்து வந்து பிரகலாதனைச் சுற்றிக் கொண்டது.

இதனால் பிரகலாதன் நெருப்பால் எரியாமல் பாதுகாக்கப்பட்டான். ஹோலிஹா நெருப்பில் எரிந்து சாம்பலானாள். இந்த புராணக்கதையின் பின்னணியில் தான் ஹோலிஹா தகனம் கொண்டாட்டத்தோடு ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகின்றது.

ஹோலி வேறு பெயர்கள்

துல்ஹோதி, துலாந்தி அல்லது, துலேந்தி எனவும் அழைக்கப்படுகின்றது. இந்தியாவின் மேற்கு வங்காளம், வங்கதேசம் முதலான பகுதிகளில் தோல் யாத்திரை (தௌல் ஜாத்ரா) வசந்த உற்சவம் எனவும் அழைக்கப்படுகின்றது. அரங்க பஞ்சமி, ஹோலிஹா தகனம், சோட்டி ஹோலி (ஹோலி முதல் நாளில் கொண்டாடப்படும்), வண்ணங்களின் பண்டிகை என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது.

You May Also Like:

குடியரசு இந்தியாவின் சாதனைகள் கட்டுரை

பித்தம் குறைய வழிகள்