பாஷாணங்கள் என்றால் என்ன

உலகில் என்ன தான் அறிவியலும், விஞ்ஞானமும் வளர்ச்சி அடைந்திருந்தாலும் அதையும் தாண்டி ஆன்மிகமும், அதை வளர்த்தெடுத்த சித்தர்களின் மகிமையும் சிறப்பானது.

சித்தர்கள் பாடலில் வைத்தியத்திற்காக பல உலோகங்களும், உலோக உப்புகளும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இவற்றைத்தான் பாஷாணங்கள் என்று கூறுகிறார்கள்.

பாஷாணங்கள் அல்லது பாடாணங்கள் என அறியப்படும் இவற்றை சித்தர்கள், தங்களின் மருத்துவ முறையில் அடிப்படை மூலகங்களில் ஒன்றாக பயன்படுத்தினர்.

பாஷாணங்கள் மொத்தம் 64 உள்ளன. இதில் நீலி என்றொரு வகையும் உண்டு. நீலி மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க கூடியதாகும்.

அதனால் தான் “ஆத்தாடி அவள் நீலியடி அறுபத்து நான்கு பேருக்கும் அவள் காளியடி” என சித்தர்கள் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. (அறுபத்து நான்கு என்பது பாஷாணங்களின் வகைகளாகும்).

பாஷாணங்கள் என்றால் என்ன

பாஷாணங்கள் என்றால் “விஷம்” என்று பொருள்படும். சித்த மருத்துவத்தின் அடிப்படை மூலங்களில் ஒன்றுதான் பாஷாணங்கள். பாஷாணங்கள் என்பது பூமிக்கடியிலும், மலைகளிலும் கிடைக்க கூடிய தாதுக்களாகும்.

நவபாஷாணங்கள்

ஒன்பது வகையான பாஷாணங்களுக்கும் வேதியியல் இயற்பியல் பண்புகள் உண்டு. அதை சித்த இயல் முறைப்படி அணுக்களை பிரித்து சேர்ப்பதை நவபாஷாணம் என்பார்கள்.

ஒன்பது பாஷாணங்கள் என்னவெனில் சாதிலிங்கம், மனோ சிலை, காந்தம், காரம் கந்தகம், பூரம், வெள்ளை பாஷாணம், கௌரி பாஷாணம், தொட்டி பாஷாணம் என்பன ஆகும்.

இந்த ஒன்பது வகையான அபூர்வமான மூலிகைகளையும், விஷங்களையும் கொண்டு மிகக் கடினமான செயன்முறைகளால் உருவாக்கப்படுவதே நவபாஷாணங்கள் எனப்படுபவையாகும்.

இந்த நவபாஷாணத்தின் தன்மையில் நவக்கிரகங்களின் குணங்கள் ஒத்திருக்கின்றன. நவ பாசன கட்டு என்பது சித்தர்களுக்கு மட்டுமே சாத்தியமான விஷயமாகும் என்றார் போகர்.

தமிழ்நாட்டில் மூன்று இடங்களில் நவபாஷாண சிலைகள் உள்ளன. பழனி மலை கோவில் கொடைக்கானல் அருகில் உள்ள பூம்பாறை, குழந்தை வேலப்பர் கோயில், தேவைப்பட்டினம் போன்ற இடங்களில் நவபாஷாணங்கள் அமைந்துள்ளன.

நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ சிலைகள், நவக்கிரகங்களின் சக்தியை பெற்றுவிடுகிறது என்பது நம்பிக்கையாகும். நவபாஷாணங்களால் உருவான சுவாமி சிலையை வழிபடுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும்.

நவபாஷாண சிலைக்கு அபிஷேகம் செய்து, அந்த அபிஷேக தீர்த்தத்தை நாம் அருந்தினால் தீராத நோய் எதுவாக இருந்தாலும் தீர்ந்துவிடும். நவக்கிரக தோஷங்கள், நவக்கிரக பரிகாரங்கள், நவக்கிரக திசைகளின் தாக்கங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த பாதிப்புகளிலிருந்து மீண்டுவர நவபாஷாண சிலை வழிபாடு நல்ல பலனைத்தரும்.

பாஷாணத்திலிருந்து உருவாகும் சூட்சுமமான கதிர் வீச்சு, கட்டுபவரின் மனோநிலையை மேம்படுத்துகின்றது எனக் கூறப்படுகின்றது.

போகர்

ஆன்மீக மணம் கமழும் தமிழகத்தில் எண்ணற்ற சித்தர்கள் தோன்றினாலும் அதில் முக்கியமானவர்களைத் தொகுத்து 18 சித்தர்கள் என வகைப்படுத்தியுள்ளனர். இந்த 18 சித்தர்களில் போகர் சித்தரும் ஒருவராவார்.

போகருக்கு 63 சீடர்கள் இரந்தனர். இவற்றுள் முக்கியமானவர்களில் சிலர் புலிபாணி, கோரக்கர், கருஊரார், நாகராஜ், கொங்கனர் போன்றவர்களாவர். இதில் புலிபாணியும் கோரக்கரும் போகரின் நவபாஷண சிலை செய்வதற்கு உதவியாய் இருந்தனர்.

அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி மலையில் வீற்றிருக்கும் செந்திலாண்டவரின் சிலை ஒன்பது விதமான மூலிகைக் கொண்டு பக்குவமாய் இவரால் செய்யப்பட்டதாகும்.

இதன் பிரதான அம்சம் யாதெனில் இரவில் இந்த சிலைக்கு வியர்க்கும். ஒவ்வொரு வியர்வைத் துளிகளிலும் அறிவியலை மிஞ்சும் மருத்துவத் தன்மை உள்ளது.

You May Also Like:

ஊட்டி சுற்றுலா கட்டுரை

யோகா என்றால் என்ன