இறைவனால் படைக்கப்பட்ட இந்த அரிய உலகத்தின் மிக முக்கியமான ஒரு வளமாக நீர் வளம் காணப்படுகிறது.
நீரின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- நீரின் சிறப்பு
- நீரின் முக்கியத்துவம்
- நீர் மாசடைதல்
- முடிவுரை
முன்னுரை
நீர் என்பது மனிதனுடைய வாழ்விற்கான மிக முக்கியமான மூலாதாரமாக காணப்படுகிறது ஒரு மனிதனால் உணவின்றி சில நாட்கள் வாழ முடியும். ஆனால் நீரின்றி அதிகபட்சம் மூன்று நாட்கள் மாத்திரமே வாழ இயலும்.
நீர் என்பது மனிதனுக்கு மாத்திரமல்ல. இந்த இயற்கை சூழலில் காணப்படுகின்ற தாவரங்கள், விலங்குகள் அனைத்தினதும் செயல்பாட்டிற்கும் இது முக்கியமான ஒன்றாக காணப்படுகிறது.
நீரின் சிறப்பு
இந்த பூமியானது நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு, நீர் ஆகிய பஞ்சபூதங்களால் உருவாகியது. நீர் எமது உலகில் நாங்கள் மூன்று பங்கு காணப்படுகிறது.
அதாவது நீரானது 71% பரவி காணப்படுகிறது. இதில் 97.5 சதவீதம் உப்பு நீர் ஆகும். மீதி 2.5சதவீதமே நன்னீராகவும் அதில் பனிப்பாறைகளாக காணப்படுகின்றன. இவை போக மீதம் 0.26 சதவீதம் நன்னீர் பரப்பாகும். இவையே விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
“நீரின்றி அமையாது உலகு” என்பது சான்றோர் கருத்து ஆகும். இக்கூற்றானது நீர் ஆனது இவ்வுலகத்தின் மிக அடிப்படையானது, அனைத்து ஜீவராசிகளின் நிலைத்திருப்பிற்கும் நீர் இன்றியமையாத ஒன்றாக காணப்படுகிறது. இந்த நீரின்றி இந்த உலகம் என்பது அமையாது என நீரின் சிறப்பினை விவரிக்கிறது.
நீரின் முக்கியத்துவம்
நீர் குடிப்பதற்கு மாத்திரமின்றி குளிப்பதற்கும், துணிகள் துவைப்பதற்கும், பாத்திரம் கழுவுவதற்கும் பல்வேறு வகையில் நீர் உதவுகின்றது.
உலகிற்கு உணவளிக்கும் விவசாய நிலங்களின் பயன்பாட்டுக்கு நீர் இன்றி அமையாதது ஆகும். அதற்கு அவனுக்கு ஒரு நாளைக்கு மாத்திரம் 20 லீட்டர் தொடக்கம் 30 லிட்டர் நீர் அத்தியாவசியமான தேவையாக காணப்படுகிறது.
அது மட்டுமன்றி எமது உடலில் சுமார் 75% உம் நீராகவே காணப்படுவதால் உணவுச் சமிபாடு, உடல் வெப்ப நிலை சீராகப் பேணல், தேவையான உறுப்புக்களுக்கு குருதியை கொண்டு செல்லல், வியர்வை, சிறு நீர் மூலம் கழிவுகளை வெளியேற்றல், மூளையின் சிறப்பான செயற்பாடு என்பவற்றிக்கு நீர் இன்றியமையாததாக காணப்படுகின்றது.
மனித வாழ்க்கையை போன்று ஏனைய ஜீவராசிகளின் நினைத்திருப்பதற்கும் நீர் என்பது அவசியமானதாக காணப்படுகிறது. மேலும் நீர்வழிப் போக்குவரத்து மீன்பிடி மற்றும் அது சார்ந்த தொழில்களுக்கு, மின்சார சக்தி உருவாக்குவதற்கும் நீர் முக்கியமானதாகும்.
நீர் மாசடைதல்
உலகினது மூலசக்தியாக அமையும் நீரானது மனிதனுடைய பல்வேறு செயல்பாடுகளின் காரணமாக மாசடைகிறது.
அதாவது தொழிற்சாலை மற்றும் நகர கழிவுகளை நீர் நிலைகள் மேல் சுழற்சி செயற்பாட்டிற்கு உட்படுத்தாமல் சேர்த்தல், விவசாய நடவடிக்கைகளின் போது பயன்படுத்தப்படுகின்ற சேதனப் பொருட்கள்
மற்றும் கழிவு பொருட்கள் என்பன நீர்நிலைகளில் சேர்தல், வைத்தியசாலை கழிவுகள் நீர்நிலைகளில் சேர்தல், அணு ஆயுத பரிசோதனை, கடலில் எண்ணெய் கப்பல்கள் விபத்துக்குள்ளாதல் போன்ற பல செயற்பாடுகளை குறிப்பிடலாம்.
முடிவுரை
இத்தனை சிறப்புகள், முக்கியத்துவம் வாய்ந்த நீர்வளத்தினை சரியான முறையில் பேணி பாதுகாத்து அடுத்த சந்ததியினருக்கு வழங்குவது எம்மவர் அனைவரினதும் முக்கிய கடமையாகும்.
ஏனெனில் 2050 ஆம் ஆண்டு சுத்தமான நீருக்கு பற்றாக்குறை ஏற்படலாம் மற்றும் இதன் காரணமாக உலகப்போர் ஏற்படவும் வாய்ப்புள்ளது என எதிர்வு கூறப்படுகின்றது.
இவற்றை தடுப்பதற்காக வேண்டி நீரை மாசடைவதில் இருந்தும், வீண்விரயத்தில் இருந்தும் பாதுகாப்பாக பேண வேண்டிய கடட்பாடு காணப்படுகிறது.
You May Also Like: