இன்றைய நவீன உலகப் பொருளாதாரமானது பங்குச் சந்தையை சார்ந்துள்ளது. மேலும் பங்குச்சந்தையானது பெரும்பாலானவர்கள் செய்யும் வணிகமாக மாறி வருகின்றது. பங்குச்சந்தைக்கு ஒரு குறிப்பிட்ட இருப்பிடம் (Physical presence) தேவைப்படுவதில்லை. கணினி மூலமாகவும், முகவர்கள் மூலமாகவும் பங்குகளை வாங்க மற்றும் விற்க முடியும்.
பங்குச் சந்தையில் நிறுவனத்தாரர் ஒருவர் தமது பணத்தை முதலீடு செய்தால் நட்டமோ இலாபமோ அவரை மட்டும் சாராது. பங்குகளை வெளியிடுவதன் மூலம் இலாப, நட்டம் இரண்டுமே பங்குதாரர்களிடையே பகிர்ந்து அளிக்கப்படுகின்றது.
பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட கம்பெனிகள் மாத்திரம் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள முடியும். ஆகவே ஒருவரால் ஒரு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பங்குகளை மாத்திரமே வாங்கவும், விற்கவும் முடியும்.
பங்குச் சந்தையில் இலாபம் அடைய முடியும் என்பதற்கு அப்பால், இது அபாயகரமானதும் கூட. உலகின் ஏதாவது ஒரு மூலையில் பங்குச் சந்தையை பாதிக்கும் ஒரு செய்தி ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு மூலையில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
பங்குச்சந்தை பற்றி அறியாமல் அங்கு பங்கு பெறுவது என்பது ஆபத்தானதாகும். பங்குச் சந்தைகளில் சரியான நேரத்தில் சரியான முடிவெடுத்து லாபம் ஈட்டுபவர்களே வெற்றியாளர்கள் ஆகின்றனர். வலுவான பங்குகளில் முதலீடு செய்வதன் மூலம் ஒரு லட்சாதிபதியாகலாம்.
முக்கிய இலாபத்தைத்தரக் கூடிய துறைகளையும், நிறுவனங்களைம் நன்கு தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். சிந்தனைத்திறனையும், தர்க்க அறிவையும் பயன்படுத்தி எப்பங்குகளில் ஈடுபடலாம் என முடிவு கொள்வது சிறந்தது.
பங்கு சந்தை என்றால் என்ன
ஒரு தொழிலை மேற்கொள்ள முதலீடு வேண்டும். அந்த முதலீட்டை ஒருவரை செய்தால் அவரை உரிமையாளர் என்கின்றோம். அதாவது அந்த தொழிலில் இருந்து வரும் இலாப நஷ்டங்கள் அவர் ஒருவரையே சேரும். இதே முதலீட்டை இரண்டு அல்லது, மூன்று பேர் சேர்ந்து செய்தால் இலாப, நஷ்டங்கள் பங்குதாரர்களைச் சேரும். இதனை Partnership என்கின்றோம். இதில் பெரிய அளவிலான மூலதனத்தை திரட்டுவது கடினமானதாகும்.
ஆயிரக்கணக்கான கோடிகளில் முதலீடு செய்வது என்பது கடினமானதாகும். எனவே அதிக முதலீடு தேவைப்படும் தொழில் என்றால் அதற்கு பணத்தை அதிகமானவர்களிடமிருந்து வாங்க limited company ஆரம்பிக்கப்படும் போது முதலீட்டை சிறுசிறு பாகங்களாக பிரித்து (பங்குகள் – Shares) ஒவ்வொருவருக்கும் பங்குகளை வாங்கி அந்த நிறுவனத்தில் முதலீடு செய்வதுதான் பங்கு முதலீடு ஆகும். இந்தப் பங்குகளை விற்க மற்றும் வாங்க உருவாக்கப்பட்டது தான் பங்குச்சந்தையாகும்.
சுருங்கக் கூறின் மிகவும் இலாபம் சம்பாதிக்கும் நிறுவனத்தை உருவாக்கி அதனை நடத்த முடியாத போது லாபம் சம்பாதிக்கும் நிறுவனங்களின் உரிமையாளராக மாற உதவும் பங்குகளை வாங்க அல்லது விற்க ஏற்படும் அமைப்பே பங்குச்சந்தை எனப்படும். அல்லது வெளிப்படையாக வெளியிடப்பட்டு வர்த்தகம் செய்யப்படும் சந்தைகள் பங்கு சந்தைகள் எனப்படும்.
பங்குச் சந்தையின் வகைகள்
பங்குச்சந்தையானது முதன்மை பங்குச் சந்தை, இரண்டாம் நிலை பங்குச் சந்தை என இரண்டு வகையாகப் பிரிக்கப்படும். முதன்மை பங்குச்சந்தை என்பது ஒரு நிறுவனமானது நேரடியாக பங்குகளை வெளியிடுமாயின் அது முதன்மை பங்குச் சந்தையாகும். முதன்மைச் சந்தையில் பங்குகளை வாங்கியவர்கள் தமது பங்குகளை விற்கவோ மற்றவர்களிடம் வாங்கவோ அணுகுவது இரண்டாம் நிலை பங்குச் சந்தை எனப்படும்.
You May Also Like: