பறவைகள் பற்றிய கட்டுரை

paravai patri katturai in tamil

பறவைகள் பெரும்பாலும் தமது வாழ்வதற்கென வாழ்விடத்தை அமைப்பவையாகக் காணப்படுகின்றன.

பறவைகள் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • பறவை அறிமுகம்
  • பறவைகளின் வாழ்க்கைமுறை
  • பறவைகளின் வகைகள்
  • மனிதர்களுக்கு அளிக்கும் பயன்கள்
  • முடிவுரை

முன்னுரை

இப்பூமியில் படைக்கப்பட்ட உயிரினங்களுள் மிகச்சிறப்பான அம்சங்களைக் கொண்ட உயிரினம் பறவையாகும். பறவைகள் சுறுசுறுப்புக்கும் உற்சாகமாக வாழ்தலுக்கும் பெயர்போனவை ஆகும்.

மனிதர்களைப் போல் சோம்பியிராமல் வெகுதூரம் உயரப் பறந்து இரைதேடி வாழும் இவை, கூட்டம் கூட்டமாக ஒற்றுமையாக வாழக் கூடியன.

அழிந்து வரும் ஆபத்தில் உள்ள பறவையினங்கள் பற்றியும் அவற்றின் வாழ்க்கை முறையையும் அவை இயற்கைக்கு அளிக்கும் நன்மைகளை அறிந்து கொள்வது அவசியமாகும்.

பறவை அறிமுகம்

பறவைகள் முதுகெலும்புடைய சிறிய இறகுகளால் ஆன இரு சிறகுகளை உடைய உயிரினங்களாகும். உலகத்தில் மொத்தமாக 9672 பறவையினங்கள் காணப்படுவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

பறவைகளின் உடலமைவானது அவை வாழ்கின்ற சூழலிற்கு ஏற்றவாறு படைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, கௌதாரி மற்றும் காடை போன்றவை பழுப்பு நிறத்தில் அமைந்துள்ளதால் அவை தரையில் நடாமாடும் போது இனங்கண்டு கொள்வது கடினமாகும்.

சில பறவைகள் உயரப் பறக்க கூடியவையாகவும், சில வேகமாக ஓடக்கூடிய வகையில் நீண்ட கால்களைக் கொண்டும் காணப்படும். நீந்தக் கூடியவாறு உடலமைப்பைக் கொண்ட பறவையினங்களும் காணப்படுகின்றன.

பறவைகளின் வகைகள்

பறக்கக் கூடிய சிறப்பியல்பை வைத்து பறவைகள் என அழைக்கப்பட்டாலும், பறவைகளை பறக்கக் கூடியன, பறக்க முடியாதவை என இருவகைப்படுத்த முடியும்.

பறக்கவியலாத பறவைகளிற்கு உதாரணமாக நமது வீடுகளில் வாழ்கின்ற கோழி, வாத்து இனங்களை குறிப்பிடலாம். அதனைத் தவிர பென்குயின், கிவிப் பறவை, தீக்கோழிகள் போன்றவற்றையும் குறிப்பிடலாம்.

மேலும் பறவைகளை பாலூட்டிகள் மற்றும் ஊர்வன எனவும் வகைப்படுத்தலாம். இரைதேடும் நேரத்தை அடிப்படையாகக் கொண்டும் பறவைகளை வகைப்படுத்தலாம். ஆந்தை, வெளவால் போன்றவை இரவில் இரைதேடும்.

பறவைகளின் வாழ்க்கைமுறை

பறவைகள் பெரும்பாலும் தமது வாழ்வதற்கென வாழ்விடத்தை அமைப்பவையாகக் காணப்படுகின்றன. சில பறவைகள் கூடு கட்டுவதற்கான மூலப்பொருட்களை சிறுக சிறுக சேமித்து வெவ்வேறு முறைகளில் கூடுகளைக் கட்டுகின்றன.

தூக்கணங்குருவிகள் அமைக்கும் கூடுகள் கலைநயத்துடன் சிக்கலான அமைப்பு முறையில் காணப்படும். மரங்கொத்திகள் பெரும் மரங்களில் துளையிட்டு அதில் வாழும். கிளி மற்றும் ஆந்தை போன்றனவும் பொந்திலே வசிக்கின்றன. பறவைகள் பெரும்பாலும் கூட்டாக வாழ்வதையே விரும்புகின்றன.

மனிதர்களுக்கு அளிக்கும் பயன்கள்

பறவைகள் மனிதர்களுக்கு பல்வேறு நன்மைகளை பெற்றுத்தருகின்றன. இயற்கையோடு இணைந்த அவைகளின் வாழ்க்கை முறையானது இயற்கையின் நீடித்ததன்மைக்கு காரணமாய் அமைகின்றன.

பறவைகளின் நடமாட்டம் உள்ள அவற்றின் வாழ்விடங்களில் மட்டுமே மனிதஇனத்தால் நிலைத்திருக்க முடியுமென ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. அனைத்தும் உண்ணியாகக் கருதப்படுகின்ற காகம் சூழலில் காணப்படுகின்ற அனைத்து கழிவுகளையும் உண்டு சூழலை சுத்தமாக வைத்திருக்க உதவுகின்றது.

ஊனுண்ணியான கழுகு போன்றவை இறந்த உயிரியங்களின் உடலை உண்ணுகின்றது. மைனா, செண்பகப் பறவை, சிட்டுக்குருவி போன்றன விவசாயத்திற்கு தீங்கு விளைவிக்கும் சிறிய உயிரியனங்களை உண்டு வாழ்கின்றன.

இதனைத்தவிர இன்று மக்களிடம் பிரபல்யமாக மாறிவரும் பொழுது போக்கு பறவைகளை அவதானித்தலாகும். பறவைகளின் அசைவுகளை அவதானிப்பது மனஅழுத்தத்தை குறைப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

முடிவுரை

பல்வேறு அபாயத்தை எதிர்நோக்கி இருக்கும் பறவைகளையும் அவைகளின் வாழ்விடங்களையும் பாதுகாப்பது எம் ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும். பறவைகளின் நடமாட்டத்தை அடிப்படையாக வைத்தே எதிர்வரும் காலங்களில் மாற்றம்பெறும் காலநிலைகளை எதிர்வு கூறுகின்றனர்.

குறிப்பிட்ட ஒரு இடத்திலிருந்து பறவையினங்கள் முற்றாக வெளியேறுதலானது மனித இனம் அழிவுப்பாதைக்கு செல்வதற்கான அறிகுறியாகும். ஆகவே பறவையினங்களை பாதுகாத்து சிறந்ததொரு உலகை கட்டியெழுப்புவோம்.

You May Also Like:

நீரின்றி அமையாது உலகு கட்டுரை

கல்வி கண் திறந்தவர் கட்டுரை