இன்றைய நவீன உலகில் மாணவர்கள் பெரும்பாலானோர் போதைப் பொருள் பாவனை கொண்டவர்களாகவே, அதாவது போதைப் பொருட்களுக்கு அடிமையான நிலையிலேயே காணப்படுகின்றனர்.
இவ்வாறாக சமூகத்தில் மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகமாவதனால் மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால இலக்கு போன்ற அனைத்தும் சீர்கெடுவதனையே காணமுடிகின்றது.
போதைப்பொருளும் மாணவர்களும் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை
- மாணவர்கள் போதைப் பொருள் பாவிப்பதற்கான காரணங்கள்
- இவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் விளைவுகள்
- மாணவர்களை போதைப் பொருள் பாவணையில் இருந்து மீட்கும் வழிகள்
- முடிவுரை
முன்னுரை
நமது நாட்டில் மற்றும் இன்றி உலகின் பல பாகங்களிலும் மிகப்பெரியதொரு சவாலாக காணப்படுவது இந்த மாணவர் மத்தியில் போதைப் பொருள் பாவனை என்ற விடயமாகும்.
அதாவது போதை என்பது தன்னிலை மறக்கச் செய்தல், உடல்- உள பாதிப்புகளை ஏற்படுத்துதல் என்பதாகவே காணப்படுகின்ற நிலையில், மாணவர்கள் இவற்றினையும், இதன் விபரீதம் பற்றியும் அறியாமலேயே போதைப் பாவணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை
நிகழ்கால உலகில் சமூகத்தில் போதைப் பொருள் பாவனையே நாகரீகத்தின் உச்சம் என பலர் கருத்துவதனாலேயே, இன்று மாணவர்கள் மத்தியிலும் இந்த போதை பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது.
வீட்டில் இருந்து பல்வேறு தேவைகளுக்காக என்று மாணவர்கள் பணத்தைப் பெற்று அதனை கொண்டு இன்று போதையில் மூழ்கும் நிலையே உருவாகியுள்ளது.
பொதுவாகவே எமது மாணவர் சமூகம் சினிமா பிரபலங்களையும் அவர்களின் போதைப் பாவனை காட்சிகளையும் தமது வாழ்வியலின் வழிகாட்டிகளாகவே எடுத்துக் கொண்டு செயல்படும் நிலையே இன்று காணப்படுகின்றது.
மாணவர்கள் போதைப் பொருள் பாவிப்பதற்கான காரணங்கள்
தற்காலத்தில் மாணவர்கள் மத்தியில் மேலே தீய கலாச்சாரங்கள் மற்றும் நீளத்தையும் பழக்கவழக்கங்கள் போன்றவற்றில் ஊறிப் போய் உள்ள தன்மையினை காண முடியும்.
இன்னும் சினிமா படக்காட்சிகள் நாடகங்கள் போன்றவற்றில் மூழ்கியுள்ளமையினாலும் அதில் வரும் போதைப் பொருள் பாவனை காட்சிகளைக் கண்டு அதனால் ஈர்க்கப்படும் நிலையே மாணவர்கள் அடைந்துள்ளனர்.
மேலும் வீட்டில் தந்தை போதைப்பொருள் பாவனை கொண்டவராக இருந்தால் அதனை கண்டு மாணவர்களும் போதைப் பொருட்களை பாவிக்கும், அதற்கு அடிமையாகும் நிலையும் ஏற்படுகின்றது இன்னும் தீய நண்பர்கள் உடைய நட்பும் இவர்களை போதைப் பொருள் பாவனைக்கு அடிபணிய செய்வதாகவே அமைந்து விடுகின்றது.
மாணவர்கள் மத்தியில் போதை பொருள் பாவணையினால் ஏற்படும் விளைவுகள்
போதை பொருள் பாவணையின் காரணமாக சுவாசப் புற்றுநோய், இருதய நோய்கள், கருச்சிதைவு, சிரோசிஸ் போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.
மேலும் மாணவர்களின் கல்வி, எதிர்காலம் என்பனவும் இந்த போதைப்பொருள் பாவனையினால் கேள்விக்கு உள்ளாக்கப்படுவதோடு, உடல்- உளமும் பாதிக்கப்படுகின்றது.
இன்னும் தன்னுடைய சுய கௌரவத்தையும் இழக்கும் நிலைக்கு ஒருவனை விட்டு செல்வதாகவே இந்த போதைப்பொருள் பாவனை அமைந்து விடுகின்றது.
மாணவர்களை போதைப் பொருள் பாவணையில் இருந்து மீட்கும் வழிமுறைகள்
போதைப் பொருள்களுக்கு அடிமையாக உள்ள மாணவர்களை அழைத்து அவர்களுக்கான ஆலோசனைகளை வழங்குவதனால் அவருக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தி அவருடைய வாழ்வை சீராக மாற்றி அமைப்பதற்கு உதவிட முடியும்.
இன்னும் போதை பொருள் பாவணையினால் ஏற்படக்கூடிய தீங்குகளைப் பற்றி தெளிவாக எடுத்து கூறுதல் மற்றும் மாணவர்களின் போதைப்பொருள் பற்றிய சிந்தனை, எண்ணம் என்பவற்றினை மாற்றி அமைப்பதற்காக அவர்களுக்கு புத்துணர்வூட்டும் வகையில் பொழுதுபோக்குகளை வழங்குதல் என்பனவும் இவர்களை இந்த போதைப் பொருள் பழக்கத்தில் இருந்து மீட்பதற்கான முயற்சிகளாகவே அமையும்.
முடிவுரை
“இன்றைய இளைஞர்கள் தான் நாளைய தலைவர்கள்” எனும் கூற்றுக்கு அமைவாக எமது எதிர்கால சந்ததிகளான மாணவச் செல்வங்கள் இந்த போதைப்பொருள் பாவனை என்பதில் சிக்குண்டு உள்ளமையினை கவனத்திற் கொண்டு அவர்களுக்கான தெளிவூட்டல்களை வழங்கி எமது எதிர்கால சந்ததிகளை கட்டுக்கோப்பான சீரான வாழ்வுக்குள் கொண்டுவர வேண்டியது எமது கடமையாகும்.
You May Also Like: