வனவிலங்கு பாதுகாப்பு கட்டுரை

vana vilangu pathukappu katturai in tamil

ஆரம்ப காலத்தில் விலங்குகளுக்கு அஞ்சடைந்து அவற்றிலிருந்து பாதுகாப்பு பெற மனிதன் வாழ்விடங்களை நாடினான். ஆனால் தற்பொழுது மனிதர்களிடமிருந்து விலங்குகளை பாதுகாக்க வேண்டிய துரதிஷ்ட சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வனவிலங்கு பாதுகாப்பு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • வன உயிர் பாதுகாப்பு சட்டம்
  • வனவிலங்குகளை பாதுகாப்பதன் அவசியம்
  • முடிவுரை

முன்னுரை

இந்த உலகமானது மனிதர்களும் ஏனைய உயிரினங்களும் ஒன்றித்து வாழும் ஒரு அழகிய படைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஆதிகாலங்களில் தமது உணவு தேவையை பூர்த்தி செய்ய வேண்டப்பட்ட அளவில் மட்டும் விலங்குகளை வேட்டையாடி உண்டு வாழ்ந்தார்கள் இதனால் விலங்குகளும் ஏனைய உயிரினங்களும் அழிவடையாமல் நிலைத்து வாழ்ந்தன.

ஆனால் தற்காலத்தில் அதிகரித்த சனத்தொகையின் விளைவால் காடுகள் அழிக்கப்பட்டு அதன் வளங்கள் சூறையாடப்படுவதனால் அங்கு காணப்படும் விலங்குகள் மற்றும் ஏனைய உயிரினங்கள் அழிவடைகின்றன.

வன உயிர் பாதுகாப்பு சட்டம்

முதன்முதலில் வன உயிர் பாதுகாப்பு சட்டமானது, 1972 ஆம் ஆண்டு இந்திய பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட ஓர் சட்டமாகும். இந்த சட்டம் வன உயிர்களான விலங்குகள்,பறவைகள், பூச்சிகள், தாவரங்கள் முதலியவற்றை பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது.

1972 ஆம் ஆண்டுக்கு முன்னால் அதாவது, வன உயிர் பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்படுவதற்கு முன்னால் இந்தியாவில் ஐந்து தேசிய பூங்காக்கள் மட்டுமே இருந்தன.

இந்த சட்டம் உருவாக்கப்பட்டதற்குப் பின் தமிழகத்தில் 4309 சதுர கி.மீ அளவிலான நிலப்பரப்பில் சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 9 வன உயிரின சரணாலயங்களும், ஐந்து தேசிய பூங்காக்களும், 12 பறவை சரணாலயங்களும் உள்ளடங்குகிறது.

உயிரினங்களை வேட்டையாடுவதும், அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதும் தண்டனைக்குரிய குற்றம் என இச்சட்டம் வலியுறுத்துகிறது.

வனவிலங்குகளை பாதுகாப்பதன் அவசியம்

இயற்கை சமநிலை மாறுபடாதிருக்க வனவிலங்குகளை பாதுகாப்பது என்பது அவசியமான ஒன்றாக காணப்படுகிறது.

மரங்கள், தாவரங்கள் பெருக்கத்திற்கும் தட்பவெப்பநிலை சமன்பாட்டிற்கும் காடுகள் பராமரிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

ஒரு நாட்டின் இயற்கை வளங்கள் அந்நிய செலவானி ஈட்டித் தருபவை. விலங்குகள், மரங்கள், தாவரங்கள் இருக்கும் இடங்கள் ஒரு நாட்டின் செழிப்பை உணர்த்துகின்றன. மற்றும் சுற்றுலா பயணிகளையும் கவர்கின்றன.

முடிவுரை

வனவிலங்குகளை பாதுகாப்பது என்பது தனி மனிதனுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகக்கும் நன்மை பயக்கும் ஒரு விடயமாக காணப்படுகின்றது. காட்டு விலங்குகளை பிடித்து நமது தேவைக்கு பயன்படுத்தவதை தவிர்த்து அவற்றை இவ்வுலகின் மிகப்பெரிய சொத்துக்களாக கருதி பாதுகாத்து வளமிகு இந்த அழகிய உலகை கட்டி எழுப்புவோம்.

You May Also Like:

மரம் வளர்ப்போம் பயன் பெறுவோம் கட்டுரை

காடுகளின் முக்கியத்துவம் கட்டுரை