மனிதன் வாழ சூழல் தன்மை மிகவும் அவசியமாகும். இந்த சூழல் தன்மையை உருவாக்குவதில் மரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக காலநிலை சமநிலையை பேண உதவுகின்றன.
மனிதர்கள் உயிர்வாழ சூழல் தன்மையும் காலநிலை சமநிலையையும் மிக முக்கியமாகும். இதற்காக நாம் மரங்களை வளர்க்க வேண்டும்.
மரம் பற்றி சில வரிகள்
மரங்கள் நமது சிறந்த நண்பன்.
மரம் நம் வாழ்வில் முக்கியமானது.
மரங்கள் மழை பொழிவிற்கு பெரிதும் உதவுகின்றன.
மரங்கள் காற்றை தூய்மையாகின்றன.
கோடை காலத்தில் மரங்கள் நிழல் தருகின்றது.
மரங்கள் பழங்கள், காய்கறிகள், ரப்பர், பூக்கள், பசை, விறகு மற்றும் மருந்துகள் என பல பயனுள்ள விடயங்களை தருகின்றன.
மரங்கள் பறவைகள் மற்றும் விலங்குகளின் இருப்பிடமாகவும் காணப்படுகின்றன.
மரங்கள் எமக்கு உயிர்வாயுவை கொடுத்து எமக்கு உயிர் கொடுக்கின்றன.
மரங்கள் இல்லாமல் நாம் உயிர் வாழ முடியாது.
மரம் நமக்கு காற்று, மழை போன்றவற்றை கொடுக்கும்.
பறவைகள் தனது கூடுகளை மரத்தில் மிக அழகாக கட்டும்.
மரத்தில் உள்ள பாகங்கள் இலை, பூ, காய், கனி, வேர் என அனைத்து பாகங்களும் நமக்கு பயனுள்ளதாக இருக்கிறது.
மரங்கள் மண்ணரிப்பை தடுக்கின்றன.
மரத்தின் காய்ந்த சருகு மற்றும் இலைகள் மண்ணுக்கு உரமாகின்றன.
மரங்களே இயற்கை நிலத்தோற்றத்தின் மிக முக்கிய அம்சங்களாகும். அவற்றை பாதுகாக்க வேண்டியது எமது பொறுப்பாகும்.
நம் சுயநலத்திற்காக மரங்களை வெட்டி காடுகளை அழிப்பது நம்மை நாமே அழிப்பதற்கு சமமாகும்.
மரங்கள் பூமிக்கும் மனிதனுக்கும் பல நன்மைகளை தருகின்றன. மரங்கள் மனித உயிர் வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்குகின்றன.
மரங்கள் வளிமண்டலத்திற்கு நீரை அனுப்பி மழையை பொழிய செய்கின்றன.
மரங்கள் மண்ணை பசுமையாக்கின்றன.
மரங்களின் அழிவு மனிதர்களின் அழிவு என்பதை உணர்ந்து மரங்களை வளர்க்க வேண்டும்.
எதிர்காலத்தில் தண்ணீரைப் போல் காற்றையும் காசு கொடுத்து வாங்க வேண்டியேற்படும். எனவே மரம் இல்லையேல் மனித இனம் இல்லை.
You May Also Like: