போதை அழிவின் பாதை கட்டுரை

pothai alivin pathai katturai in tamil

இன்று  வளர்ந்து வரும் உலகில் போதைப் பொருள் பாவனை ஒரு பேசும் பொருளாகவே மாறியுள்ளது எனலாம்.

உலகமானது அறிவியல், விஞ்ஞானம், தொழில்நுட்பம் என முன்னேற்றத்தை நோக்கி சென்றாலும் மருத்துவம், கல்வி என முக்கியமான துறைகளில் வளர்ச்சியடைந்தாலும் போதை, வீண்கழியாட்டங்கள், மருத்துவத்தில் கலப்படம், என பின்னடைவை நோக்கி செல்வது கவலைக்குரிய விடயமாகும்.

போதை அழிவின் பாதை கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • போதைப்பொருள் அறிமுகம்
  • போதைப்பொருள் பாவனையை ஒழித்தல்
  • போதைப்பொருளிலிருந்து மீளெலுதல்
  • முடிவுரை

முன்னுரை

இன்று இளைஞர் சமுதாயத்தின் மத்தியில் போதைப்பொருள் பாவனை என்பது மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகக் காணப்படுகின்றது.

இவர்கள் பொழுதுபோக்கிற்காகவும் சிறிது நேரம் கிடைக்கும் அற்ப சந்தோஷத்திற்காகவும் போதைப்பொருளிற்கு அடிமையாகின்றனர். இதனை தடுத்து நிறுத்துவது மட்டுமின்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் சமூகத்தின்  தலையாய கடமைகளில் ஒன்றாக காணப்படுகின்றது.

போதைப்பொருள் அறிமுகம்

போதை என்பது ஒருவரின் உடம்பில் எடுத்துக்கொள்ளும் பொழுது அல்லது உட்செலுத்தப்படும் பொழுது அவரின் உடல் மற்றும் மன நன்னிலையிலும் அறிவாற்றல், உணர்ச்சிகள் என்பவற்றிலும் குழப்பத்தை ஏற்படுத்தும் ஒரு ஊடகம் ஆகும்.

அந்தவகையில் போதைப்பொருட்களிற்கு உதாரணமாக மதுபான வகைகள், புகையிலை, கஞ்சா, அபின், ஹெரோயின், பான் மசாலா, போதை தரும்  இன்ஹேலர்கள் என பலவற்றை குறிப்பிடலாம்.

போதைப்பொருட்கள் உள ஆரோக்கியத்திற்கு பாதகமாக அமைவதோடு உடல் உறுப்புகளையும் பாதித்து இறுதி கட்டத்தில் மரணத்தைக் கூட ஏற்படுத்தலாம்.

போதைப்பொருள் பாவனை ஒழித்தல்

தன் சிந்தனையை போதையில் புதைத்து மனமயக்கத்தையும் குழப்பத்தையும் மனிதன் ஏற்படுத்திக் கொள்கின்றான்.

வரலாற்று ரீதியாக நோக்கினால் போதைப்பொருள் பாவனை பண்டைய காலம் தொட்டே களியாட்ட காலங்களில் மக்களுக்கு மகிழ்ச்சி தரும் பானங்களாகவும் மேலும் ஔடதங்களாகவும் பயன்படுத்தபட்டது என அறியக்கூடியதாக உள்ளது.

இன்றைய விஞ்ஞான வளர்ச்சி காரணமாக அவை நவீன முறையில் எளிமையாக தயாராகி சந்தையில் விடப்படுகின்றன.

பள்ளிப்பருவத்திலும் கல்லூரியிலும் தீய நபர்களின் பழக்கம் பொழுதுபோக்குக்காக பழகிய போதை பழக்கங்கள் என பழகிக் கொண்ட தீயப்பழக்கங்களை தாமாக கைவிட எண்ணி அதை விட மிகவும் பயங்கரமான போதையை பழகிக்கொண்டவர்களே அதிகம் எனலாம்.

இத்தகைய போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் தன் சுயத்தை இழந்தது மட்டுமன்றி குடும்ப வாழ்க்கை  சமுதாய அந்தஸ்து வேலைவாய்ப்பு  நல்ல நட்பு உறவினர்கள் என எல்லாம் இழந்து நிற்கின்றனர். 

இப்பொழுது மிகவும் இலகுவாக போதைப்பொருட்கள் ( சாராயம் மற்றும் அது சார் மதுபானங்கள்) கிடைக்கும் சந்தர்ப்பங்கள் அதிகமான சூழ்நிலை எங்கும் காணப்படுகின்றமை கவலைக்கிடமான விடயம் ஆகும்.

போதைப்பொருளிலிருந்து மீளெலுதல்

போதைப்பழக்கங்களினால் உடம்பில் ஒவ்வொரு உறுப்புகளும் படிப்படியாக செயலிழக்க தொடங்குகின்றன.

முதலில் நரம்புமண்டலம் பாதிப்படைவதால் உளவியல் ரீதியான பாதிப்புகளும் நடுக்கம், தலைவலி, மயக்கம் முதலிய பிரச்சினைகளும் அதனைத்தொடர்ந்து ஈரல், நுரையீரல், இதயம் என உடலின் முக்கிய உறுப்புகள் படிப்படியாகப் பாதிப்படைய தொடங்குகின்றன.

பின்னர் இரத்த அழுத்தம் குறைவதால் ஏனைய அங்கங்களும் செயலிழக்கத் தொடங்குகின்றன. இவற்றுக்கான உடனடி சிகிச்சைகள் செய்யப்படும் பட்சத்தில் மரணங்கள் நிகழாமல் தவிர்க்கலாம்.

போதைப்பொருள் பாவிக்கும் நபர்களை அவர்களின் நடத்தைகளை வைத்து அடையாளம் காணலாம்.

திடீர் சோர்வு, படிப்பில் அல்லது செய்யும் வேலையில் ஈடுபாடின்மை, திடீரென உடல் பருத்தல் அல்லது மெலிதல், கறுத்த முகம், சிவந்த கண்கள், அடிக்கடி நோய்வாய்ப்படுதல் என அவரின் வழமைக்கு மாறான பல பழக்கவழக்கங்கள் மற்றும் நடத்தைகள் என்பவற்றின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

அவரின் உரையாடல்களில், செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்கள், அவர்களின் தனிமை அறையில் யாரும் நுழைவதை விரும்பாமை, அடிக்கடி பணம் தேவைப்பாடு போன்றவற்றையும் அவதானிக்க மறக்க கூடாது.

இவற்றை அவதானித்து உடனடியாக மருத்தவரை நாடுவது மட்டுமல்லாது பாதிக்கப்பட்டவரின் உள ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் முயற்சியிலும் ஈடுபட வேண்டும்.

எந்தளவு போதைப்பொருள் பாவனையாளர்களை மீட்டெடுப்பதில் சமூகத்தாரின் பங்களிப்பு இருக்க வேண்டுமோ அந்தளவு போதைப்பொருள் மீண்டும் சமூகத்தில் பயன்பாட்டில் இல்லாதவாறு முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். 

முடிவுரை

உலக போதைப்பொருள் ஒழிப்பு தினமாக ஜூன் 26ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அத்தினத்தில் மட்டும் போதைப்பொருளுக்கு எதிரான கண்டன போராட்டங்கள், போதைப்பொருள் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துவதன் மூலம் போதைப்பழக்கத்தை முற்றாக ஒழிக்க முடியாது.

போதைப்பொருள் பாவனை என்பது ஒரு தனிநபரை மட்டுமன்றி ஒரு குறித்த சமுதாயத்தையும் கடந்து உலகளாவிய ரீதியில் ஒரு நாட்டிற்கு இழுக்கை ஏற்படுத்தி தர வல்லது என்பதை நாம் மறந்து விட கூடாது.

எனவே போதைப்பொருள் பாவனைக்கு எதிராக ஒவ்வொருவரும் ஒத்துழைக்க வேண்டும். போதைப்பொருள் இல்லாத சமூகத்திற்காக குரல் கொடுக்க வேண்டும்.

You May Also Like:

போதைப்பொருளும் மாணவர்களும் கட்டுரை

காலத்தின் அருமை கட்டுரை