நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றிய கட்டுரை

subhash chandra bose katturai in tamil

இந்தியாவுக்கு சுதந்திரம் கிட்ட வேண்டுமாயின் சிறந்த வழி போர் தான் என்ற கருத்தினை முன்வைத்தவர் இவர். இந்திய மக்களினால் போற்றப்படும் ஒரு தலைவனாகவே நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விளங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்க உண்மையாகும்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • வாழ்க்கை வரலாறு
  • சுபாஷ் சந்திர போஸின் கருத்துக்கள்
  • சுபாஷ் சந்திர போஸின் பொன்மொழிகள்
  • சுபாஷ் சந்திர போஸின் சுதந்திரப் போராட்டம்
  • முடிவுரை

முன்னுரை

இந்திய நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராடிய மாவீரராகவே நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விளங்குகின்றார். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பலர் ஈடுபட்டிருந்தாலும் இவரும் அதில் முக்கியமான ஒருவராகவே காணப்படுகின்றார். நேதாஜி என்பது இவருடைய சிறப்பு பேயராகவே காணப்படுகின்றது.

வாழ்க்கை வரலாறு

1997 ஆம் ஆண்டு இந்தியாவிலுள்ள கட்டாக் எனும் மாநிலத்தில் ஒரிசா எனும் இடத்தில் இந்துக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். குடும்பத்தில் ஒன்பதாவது குழந்தையாக இவர் பிறந்தார்.

ஆரம்பக் கல்வியை தனது சொந்த ஊரிலே பயின்ற போதும் உயர்கல்வியை கொல்கத்தா ரெவன்சா கல்லூரியில் தொடர்ந்தார். தன்னுடைய சிறு பருவ முதலே ஆன்மீகவாதிகளால் ஈர்க்கப்பட்ட ஒருவராகவே இருந்தார்.

இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது வெளிநாடுகளில் போர் கைதிகளாக இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை இணைத்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியவர். ஆங்கிலேயரை எதிர்த்து போர் புரிந்த நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய மாவீரன் இவர் ஆவார்.

சுபாஷ் சந்திர போஸின் கருத்துக்கள்

சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் மிகவும் பிரதானமான ஒரு கருத்தாக “இந்தியாவுக்கு நிபந்தனை அற்ற முழு விடுதலை கிடைக்க வேண்டும்” என்பதாகும்.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடுவதே எமது விடுதலையை உறுதிப்படுத்தும் என்ற கருத்தினை கொண்டவராகவும் காணப்பட்டார்.

சுபாஷ் சந்திர போஸின் பொன்மொழிகள்

சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் மக்களை ஈர்க்கும் வகையில் பல பொன்மொழிகளை முன் வைத்துள்ளார். அவற்றுள் சிலவற்றை பின்வருமாறு நோக்கலாம்.

  • “முதலில் தன்னை மாற்றிக் கொள்ள தயாராக இருப்பவன் மட்டுமே உலகை மாற்ற தகுதியானவன்”
  • “பேச்சுவார்த்தையின் மூலம் வரலாற்றில் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டுவர முடியாது”
  • “சுதந்திரம் கொடுக்கப்படுவதில்லை எடுக்கப்படுகின்றது”
  • “பிறந்த குழந்தைகள் கூட அழுகை எனும் புரட்சி செய்து தான் தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றது”

போன்றவாறான பல்வேறு புரட்சிகரமான பொன்மொழிகளை மொழிந்துள்ளார்.

சுபாஷ் சந்திர போஸின் சுதந்திரப் போராட்டம்

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கான ஒரே வழி பிரித்தானியர்களுக்கு எதிரான போராட்டமே ஆகும் என்பதில் மும்முரமாக செய்யப்பட்டவரே சுபாஷ் சந்திரபோஸ் ஆவார்.

1919ல் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் சுபாஷ் சந்திர போஸை சுதந்திர போராட்டத்தில் ஈடுபட வழி வகுத்தது.

தான் மட்டுமல்லாமல் தன் மாணவர்களும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்பதற்காக மேல்நாட்டு விடுதலைப் போர் வரலாறுகளை தன் கல்லூரி மாணவர்களுக்கு விடுதலை உணர்ச்சி பொங்க சொற்பொழிவு ஆற்றிய ஒருவராகவுமே காணப்படுகின்றார்.

முடிவுரை

இன்று நம் இந்திய தேசம் சுதந்திரமாக செயல்படுவதற்கு அடித்தளம் இட்டவர்களுள் சுபாஷ் சந்திர போஸ் இவரும் ஒருவராவார். எனவே அவருடைய அப்பணியை நாம் ஒருபோதும் மறக்க கூடாது.

இவர் 1945 ஆம் ஆண்டு மரணித்த போதிலும் அவருடைய மரணம் நிகழ்ந்தமைக்கான காரணம் சர்ச்சைக்குரியதாகவே காணப்படுகின்றது. இன்று ஒவ்வொரு இந்தியராலும் போற்றப்படும் ஒருவராகவே நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விளங்குகின்றார்.

You May Also Like:

விடுதலைப் போரில் சுபாஷ் சந்திரபோஸ் கட்டுரை

அறிஞர் அண்ணா பற்றிய கட்டுரை