பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தவர் யார்

பிரம்மகுப்தர்

பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தவர் யார்?பிரம்மகுப்தர்
பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தவர்கள் யார்?இந்தியர்கள்

பிரம்மகுப்தர் இளமைப்பருவம்

பிரம்மகுப்தர் 598ல் யிசுனுகுப்தாவிற்கு பில்லாமாலாவில் மகனாகப் பிறந்தார். பிரம்மகுப்தர் சைவசமயத்தைச் சேர்ந்தவர். இந்தியாவில் முக்கியமான நான்கு வானியல் பள்ளிக்கூடங்களில் ஒன்றான பிரம்மபக்சா பாடசாலையில் படித்து வானியல் வல்லுநர் ஆனார்.

அப்பொழுது சக வானியல் வல்லுனர்களாக பணி புரிந்த ஆர்யபட்டா, லதாதேவா, பிரடையூம்னா, வராகமிதிரா,சிம்கா, சிரிசேனா, விஜயநந்தன் மற்றும் விசுணுசந்த்ரா போன்ற வானியலாளர்களது படைப்புக்களை ஆய்வு செய்தார். பிரம்மகுப்தர் தன்னுடைய 30வயதில் பிரம்மசுபுட சித்தாந்தம் என்ற நூலை எழுதினார்.

படைப்புக்கள்

இந்த நூல் 1008 வசனங்கள் கொண்ட 24 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. இந்த நூல் வானியலுக்கான சிறந்த நூலாகக் கருதப்படுகின்றது. இந்த நூலில் முக்கோணவியல், வடிவவியல், இயற்கணிதம், படிமுறைத் தீர்வு போன்ற பிரிவுகள் அடங்கியுள்ளன. அந்த நூலில் புதிய கருத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பின்னர் தன்னுடைய 67வது வயதில் வானியலின் இன்னொரு மையமான உச்சியனிக்கு சென்றார். அப்போது இவர் மாணவர்களுக்காக நடைமுறைக் கையேடான கண்டகாத்யகம் என்னும் புகழ்பெற்ற படைப்பை உருவாக்கினார்.

பிரம்மகுப்தரின் கணிதவியல்

பிரம்மசுபுட சித்தாந்தத்தில் இந்தியாவின் கணிதவியலாளர்களுக்கிடையிலான மிகத் துல்லியமான சீர்திருத்தங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. கணிதம் வியாபார உலகில் பயன்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தன.

இவருடைய கணிதவியல் வானியல் அளவுருக்கள் மற்றும் கோட்பாடுகளையே பெரிதும் விளக்கின. அறிவியல் வரலாற்று ஆசிரியரான சியார்ச்சு சார்டன் என்பவர் “பிரம்மகுப்தர் அவரது இனத்தின் மிகப்பெரிய அறிவியலாளர்களில் ஒருவர் என்றும் அவரது காலத்தின் மிகப்பெரிய விஞ்ஞானிகளில் ஒருவர்” எனக் கூறியுள்ளார்.

பிரம்ம குப்தரின் நூல்கள் அல்மன்சூரின் அரசவையில் இருந்த முகம்மத் அல்- பாசாரி என்பவரால் அரபுமொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.

இவருடைய நூல்களின் மூலம் தசம எண் முறைமை மற்றும் பிரம்தகுப்தரின் வழிமுறைகளும் கணிதத்திற்காக உலகம் முழுவதும் பரவின. இவருடைய இந்திய வானியல் கருத்துக்கள் பல நூற்றாண்டுகள் கடந்தும் உலகெங்கும் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

பிரம்மகுப்தர் பிரம்மசுபுடம் சித்தாந்தம் என்னும் நூலில் ஒருபடிச் சமன்பாட்டிற்குரிய ஒரு தீர்வை பதினெட்டாவது அத்தியாயத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நூலில் இந்து அரபு எண் முறைமையின் அடிப்படை அமைப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. இவை தவிர கணக்கீடுகள், பின்னங்கள், வர்க்கம், வர்க்கமூலம், கனம், கனமூலம் போன்ற விபரங்களும் விளக்கப்பட்டுள்ளன.

பூச்சியத்தின் அறிமுகம்

பூச்சியத்தை அறிமுகப்படுத்தியவர் பிரம்மகுப்தர் ஆவார். இவர் நேர்மறை, எதிர்மறை எண்களுடன் பூச்சியம் தொடர்பான விதிகளையும் கூறியுள்ளார்.

பூச்சியத்தை இட நிரப்பியாகவோ அல்லது ஒரு எண்ணுக்குப் பதிலாக பிரதியிடும் குறியீடாகவோ பூச்சியத்தைக் குறிக்காமல் அதை ஒரு எண்ணாகக் கருத வேண்டும் என முதன்முதலாக விளக்கினார்.

அதுமட்டுமல்லாமல் பூச்சியத்தின் பெருக்கல் கணக்கீடுகள் மற்றும் பூச்சியத்தின் வகுத்தல் தொடர்பான கணக்கீடுகளையும் அறிமுகப்படுத்தினார்.

பிரம்மகுப்தரது தேற்றம்

வடிவவியலில் ஒரு வட்ட நாற்கரத்தின் மூலைவிட்டங்கள் செங்குத்தாக வெட்டினால், அந்த நாற்கரத்தின் பக்கத்தின் செங்குத்துக் கோடு மூலைவிட்டங்கள் வெட்டும் புள்ளி வழியாகச் சென்றால், அந்த கோடு அந்த நாற்கரத்தின் எதிர்ப்பக்கத்தை இரு சரிபாதியாக வெட்டும் என்ற தேற்றத்தை கண்டுபிடித்தார்.

பிரம்மகுப்தர் கண்டுபிடித்தமையால் இந்த தேற்றம்  பிரம்மகுப்தர் தேற்றம் என்று அழைக்கப்படுகின்றது. பிரம்மகுப்தர் 702ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார்.

You May Also Like:

தமிழ்த்தாய் வாழ்த்து எழுதியவர் யார்

கருப்பு பணம் என்றால் என்ன