வருங்கால இந்தியா கட்டுரை

varungala india katturai in tamil

நீர், நிலம், மக்கள் போன்ற அனைத்து வளங்களும் பொருந்திய நம் இந்திய நாடானது உலகில் மிகவும் உயர்ந்த நாடுகளின் வரிசையில் இருக்க வேண்டும் என்பதே எமது கனவாகும்.

எனவே அரசியல் ஊழல் மற்றும் வறுமை அற்ற ஒரு நாடாக எம் நாடு மாற வேண்டும். என்பதே வருங்கால இந்தியாவின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக அமையக்கூடும்.

வருங்கால இந்தியா கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • இந்தியாவின் சிறப்பம்சங்கள்
  • நவீன தொழில்நுட்பம்
  • பொருளாதாரம்
  • கல்வி வளம்
  • முடிவுரை

முன்னுரை

இந்திய தேசத்தின் சுதந்திரத்துக்காக பல்வேறு தியாகங்கள், உயிர் நீத்ததின் விளைவாகவே இன்று நாம் சுதந்திரமாக உலாவ முடிகின்றது.

சுதந்திரத்துக்காக பாடுபட்ட நேர்மையான, தூய்மையான, வாய்மையான மனிதர்களைக் கொண்டிருந்த அந்த இந்தியாவில் தற்போது அரசியல்வாதிகளின் மலிவான சிந்தனையில் உதித்த லஞ்சம் மற்றும் வன்முறை தீயை வளர்த்து அதில் இன்பம் பெறும் தீவிரவாதிகளின் தூண்டுதல் போன்றனவே துளிர் விட்டு வந்துள்ளன.

எனவே இவ்வாறான செயற்பாடுகளை எல்லாம் தவிர்த்து சிறந்த ஒரு நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்பதே எதிர்கால இந்தியா பற்றிய கனவாகும்.

இந்தியாவின் சிறப்பம்சங்கள்

நம் நாட்டில் அனைத்து வளங்களும் இருப்பதினால் தான் அன்னிய தேசத்தவர்கள் பல வருடங்களுக்கு முன்பே படை எடுத்து வந்தனர்.

இந்தியாவில் கலைகளுக்கும், கலைஞர்களுக்கும் பஞ்சமே இல்லை, கலாச்சாரமும் பண்பாடும் இன்றளவும் உலக அரங்கில் தன்னுடைய தனித்தன்மையை நிலைநாட்டிக் கொண்டிருக்க கூடியதாக இருத்தல், தொழில் வளர்ச்சியில் முன்னேற்றமடைந்திருத்தல், இளைஞர்கள் வளம் அதிகமாகக் கணாப்படல் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டமைந்ததாகவே இந்திய தேசம் காணப்படுகிறது.

நவீன தொழில்நுட்பம்

இன்று உலகமானது உள்ளங்கைக்குள் சுருங்கி விட்டது எனலாம். எங்கும் கணினி எதிலும் கணினி என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அதாவது மருத்துவம், கல்வி, விஞ்ஞானம், வணிகம், விண்வெளி, பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளிலும் இன்று கணினியின் பயன்பாடு காணப்பட்ட போதிலும், எதிர்காலத்தில் இதனை விட பல்வேறு மடங்கு முன்னேற்றம் அடைய வேண்டும்.

பொருளாதாரம்

இந்தியாவின் பொருளாதார நிலை வருங்காலத்தில் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நோக்கும் போது, தனி மனிதர்களின் உழைப்பு சுரண்டப்படும் நிலையானது மாற வேண்டும்.

கல்வி தரத்தின் அடிப்படையில் இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும். உள்நாட்டு உற்பத்திகள் இன்னும் அதிகப்படுத்தி விவசாயிகள் மற்றும் தொழில் புரிபவர்களை அரசாங்கம் ஊக்கப்படுத்த வேண்டும்.

இன்னும் தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் இன்பவற்றை நிறுவி வறுமைப்பட்டவர்களுக்கும் வேலை வழங்க வேண்டும். இதுவே எமது நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு உதவியாக அமையக்கூடும்.

கல்வி வளம்

எதிர்காலத்தில் அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வியானது இலவசமாகவே வழங்கப்பட வேண்டும். கல்வியினை வியாபாரமாக்கும் நிலையிலிருந்து பாதுகாப்பதோடு தனியார் துறைகளிடம் இருந்தும் கல்வியை பாதுகாக்க வேண்டும்.

பாடசாலை கல்வி முதல் பல்கலைக்கழக கல்வி வரை அனைத்தும் தரமான கல்வியாக வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் எமது நாட்டில் மாணவர்கள் அனைவரும் மிகச் சிறந்த கல்வி மற்றும் தொழில்நுட்ப அறிவு பெற்றவர்களாக வளர்ச்சி அடைய முடியும்.

முடிவுரை

எமது நாடு எல்லாவிதமான வளங்களை கொண்ட அமைந்த போதிலும் முன்னேற்றம் அடையாமல் இருப்பதற்கான காரணம் இலஞ்சம், ஊழல் போன்ற அடிப்படையான குற்றச்செயல்கள் ஆகும்.

இவ்வாறான குற்றங்களுக்கு உடந்தையாக இருப்பதும் குற்றமேயாகும். எனவே இந்த நிலையில் இருந்து மாறினால் எமது எதிர்கால இந்தியா தேசமானது சிறப்புற்று விளங்கும் என்பது குறிப்பிடத்தக்க உண்மையாகும்.

You May Also Like:

தூய்மை இந்தியா கட்டுரை

வேற்றுமையில் ஒற்றுமை கட்டுரை