நுகர்வோர் பாதுகாப்பு பற்றிய கட்டுரை

nugarvor pathukappu katturai in tamil

ஒரு நபரோ, நிறுவனமோ தமக்கு தேவையான பொருட்களை அல்லது சேவைகளை ஓரிடத்தில் இருந்து பெற்றுக் கொள்வது நுகர்வு எனப்படுகிறது.

நுகர்வோர் பாதுகாப்பு பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்
  • நுகர்வோர் எப்போது புகார் செய்யலாம்
  • நுகர்வோர் உரிமை
  • நுகர்வோருக்கான உரிமையின் முக்கியத்துவம்
  • முடிவுரை

முன்னுரை

ஓரிடத்தில் இருந்து பொருட்களையோ அல்லது சேவையினையா பெற்றுக் கொள்பவர்கள் நுகர்வோர் என அழைக்கப்படுகின்றனர். இந்த நுகர்வோர்கள் சரியான முறையில் தமக்கு வேண்டிவற்றை பெற்றுக் கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

இவற்றில் இருந்து நுகர்வோரை பாதுகாக்கும் பொருட்டு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட்டது. இக்கட்டுரையின் மூலம் நுகர்வோர் பாதுகாப்பு பற்றி அறிந்து கொள்வோம்.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்

இந்தியாவில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டமானது 1986 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி அன்று அமுலுக்கு வந்தது. நாம் வாங்கிய பொருளில் குறை அல்லது சேவையில் குறைபாடு இருந்தால் நுகர்வோர் நீதிமன்றத்தை நாட முடியும். நீதிமன்றங்களில் நுகர்வோர் புகார் செய்வதால் தாம் இழந்த நஷ்டத்தை அபராதத்துடன் பெற முடியும்.

நுகர்வோர் எப்போது புகார் செய்யலாம்

ஒரு நுகர்வோருக்கு ஒரு வியாபாரி கடைபிடித்த தவறான வர்த்தக நடவடிக்கைகளின் போது, நுகர்வோர்கள் பெற்றுக் கொண்ட சேவைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால்,

நடைமுறை சட்டத்தினால் விதிக்கப்பட்ட விலையை விட அதிகமான விலையை வர்த்தகர்கள் நுகர்வோரிடம் அறவிடும் போது, ஆபத்து விளைவிக்கக் கூடிய வகையிலான பொருட்களை நடைமுறை சட்டத்தினையும் மீறி விற்பனை செய்யும் சந்தர்ப்பங்களில் எல்லாம் வர்த்தகர்களுக்கு எதிராக நுகர்வோர் புகார் செய்ய முடியும்.

நுகர்வோர் உரிமை

நுகர்வோர் பொருட்களையும், சேவைகளையும் நுகரும்போது அவர்களுக்கு உள்ள உரிமைகளே நுகர்வோர் உரிமைகள்(Consumer rights) எனப்படுகிறது. காலத்திற்கு காலம் பல்வேறுபட்ட வகைகளில் நுகர்வோர் உரிமைகள் வகைப்படுத்தப்படுகிறது.

நுகர்வோர் உரிமைகளாக வாங்கும் பொருட்களை தாமே தெரிவு செய்து கொள்ளல், உயிருக்கும் ஆரோக்கியத்திற்கும் ஆபத்தை உண்டு பண்ணக்கூடிய பொருட்களை நுகர்வதில் இருந்து பாதுகாப்பு பெறல்,

பொருட்களின் விலை, தரம், நிறை என்னும் தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை, அடிப்படை தேவைகளை நிறைவு செய்யும் உரிமை, நட்ட ஈட்டினை பெற்றுக்கொள்ளும் உரிமை, சூழல் பாதுகாப்பினை பெற்றுக்கொள்ளும் உரிமை எனும் பல உரிமைகள் காணப்படுகிறது.

நுகர்வோருக்கான உரிமையின் முக்கியத்துவம்

நுகர்வோர்களுக்காக தனியாக காணப்படுகின்ற உரிமைகளின் முக்கியத்துவம் ஏனெனில், நுகர்வோர் பொருட்கள் மற்றும் சேவைகள் என்பவற்றை நிர்ணயிக்கப்பட்ட விலையினுடாகவே நுகர்வு செய்கின்றனர் என்ற திருப்திக்காகவும்,

நுகர்வோர் திட்டமிட்டு பொருட்களை கொள்வனவு செய்வதை ஊக்குவிப்பதற்காகவும், போட்டியான சூழலில் இருந்து நுகர்வோர்கள் பாதுகாப்பு பெறுவதல் மற்றும் நுகர்வோரது உடல் உளநலம் பாதிப்பு அடையாதவாறு திருப்தி அளிக்கப்படுதலுக்காகவுமே ஆகும்.

முடிவுரை

நுகர்வோர்கள் தமக்குரிய உரிமைகளையும் கடமைகளையும் சரிவர அறிந்து ஆரோக்கியமற்ற பொருட்களை நுகராது, நஷ்டங்கள் அடையாது செயல்படுதல் வேண்டும்.

மற்றும் தகுதியற்ற பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீதும் அதிக விலையில் விற்பனை செய்பவர்கள் மீதும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் புகார் செய்தல் வேண்டும்.

You May Also Like:

நடையின் பங்கு பயனும் கட்டுரை

மரம் வளர்ப்போம் பயன் பெறுவோம் கட்டுரை