மின்சாரம் பற்றிய கட்டுரை

minsaram katturai in tamil

நாம் நமது தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தினந்தோறும் அதிக அளவிலான மின்சாரங்களை பயன்படுத்தி வருகின்றோம். மின்சாரம் இல்லையென்றால் அன்றாட நடவடிக்கைளை கூட தொடர முடியாத நிலை ஏற்பட்டு விடும்.

மின்சாரம் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. மின்சாரத்தின் தேவை
  3. மின்சாரம் வீணடிப்பு
  4. மின்சாரத்தின் பயன்
  5. மின்சாரத்தை சேமிக்கும் வழிமுறை
  6. முடிவுரை

முன்னுரை

இன்றைய காலகட்டத்தில் மின்சாரம் என்பது அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. குறிப்பாக மின்சாரம் இல்லாவிட்டால் இந்த உலகமானது இருளில் மூழ்கிவிடும். மற்றும் நமது அன்றாட காரியங்களை கூட செய்ய முடியாத நிலை ஏற்படும்.

வீடு முதல் நாடு வரை அனைத்தின் இயக்கத்திற்கும் மின்சாரம் இன்றியமையாததாக மாறியுள்ளது. ஏன் என்றால் மின்சாரம் அந்த அளவிற்கு நம் அனைவருக்கும் முக்கியம். மின்சாரம் மூலம் மக்கள் அடையும் பயனானது எண்ணிலடங்காதவை ஆகும்.

மின்சாரம் நமக்குத் தருகிற நன்மைகளும் வசதிகளும் ஏராளமானவை. மின்சாரத்தையும் அதன் மூலம் பயன்படுத்தக் கூடிய கருவிகளையும் தவறாகவோ அலட்சியமாகவோ பயன்படுத்தினால் அவை தரும் ஆபத்துக்களும் அதிகம் ஆகும்.

மின்சாரத்தின் தேவை

வீட்டிலே நாம் இன்று பல உபகரணங்களை பயன்படுத்துகின்றோம். வெளிச்சம் தருகின்ற மின் குமிழ்கள், தொலைக்காட்சி, மின்விசிறிகள், குளிர்சாதனப் பெட்டிகள், சலவை இயந்திரங்கள்,

மின் அழுத்திகள், நீர் இறைக்கும் மோட்டார்கள், மின்சார அடுப்புகள், கணிணிகள், என பலவகையான மின்சார சாதனங்களை பயன்படுத்த இந்த மின்சாரமே அதிகம் தேவைப்படுகின்றது.

மின்சார வீணடிப்பு

நாம் நமது தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தினந்தோறும் அதிக அளவிலான மின்சாரங்களை பயன்படுத்தி வருகின்றோம். இதன் காரணமாக மின்சாரத்தை அதிகளவில் வீணடித்துக் கொண்டிருக்கின்றோம்.

நாம் பயன்படுத்தும் மின்சார சாதனங்களை பயன்படுத்திய பின் அதனை நிறுத்தாமல் விடுவது, தேவையற்ற மின் சாதனங்களை பயன்படுத்துவது இதனால் மின்சாரமானது வீணாகிறது.

மின்சாரத்தின் பயன்

மின்சாரம் என்பது நமது அன்றாட வாழ்க்கையில் மிக உயரிய பங்கினை வகிக்கின்றது. மின்சார விளக்குகள் மற்றும் குழல் விளக்குகள் இரவு நேரங்களில் நமது வீட்டையும், தெருக்களையும் பிரகாசிக்க செய்கிறது.

வெயில் காலங்களில் மின்விசிறியானது நம்மை குளிர்ச்சியடையச் செய்கிறது. குளிர்சாதன பெட்டியானது உணவுகளை குளிர்ச்சியாகவும் கெடாமலும் வைத்துக்கொள்கிறது. வானொலி, தொலைக்காட்சிப் பெட்டி போன்ற பொழுது போக்கு சாதனங்கள் அனைத்தும் மின்சாரத்தில் மட்டுமே இயங்கக்கூடியது.

மின்சார உபகரணங்கள் உட்பட இயந்திரங்களின் செயல்பாடுகளுக்கும் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவ துறையிலும் நோயை கண்டறியவும் அறுவை சிகிச்சை செய்யவும் மின்சாரம் பயன்படுகிறது.

மின்சாரத்தை சேமிக்கும் வழிமுறை

மின்சாரத்தை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய கட்டத்தில் இன்று உலகம் உள்ளது. ஆகவே மின்சார சாதனங்களை பயன்படுத்திய பின் மின்சாரத்தை நிறுத்த வேண்டும்.

அதிகம் மின்சாரத்தை பயன்படுத்தும் கருவிகளை தவிர்த்து கொள்வதன் மூலம் மின்சாரத்தை சேமிக்கலாம். தேவையற்ற நேரத்தில் கணிணி, லேப்டாப் போன்றவற்றை முழுவதுமாக ஆப் செய்தல் வேண்டும்.

குறைந்த எடையுடைய அதிக மின்திறன் கொண்ட மின்விசிறிகளை பயன்படுத்தலாம். துணிகளை தினமும் அயர்ன் செய்யாமல் மொத்தமாக சேர்த்து அயர்ன் செய்ய வேண்டும். இதனால் மின்சார செலவு கணிசமாக குறையும்.

முடிவுரை

இன்றைய காலகட்டத்தில் மின்சார உற்பத்திக்காக அதிகளவு எரிபொருட்கள் தகனமடைய செய்வதனால் அதிக சூழல் சார்ந்த பிரச்சனைகள் அதிகம் உருவாகியுள்ளமையால் அபிவிருத்தி அடைந்த நாடுகள் சொலர் பேனல் மூலம் மின்சாரங்களை உருவாக்கும் நகரங்களை அதிகம் உருவாக்கி வருகின்றது.

மக்களின் உயர்வுக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் மின்சாரத்தை சிக்கனமாக முழுமையாக பயன்படுத்த வேண்டும்.

You May Also Like:

காடுகளின் முக்கியத்துவம் கட்டுரை

இயற்கை பேரிடர் கட்டுரை