நம்முடைய கல்லீரலில் மஞ்சள் நிறத்தில் சுரக்கின்ற ஒரு வகையான திரவமே பித்தம் ஆகும். இது உடலில் உணவு உட்கொண்ட பின்னர் அதன் செரிமாணத்திற்கு பெரிதும் உதவுகின்றது. பித்த நீர் அதிகமாகச் சுரக்கும் போது உடலில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இந்த பித்தம் குறைவதற்கான எளிய வழிமுறைகள் சிலவற்றைப் பார்ப்போம்.
பித்தம் குறைய வழிகள்
- சுக்கு, நெல்லிக்காய், சீரகம் போன்றவற்றைப் பொடியாக்கி அளவில் சமனாக எடுத்து 1ஸ்பூன் அளவில் 1 கிளாஸ் தண்ணீரில் கலந்து தினமும் சாப்பிடுவதற்கு ½ மணி நேரத்தின் முன் மூன்று வேளையும் உட்கொண்டு வர பித்தம் சீராகும்.
- மல்லி, சீரகம், சுக்கு, தேன் ஆகியவற்றை சம அளவில் எடுத்து தேனீர் போன்று தயாரித்து அருந்தி வர பித்தம் குணமாகும்.
- இஞ்சியை தோல் அகற்றி சின்னஞ்சிறு துண்டுகளாக்கி தேனில் இரு நாட்கள் ஊற வைத்து பின்னர் தினமும் காலையில் உண்டு வர பித்தம் குறையும்.
- தினமும் மதிய உணவுக்கு பின்னர் இரசாயனம் பயன்படுத்தாத கொய்யாப்பழம் ஒன்று உண்டு வர பித்தப் பிரச்சனை தீரும்.
- லெமன் ஜூஸ் தினமும் காலையில் வெறும் வயிற்றில் ¼ கப் தண்ணீர் கலக்காமல் குடித்து வர பித்தப் பிரச்சனை குறையும்.
- தினமும் உணவில் போதியளவு மிளகைச் சேர்த்து உண்பதன் மூலம் பித்தப் பிரச்சனை தீரும்.
- பழுத்த கொய்யாப்பழம், லெமன், மிளகு போன்றவற்றை சேர்த்து ஜூஸாக்கி காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர பித்தம் நீங்கி விடும்.
- கருஞ்சீரகத்தை சிறிதளவு எடுத்து சுத்தமான பருத்தி துணியில் கட்டி அரிசியுடன் போட்டு வடித்தால் அந்த சாறு சாதத்தில் ஊறி நாம் சோறு உண்ணும் போது அதன் சாறும் சேர்ந்து உண்ணப்படுகின்றது.இது பித்தம் தொடர்பான பிரச்சினைகள் குறைக்கும்.
- சீரக சூரணத்தை கடையில் வாங்கி உணவுகளுடன் சேர்த்து உண்டு வர பித்தப் பிரச்சனைகள் தீரும்.
- இந்துப்பு உணவில் சேர்ப்பதன் மூலம் கல்லீரல் பித்தப்பை பிரச்சனை இல்லாமல் போகும்.
- உலர் திராட்சை பத்து வீதம் காலை, மதியம், மாலை, இரவு வேளைகளில் மெல்லுவதால் பித்தப் பிரச்சனைகள் தீரும்.
- தினமும் காலை வெறும் வயிற்றில் உலர் திராட்சை, இஞ்சி, ஏலக்காய் போன்றனவற்றை அரைத்து அதன் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர பித்தம் சரியாகும்.
- கறிவேப்பிலையுடன் சிறிதளவு புளி மற்றும் பொறிகடலை சேர்த்து துவையல் போன்று செய்து உணவுடன் சேர்த்து உண்டு வர பித்தப் பிரச்சனை சீக்கிரம் குணமாகும்.
- இயலுமான வரையில் எண்ணெயில் பொரித்து உணவுப் பண்டங்கள் மற்றும் கடலை மாவு, கடலை மாவினில் செய்த வடை மிக்சர் போன்ற பண்டங்கள் மற்றும் கடலை எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற எண்ணெய் வகைகளில் தயாரித்த உணவுகள் போன்றவற்றைத் தவிர்த்து உண்ணுதல் பித்தம் தொடர்பான பிரச்சினைகளைக் குறைக்கும். குறிப்பாக சமையலுக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துதல் நன்று.
பித்தப் பிரச்சனை உருவாகுவதால் உடலில் மன அழுத்தம் போன்ற பல மேலதிக பிரச்சினைகள் எழுகின்றன. எனவே இயலுமான வரை மேற்குறிப்பிட்ட இயற்கை விதிமுறைகளைப் பின்பற்றி பித்தப் பிரச்சனையில் இருந்து விடுபடுவோமாக.
You May Also Like: