மனமகிழ்ச்சி என்றால் என்ன

மனமகிழ்ச்சி என்றால் என்ன

உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவனும் சந்தோஷமாகவே இருக்க விரும்புகின்றது. “மகிழ்ச்சி என்பது உள்ளார்ந்த அமைதியைச் சார்ந்தது. அவை அன்பான மனதைச் சார்ந்திருக்கின்றது” இதைக் கூறியவர் பதினாலாவது தலாய் லாமா ஆவார். நமது மனதில் வாழ்க்கையை குறித்த திருப்தி ஏற்பட்டாலே நாம் மகிழ்ச்சியோடு வாழ்ந்து விட முடியும்.

மனமகிழ்ச்சி என்றால் என்ன

உள் அமைதி மற்றும் திருப்தியின் உணர்வு தான் மனமகிழ்ச்சி எனலாம்.

மன மகிழ்ச்சிக்கான வழிமுறைகள்

மன மகிழ்ச்சியை அடுத்தவர்கள் நமக்குத் தருவதில்லை. நமக்கு நாமே தேடிக் கொள்ளும் ஒன்றாகும். மகிழ்ச்சி எப்போதும் பெரிய பெரிய விஷயங்களாக தான் இருக்க வேண்டும் என்பது கிடையாது. பல நேரங்களில் சின்ன சின்ன விஷயங்கள் கூட நமக்கு சந்தோஷத்தைத் தரவல்லது.

உளவியல் ஆய்வின் படி ஒருவரின் மனதின் மகிழ்ச்சியை அவரை சுற்றியிருக்கும் விஷயங்களே முடிவு செய்கின்றன. எனவே அன்றாடம் நாம் செய்யும் செயல்களின் மூலம்கூட நாம் மனமகிழ்ச்சியைப் பெறமுடியும்.

தினமும் தியானம் செய்யுங்கள். தியானம் மன அமைதியைக் கொடுப்பதுடன், பலவிதமான மன உளைச்சல்களிலிருந்தும் நம்மை காக்கின்றது.

மகிழ்ச்சியான மக்களுடன் தொடர்பு கொள்ளுங்கள், மகிழ்ச்சியாக இருக்க அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

மன்னிக்கும் மனப்பான்மை வளர்த்துக் கொள்ளுங்கள். இந்த மனோபாவம் அமைதியான வாழ்க்கைக்கும், உறவுகள் நிலைக்கவும் மிகவும் தேவையான ஒன்றாகும்.

எனவே யாராவது உங்களை காயப்படுத்தினால் அதை மறந்து அவர்களுக்கு மன்னிப்பு கொடுங்கள். நீங்கள் தவறு செய்துவிட்டீர்கள் என்பதனை உணர்ந்தால் மன்னிப்புக் கேட்பதற்கும் தயங்காதீர்கள்.

எதிர்மறையான நிகழ்வுகளையும் ஏற்றுக்கொள்ள கற்றுக் கொள்ளுங்கள். நம் அன்றாட வாழ்வில் பல விஷயங்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லாவையாகும். கஷ்டங்களைப் பொறுமையுடன் எதிர்கொள்ளுவதால், மன உறுதியும், எந்தவிதமான சூழ்நிலையிலும் நிதானம் தவறாமல் நடந்து கொள்ளும் பக்குவத்தையும் தரும்.

உங்களுக்குப் பிடித்த செயலை செழியுங்கள். பலருக்கு வாழ்க்கையின் மீது வெறுப்பு ஏற்படுவதற்கு பிடிக்காத வேலையை செய்து கொண்டிருப்பதே காரணமாக உள்ளது. உங்கள் அன்றாட வாழ்வில் உங்களுக்கு பிடித்த சில செயல்களை செய்வது உங்களுக்கு மகிழ்ச்சியை தரவல்லது.

பிறருக்கு உதவுவது, ஓய்வு நேரங்களில் வெளியிடங்களுக்கு செல்வது, பாடல் பாடுவது என எதுவாகவும் இருக்கலாம்.

புகைப்படம் எடுங்கள். இந்த வழியை “Solve For Happy” என்ற புத்தகத்தை எழுதிய மோ கவ்டட் (Mo Gawdat) என்பவர் கூறியுள்ளார்.

நீங்கள் அலுவலகத்துக்குச் செல்லும்போது அல்லது, வேறுறெங்கும் பயணம் செல்லும் போது அழகான புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள் அது மனதை மகிழ்விக்க கூடிய செயலாகும்.

மற்றவர்களை மகிழ்விக்க ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு செயலையாவது செய்யுங்கள். அது அன்பான வார்த்தையாக இருக்கலாம் அல்லது சிறிய உதவியாகக் கூட இருக்கலாம்.

மிகவும் மகிழ்ச்சியான நண்பர்கள், உங்களுக்கு ஊக்கமளிக்கும் நண்பர்கள், உங்களை குறைசொல்லாத, உங்களின் நம்பிக்கையை சிதைக்காத நண்பர்களுடனேயே நேரத்தை செலவிடுங்கள்.

நம் வாழ்வில் கடந்த காலத்தை மாற்றி எழுத முடியாது. ஆனால் எதிர்காலம் நம் கையில் உள்ளது. அதை ஆக்கபூர்வமாக மாற்றலாம். எனவே மனமகிழ்ச்சி என்பது நம் கையில் தான் உள்ளது. வாழ்க்கை என்பது நன்மை, தீமை இரண்டும் கலந்தது என்பதை உணர்ந்து வாழும் காலங்களில் மன மகிழ்வுடன் வாழப் பழகிக் கொள்ளுங்கள்.

You May Also Like:

சங்க இலக்கியத்தின் சிறப்புகள் கட்டுரை