கல்வி ஒரு மனிதனை முழுமையானவன் ஆக்குகின்றது. இந்த முழுமையை அடைவதற்கு ஆசிரியர்கள் பெரிதும் உறுதுணையாக உள்ளனர். அன்று முதல் இன்று வரை ஒரு மனிதன் தன் குழந்தை மற்றும் இளமைப் பருவத்தை தாய் தந்தையுடன் செலவிடுவதை விட ஆசிரியர்களுடன் தான் அதிகம் செலவிடுகின்றான்.
ஒரு குழந்தை தனது தாய் தந்தையருக்கு அடுத்து நல்லொழுக்கம், பண்பாடு, அறிவு, மரியாதை, கல்வி என அனைத்தையும் ஆசிரியரிடமிருந்தே கற்றுக் கொள்கின்றது.
மேலும் ஆசிரியர்கள் கற்பித்தல் மூலம் கற்றல் சிக்கலை தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டு ஆசிரியர்கள் கற்பித்தல் முறையை பல வழிகளில் பின்பற்றுகின்றனர்.
பண்டைய காலத்தில் குறிப்பாக திண்ணை பள்ளிக்கூடங்களில் ஆசிரியரே அதிக முக்கியத்துவம் கொண்டவராக விளங்குவர். இவரே சரளமாக எழுத பேசுகின்ற மொழித்திறன் மிக்கவராக இருப்பார். ஆசிரியரே கற்பித்தல் தன்மையை முடிவு செய்வார்.
ஆனால் நவீன காலத்தில் கல்வி முறையை காலச் சூழல், நவீனத்துவம் போன்ற பல காரணிகளும் தீர்மானிப்பதாக உள்ளன. எனினும் பொதுவாக மிகச் சிறந்த கற்பித்தல் முறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளல் ஆசிரியரின் கடமையாகும்.
முறை வைப்பு என்றால் என்ன
கல்வியும், அதன் நோக்கமும், கல்வி கற்பிக்கும் முறையும், கல்வி கூட அமைப்பும் கலந்தோறும் மாறுதல்களுக்கு உட்பட்டு வந்துள்ளமையை அறிய முடிகின்றது. இந்த கற்பித்தலும், கற்றலும் பல்வேறு காரணிகளை உள்ளடக்கிய ஒரு நிகழ்வாக உள்ளது.
பொருத்தமான சூழ்நிலையில் பொருத்தமான பாட அலகிற்கேற்ப பொருத்தமான கற்பித்தலை மேற்கொண்டால் வகுப்பறைக் கற்பித்தலானது சிறப்பாக விளங்கும். அந்தவகையில் பல கற்பித்தல் முறைகளில் முறை வைப்பும் ஒன்றாக உள்ளது.
ஆசிரியர் ஒன்றைக் கூற அதனை மாணவர்கள் பலரும் சேர்ந்து சொல்வதை முறை வைப்பு என அழைக்கப்படுகின்றது.
முறை வைப்பும் மூலம் அரிய தகவல்களைச் சொல்லி அதில் மாணவர்களின் எண்ணங்கள் தூண்டப்படும். இம்முறையில் கல்வி அறிவு சிறிது சிறிதாக அதிகரிக்கப்படுகின்றது.
மேலும், முறை வைப்பு மூலம் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்குமான உறவு கட்டியெழுப்பப்படுகின்றது. மாணவர்களின் குழு செயற்பாடுகளும் அதிகரிக்கும். அத்துடன் மொழித் திறனும், செயல் திறனும் கண்காணிக்கப்படும்.
கல்வியின் அவசியம்
“ஆயிரம் ஆலயங்கள் கட்டப்படுவதை விட ஒரு பாடசாலையினைக் கட்டுவது சாலச் சிறந்தது” என்றார் பாரதி.
மனித உயிர் வாழ்விற்கு நீர், உணவு எவ்வளவு அவசியமோ அது போல் கல்வியும் மிகவும் அவசியமாகும். மனித வாழ்க்கையில் உயர்வான எண்ணங்களும் உன்னதமான குணங்களும் எம்முன் தோன்ற வேண்டுமாயின் கல்வி என்பது அவசியம் ஆகும்.
கல்வி ஒன்று தான் பிறப்பில் இருந்து இறப்பு வரை மனிதனுடன் கூட வரக்கூடியது என்றால் அது மிகையல்ல.
“கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் ஒளவையார். எவ்வளவு கடினப்பட்டாவது கல்வியை பெற்று விட வேண்டும் என்ற கருத்து ஆதிகாலம் தொட்டி வலுப்படுத்தப்பட்டு வருகின்றது.
ஒருவரிடம் எவ்வளவு பணம் இருந்தாலும், அதனை கணக்கு வைத்துக் கொள்ளவும், நல்ல காரியத்திற்காக பயன்படுத்தவும் கல்வி அறிவு மிக அவசியமாகச் கொல்லப்படுகின்றது. ஒரு வீட்டில் உள்ள வறுமையை போக்கவும், நாட்டை முன்னேற்றவும் கல்வி அறிவானது மிக மிக அவசியமாகும்.
You May Also Like: