மயில் பற்றி சில வரிகள்

mayil patri sila varigal

அதிகம் ஒலி எழுப்பும் பறவைகளில் மயிலும் ஒன்றாகவும். பார்ப்பதற்கு அழகாக இருக்கும் மயில் தமிழ் கடவுளான முருகனின் வாகனமாகவும் காணப்படுகின்றது.

ஆண் மயிலை “சேவல்” என்றும் அழைப்பதுண்டு. இந்தியா, பர்மா, இலங்கை போன்ற நாடுகளிலே மயில்கள் அதிகம் பரவி வாழ்கின்றன.

மயில் பற்றி சில வரிகள்

இந்தியாவின் தேசியப்பறவை மயில் ஆகும்.

1963ல் மயில் இந்தியாவின் தேசியப்பறவையாக அறிவிக்கப்பட்டது.

ஆண் மயிலுக்கு நீண்ட தோகை இருக்கும்.

பொதுவாக மயில்களின் உடல் அழகான வடிவம் கொண்டிருப்பதால் கண்களை கொள்ளை கொள்கிறது.

பார்ப்பதற்கு பெண் மயில்களை விட ஆண் மயில்கள் தான் மிகவும் அழகாக இருக்கும்.

மயில்களுக்கு புராணங்களிலும் கலாச்சாரத்திலும் குறிப்பிடத்தக்க இடமுண்டு.

மயில்கள் எழுப்பும் ஒலி “அகவுதல்” எனப்படும்.

மயில்களால் 11 வித்தியாசமான ஒலிகளை எழுப்ப முடியும்.

மயில் சாந்தமான பறவையாகவே பார்க்கப்படுகின்றது.

மயில்களுக்கு அழகான நீண்ட தோகை இருந்தாலும் அதனால் நெடுந்தூரம் பறக்க இயலாது.

மயில் மத வழிபாடுகளிலும் முக்கிய பங்கு வகின்றது.

ஆண் மயில் பெண் மயிலைக் கவருவதற்காக தோகையை விரித்து ஆடும்.

முருகனின் வாகனமாக மயில் பார்க்கப்படுகின்றது.

மயில் மிகவும் அழகிய தோற்றம் உடையது.

மயிலின் தலையில் இருக்கும் கொண்டை மிகவும் அழகாக இருக்கும்.

மயில் அனைத்துண்ணி வகையை சார்ந்தது. இவை தானியங்கள், இலைகள், பழங்கள், சிறு பாம்பு மற்றும் பூச்சிகள் போன்றவற்றை உணவாக உண்ணும்.

மயில்களால் அதிக உயரம் பறக்க முடியாது.

ஆண் மயில் பெண் மயிலை விட பெரியது.

மயில் தோகையில் கண் போன்ற வடிவங்கள் காணப்படும்.

You May Also Like:

நூலகம் பற்றி சில வரிகள்

யானை பற்றி சில வரிகள்